சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்

  • By Magazine
  • |

SAVKIA -வின் 295-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.01.2026 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்தில் திரு. இராஜன் ஆசான் அமுக்கூரா சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக மரு.கமலக்கண்ணன் அலர்ஜிக்கு எளிய கசாயம் செய்முறையையும், கருப்பை நோய்கள், சதையடைப்பு, சூதகக்கட்டு இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையையும், மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன் மாற சூரணம் செய்முறையையும் கூறினார்.

அடுத்ததாக திரு.கே. செல்வநாதன் ஆசான் சர்வ சுர கஷாயம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.

அடுத்ததாக திரு.சுப்பிரமணியம் பெரும்பாடு குணமாக எளிய மருந்தினையும், 80-வகை வாதம், சிகப்பு, பித்தம், கபம் குணமாக சண்முக சாரம் எனும் மருந்து செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

திரு.அருள்தாஸ் ஆசான் துருசு, சுண்ணம் செய்முறையையும், நரம்பு சார்ந்த நோய்களுக்கு பூநாக தைலம் செய்முறை, தீராத இரத்தப்போக்கு மாற எளிய கஷாயம் செய்முறையையும் கூறினார்.

அடுத்ததாக திரு.கருணாநிதி ஆசான் சிறுநீரகக்கல் கரைய எளிய மருந்தினை கூறினார்.

திரு.ஜெபமணி ஆசான் பிரமேகம், கிரிச்சனம், குன்மம், சொறி குஷ்டம், காமாலை, நாக்கு உளறல்  இவற்றக்கு கல்யாணி குழம்பு செய்முறையை கூறினார்.

திரு.ஸ்டீபன் ஆசான் நீரிழிவு நோயாளிக்கு கால் கறுத்துப் போதல் மாறவும், வராமல் தடுக்கவும் எளிய மருந்துமுறையைக் கூறினார்.

திரு.ஸ்பிரிங்கிள் ஜெயராஜ் உயிர் பற்றிய சிந்தனை வினாவுக்கான விளக்கங்களை குறித்துப் பேசினார்.

அடுத்ததாக மூலச்சல்  மருத்துவர் த.இராஜேந்திரன் விஷம் உண்டவருக்கு விசத்தை முறிக்க உதவும் எளிய மருந்தினையும், மருந்துகளின் பக்கவிளைவு மாற எளிய மருந்தினையும், வறட்டு இருமலுக்கு மருந்தினையும், வர்ம சுமை குணமாக மருந்தினையும், ஜலதோஷம், தலைநீர், பீனிசம் இவற்றுக்கு மருந்தினையும், சர்வ வாதம், ஜன்னி, மூட்டுவலிக்கு மருந்து செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.

கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *