மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் M.sc, MD(Hom), Ph.D.
நமது உடலின் அதிவேகமான எதிர் உணர்ச்சிகளில் ஒன்றுதான் கோபம்.
“கோபம் கட்டுப்பட்டு விட்டாலே மனிதன் அரைஞானி ஆகிவிடுகிறான்”.
“சிரிப்பினால் சாதிக்கும் ஆயிரம் விசயங்கள் கூட சிந்தனையற்ற ஒரு துளி கோபத்தால் சிதைந்து விடுகின்றது”.
ஆம்… மனிதன் பல்வேறு விசயங்களுக்காக உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வாறு படும் எல்லா உணர்ச்சிகளிலும் மிகமிக மோசமானது கோபம் மட்டுமே…
நமது மூளையில் பனி ரெண்டு முக்கிய இணை நரம்புகள் உள்ளன. இந்த பனிரெண்டு இணை நரம்புகளையும் தமிழர் வர்ம மருத்துவம் கலைநரம்புகள் என்று அழைக்கிறது…
இதில் ஒன்றாவது நரம்பாகிய முகர் நரம்புகளும் ((factory nerves), (Optic nerves) இரண்டாவது நரம்பாகிய பார்வைநரம்புகளும் (Auditory nerves) எட்டாவது நரம்பாகிய கேள்வி நரம்புகளும் (Auditory nerves) மட்டுமே தனி உணர்ச்சி நரம்புகள். அதேநேரம் கட்டளை நரம்பிழைகளும் (Motor fibres) உணர்ச்சி நரம்பிழைகளும் (Sensory fibres) இணைந்து ஐந்தாவது நரம்பான மும்முளை அல்லது முக்கிளை (Trigeminal nerve) நரம்புகளும், ஏழாவது நரம்பான முக நரம்புகளும் (Facid nerves) ஒன்பதாவது நரம்பான நாக்கு, தொண்டை நரம்புகளும் (Glossopharyngeal nerves) பத்தாவது நரம்பான வேகஸ் (Vagus) நரம்புகளும், பதினொன் றாவது நரம்புகளான துணை நரம்புகளும் (Accessory nerves) ஆக ஐந்து இணை நரம்பிணைகள் உள்ளன.
இதுபோலவே தனி கட்டளை நரம்புகளாக மூன்றாவது நரம்பாகிய கண்தசை நரம்புகளும் (Occulomotor nerves) நான்காவது நரம்பாகிய கண்தசை நரம்புகளும் (Troclear nerves) ஆறாவது நரம்பாகிய கண்தசை நரம்புகளும் (Abducent nerves) பனிரெண்டாவது நரம்பான நாக்கு நரம்புகளும் (Hypo glososal nerves) செயல்படுகின்றன.
இங்ஙனம் காணப்படும் பனிரெண்டு இணை நரம்புகளும் நேரடியாக மூளையில் சம்மந்தப்பட்டு செயலாற்றுகின்றன. இதுபோலவே தானாகவே இயங்கும் ஆற்றல் படைத்த மற்றொரு அதி அற்புதமான நரம்பியக்கமும் நம்முடலில் காணப்படுகின்றது. அதனை தானியங்கு நரம்பு மண்டலம் என்பர். இது நம் உணர்வுகளுக்கு ஏற்ப தானாகவே செயல்படக்கூடிய நரம்பிழைகளைக் கொண்டதாகும். முதுகெலும்புத்தொடரின் இருபக்கங்களிலும் சங்கிலித் தொடர் போல் தொடுத்துக் காணப்படும் என்றாலும் இரண்டு கீழ்முனைகளும் ஒன்றாக ஒரு நரம்பு செல்களோடு இணைந்தே காணப்படும். இதனை பரிவு நரம்புமண்டலம் என்பர்.
இந்த நரம்புமண்டலத்தின் செயல்பாடுகளுக்கேற்ப அதன் நரம்பு செல்கள் அசிட்டைல் கொலின் (Acetyl choline) மற்றும் நார் அட்ரீனலின் (Nor adrenaline) என்ற இரண்டு விதமான வேதிப் பொருட்களை உருவாக்கு கின்றன.
இந்த வேதிப்பொருட்களின் செயல் மாற்றங்களால் இந்நரம்பு மண்டலமானது குடல் அசைவை குறைப்பது, கண் மணிகளை விரிவடையச் செய்வது, சுரப்பிகளின் சுரப்பு நீர்களை குறையச் செய்வது, இதயத்துடிப்பைப் பெருக்குவது, இரத்தக் குழாய்களை சுருக்குவது, மூச்சுக்குழாய்களை விரி வடையச் செய்வது, மூத்திரப்பை, மற்று பித்தப்பைகளை தொய்வடையச் செய்வது போன்ற பல பணிகளை நிகழ்த்தி விடுவதால் உணர்ச்சி பரிமாற்றங்களால் உடல் சின்னாபின்னமாகி சிக்கித் தவிப்பதைக் காணலாம்.
ஆனால் இயற்கையில் அதியற்புத படைப்பாக இதற்கு இணையான எதிர்பரிவு நரம்பு மண்டலம் ஒன்றும் நம் உடலில் அமைக்கப்படவில்லையெனில், அதிர்ச்சியான சம்பவங்கள் அல்லது நிகழ்ச்சிகள், திடீர் வெடி சத்தங்கள், இடி சத்தம், அதிகமான கோபம், மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள், சில ஒவ்வாமை நிலைகள், மருந்து ஒவ்வாமைகள் என பல நிகழ்வுகளிலும் நாம் கட்டுப் பாடிழந்து-சுயநிலையிழந்து விடுவதோடு நமது மரண விகிதங்களும், மயக்க விகிதங் களும் கூட மலை மேல் ஏறியிருக்கும்.
காரணம் பரிவு நரம்பு மண்டலம் ஆற்றும் ஒவ்வொரு செயல்களுக்கும் உடனடியாக தேவைப்படும் எதிர்விளைவு களை தூண்டி விட்டு உடலை சமநிலைக்கு கொண்டு வருவதே எதிர் பரிவு நரம்புமண்டலத்தின் வேலை யாகும்.
இதன் நரம்பிழைகள் நடுமூளை, மூளைத்தண்டுவடம், முகுளம் போன்ற இடங்களை மையமாகக் கொண்டு செயல்படு கின்றன.
இதன் மூளை நரம்புகளோ டிணைந்த நரம்பிழைகள் கண்தசை, உமிழ்நீர் சுரப்பி, கண்ணீர் சுரப்பி, கணைச்சுரப்பி, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், ஒட்டீரல், போன்ற வைகளோடும் இணைந்து காணப்படும். முதுகுத்தட்டின் கீழ் பலகை (Seccrum) எல்லோடிணைந்து காணப்படும் எதிர்பரிவு நரம்புமண்டல நரம்பிழைகள் மூத்திரப்பை, மூலம், குதம், ஆண்குறி மற்றும் கருக்குழல், கருப்பை, கருவகம் போன்றவைகளோடும் சம்மந்தப்பட்டு காணப்படும்.
நமக்கு கோபம் ஏற்படும் போது பரிவு நரம்புமண்டலம் அதிகமாக தூண்டி விடப்படு வதால் மூளையின் இயக்க வேகம் அதிகரித்து நரம்பு செல்களில் தோன்றும் வேதிப் பொருட்களின் உற்பத்தியும் அதிகமாகி விடுவதால் அதன் இயக்க கட்டுப்பாட்டிற்கு உட்படும் பகுதிகளும், உறுப்புகளும் அதிவேகமடைந்து விடுகின்றன.
உடல் சுரப்புகளில் மாற்றம், அதனால் நாவறட்சி, தாகம், வயிற்று அசைவுக்குறைவு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவைகள் ஏற்படுகின்றன. அதாவது,
பரிவு நரம்புமண்டலம் பாதிக்கப்படும்போது வாயில் சுரப்பு நீர்கள் குறைவடைவதால் நாவறட்ச்சி, தாகம், வியர்வை தோன்றி விடுகின்றன. ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுவதால் உடல் வெளிப்புறப் பகுதிக்கும், மூளைக்கும் போதிய அளவு ரத்தம் சென்று சேராததால் மூளை முழுமையான சிந்தனை சக்தியை இழந்து அரைகுறை நினைவாற்றலில் செயல்படும். அதனால் தான் செய்வது என்னவென்றோ, பேசுவது என்னவென்றோ தீர்மானிக்கும் நிலையினை இழந்து விடுகிறது. இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான இரத்தத்தினை செலுத்த முடியாமல் ஏங்கும் இதயம் சாதாரண நிலையை விட அதிகமாக துடிக்கவேண்டிய நிற்பந்தத்திற்கு ஆளாகி விடுவதால் படபடப்பு கூட ஏற்பட்டு விடுகிறது.
நரம்புமண்டல வேதிப் பொருட்களின் வெளிப்பாடு அதிகப்பட்டு அவைகளின் மோதல்கள் அதிகப்படுவதாலும் நினைவுக்குறைவு, உடல் நடுக்கம், நிதானமின்மை போன்றவைகள் ஏற்பட்டு விடுகின்றன.
இதேநேரம் எதிர் பரிவு நரம்புமண்டலம் அதிகமாக தூண்டப்படுவதால் அதன் வேதிப்பொருளாகிய அசிட்டைல் கொலின் (Acetyl choline) அதிகமாக சுரந்து விடுவதால் உடல் வெப்ப மடைகிறது. இரத்தக்குழாய்கள் விரிவடைந்து இரத்த அழுத்தமும் அதிகரிப்பதால் உடல் உஷ்ணமும் அதிகரித்து முகம் போன்ற பகுதிகள் சிவந்தும் காணப்படுகின்றன. மனம் தானாக சிந்திக்கும் நிதானத்தையும் நிறுத்தி விடுகிறது.
அட்ரீனலின் சுரப்பு அதிகப்படுவதால் உடல் நடுக்கம் அதிகரிப்பதோடு இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதனால் இரத்த நாளங்கள் மீண்டும் விரிவடைந்து இரத்த ஓட்ட அளவு வேறுபடுவதால் உடல் தசைகளின் இறுக்கம் அதிகரித்து விடுகிறது.
இதன் காரணமாக நாக்கு பேச முடியாமல் தழுதழுப்ப தோடு பேச்சு வராமல் இழுத்துக் கொள்ளப்படுகிறது. குரல்நாண் பாதிப்படைந்து குரல் மாறுபாடு அடைவதோடு உடல் நடுக்கமும், கழுத்து தசை இறுக்கமும் மீண்டும் அதிகரித்து விடுகின்றன. மனம் நிலை யிழந்து போதை ஏற்றப்பட்ட விலங்கினைப்போல் மாறி விடுகிறது…
இத்தகைய விளைவுகள் தான் நொடிப்பொழுதில் தோன்றும் மரணங்களுக்கும், கோடிக்கணக்கான பொருள் விரயங்களுக்கும், சுமூக உறவு களின் பிரிவுகளுக்கும் இன்னும் ஆயிரக்கணக்கான இழப்பு களுக்கும் காரணமாகி விடுகிறது.
இத்தகைய கோபங்கள் ஏற்படுவதற்கு உண்மையான வெளிக்காரணங்கள் என்னென்ன வென்று உளவியலாளர்கள் ஆய்ந்துள்ளனர். அதன்படி,
அறியாமையும், அகம் பாவமும் தான் முதலிடத்தில் உள்ளன.
போதிய அறிவின்மை என்பது ஒருவனை ஒன்றின்மேல் வெளி தன்மை கொண்ட மனிதனாக்கி விடுகிறது.
ஒருவன் ஒரு மதம் அல்லது இனம் சார்ந்த, மொழி சார்ந்த, அரசியல் சார்ந்த கருத்துக்களை மட்டும் கேட்டுக்கேட்டு அதனை மட்டுமே சரியென பதிவு செய்து கொண்டிருக்க அதேக் கருத்துக்களால் மீண்டும் மீண்டும் வெறியூட்டப்படுவானாகில் பிற கருத்துக்களையோ, பிற உலகத்தையோ, பொதுவாக நின்று தனித்தனியே சிந்திக்கும் ஆற்றலையும் இழந்துவிடுகிறான். அதனால் அவன் கருத்துக்கு எதிரான எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்கு வமோ, பண்போ அவனிடம் காணப்படுவதில்லை… அனைத்தையும் இழந்து ஒரு பெரிய பள்ளத்தில் வாழும் மனிதன் ஆகிவிடுகிறான்.. இத்தகையோர் தமது கருத்துக்கு எதிரானவர்களை உள்ளத்தில் தங்கள் அறிவுக்கு உட்பட்டே எடைபோட்டு விடுவதால் தங்களுக்கு எதிரானவர்களாகவே கருதிவிடுகின்றனர்.
இத்தகைய சிந்தனை வாதிகளின் சீரற்ற சிந்தனைகளால் உருவாவதே மதக்கல வரங்கள், இனக்கலவரங்கள், மொழிக் கலவரங்கள் போன்ற கோபாவேச அழிவுகள்.
பரம்பரைத் தன்மைகளாலும், செல்வ செருக்காலும், சூழ்நிலை காரணமாகவும், திடீர் வளர்ச்சிகளாலும், பதவிகள் காரணமாகவும் மனிதனுக்கு ஏற்படும் அகம்பாவங்கள் பிறரிலிருந்து தன்னை உயர்வாக எண்ணிக்கொள்வதால் தனக்கு ஏற்படும் சிறுதுளி கவுரவக் குறைவைக் கூட ஏற்றுக் கொள்ளும் அறியாமையை உண்டு பண்ணி விடுவதாலும் கோபாவேச அழிவுகளை ஏற்படுத்துவதோடு, சதித் திட்டங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் போன்றவைகளை அரங்கேற்றி விடுகின்றன.
மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் கோபத்தை வெளியே காட்ட முடியாமல் அடக்கி விடுவர். பலர் அங்ஙனம் அடக்குவதால் மனநோயாளி களாகவும் மாறிவிடுவர். பெரும்பாலும் மேலதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.
அதிகார வர்க்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னைவிட உயர்ந்த பலசாலி களால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக இழித்தொழிலாகிய கூலிப்படை களால் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் இந்த சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
பொதுவாக கோபத்தை இருவகையாகக் கூறுவர்.
நேர்மறைக் கோபம்
நன்மை விளையும் பொருட்டு உரிமையுள்ளவர் கொள்ளும் கோபமே நேர் மறைக்கோபம்.
எதிர்மறைக்கோபம்
வெறித்தனமான செயல் பாடுகளுடன் கூடிய கோபங்கள் அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தது.
கோபத்தை எவ்வாறு அடக்குவது?
Leave a Reply