தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.  […]
Read More
ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பெருத்த அளவில் தமிழில் வடமொழிச் சொற்கள் புகுந்தன. வடமொழியின் கலப்பு தமிழ்ப் பாடல்களில் மட்டுமன்றி உரைநடையிலும் புகுந்தது. மணிப்பிரவாளம் எனும் இந்தக் கலப்புத் தமிழும் பெருகி ஒரு கட்டத்தில் வடமொழி இன்றேல் தமிழில்லை என்று சுவாமிநாத தேசிகர் போன்ற வடமொழி வாணர்கள் பேசத் தொடங்கினர். தமிழுக்கு ஏற்பட்ட இத்தகைய இழிதகவு கண்ட மறைமலையார் தனித்தமிழ் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
தாங்கிடத் தண்ணீர் இருந்தால் தான் தாமரையும் ஓங்கிடக் கதிர் வாங்கி மலரும்.. தடுக்கிடத் தடைகள் இருந்தால் தான் முடிந்திடும் வெற்றியும் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தெரியும்.. தாங்கவும் சிலர்.. தடுக்கவும் பலர்.. வாழ்வின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும் ?? கமல. அருள் குமார்
Read More
  • By Magazine
  • |
நா.சுயம்பு வலிந்து வருவது புன்னகை அல்ல; உன்னுள் வழிந்து வருவதே புன்னகை! கனிந்து ஊற்றெடுக்கும் கனியின் சாறு போல் உவந்து ஊற்று எடுப்பதே உள்ளத்தின் புன்னகை! மழையாய் பொழிவதுவானத்தின் புன்னகை; தென்றலாய் வீசுவது காற்றின் புன்னகை! அமுதமாய் இனிப்பது அம்மாவின் புன்னகை ; அறியாமை விலக்குவது ஆசிரியர் புன்னகை! வெற்றியில் குளிப்பது வீரத்தின் புன்னகை ; வியர்வையில் குளிப்பது உழைப்பின் புன்னகை! மொழியில் மலர்வது கவிதையின் புன்னகை; விழியில் மலர்வது காதலின் புன்னகை! கடிகாரம் காட்டுவது காலத்தின் […]
Read More
“கவிதை உறவு”(கவியரங்கக் கவிதை)
  • By Magazine
  • |
குமரி எழிலன் மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மை மிக்கோரே… விதைதான் உறவாக பூமியை துளைப்பதற்கு வேர்தான் உருவாக காரணம் நீர்தானே.. தைமகள் தவழ்ந்துவர துணையாய் நின்றது மார்கழிமாதத்து பனிமழை நீர் தானே. அய்யன் வள்ளுவனைபாப் பாடிப் பரவுதற்கு பையன் வருகை தந்தேன்… ஈராயிரமாண்டு இளைய மெய்யன் வருகை தந்தேன்.. அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் வள்ளுவத்தைபாடவந்தேன்.. ஊர்கூடி வள்ளுவநார்க்கு எடுக்கின்ற விழாவிலே ஓர்பாட்டுப் பாடவந்தேன்… திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பிலே சிறுகவிதை படிக்க வந்தேன்.. அரசியல் பிழைத்தாற்கு அறம் […]
Read More
விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. கமலேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பேரூராட்சித் துணைத் தலைவர் ஞானஜெபின் மற்றும் கவுன்சிலர்கள் கிரிஜா, பவித்ரா, விஜயலெட்சுமி, ஜேக்கப் ஜெயராஜ், சதீஸ்ணகுமாரி, சுதாபாய், கவிதா, நியமன உறுப்பினர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவீன வசதிகளுடன் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவியல், மதக் கோட்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல்வேறு அறிவாளிகளை பலிகொடுத்துள்ள கொடுங்கதைகள் மேற்கத்திய வரலாற்றில் உண்டு. அவ்வாறு பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் தாண்டி முன்னேறிய அறிவியல் தளம் மேற்கத்திய நாட்டிலிருந்து தொடங்கியதால் அந்த வழி மரபினர்களும் – அவ்வழி மரபினர் சொல்லாட்சிகளுமே இன்றுவரை அறிவியல் உலகின் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், அறிவுத்திறனும், ஆற்றலும் படைத்த கிழக்கத்திய சமூக நாகரீகம் சமயப் பிடிப்புகளிலிருந்து தன்னை பிரித்தறிய முடியாமல் இருந்ததாலும், […]
Read More
பேப்பர் குருவி
  • By Magazine
  • |
– அன்பாதவன் காலம் பல ஆண்டுகளைத் தாண்டி  விட்டது. தேவராஜ் இப்போது வளர்ந்த பெரியவன்.  அம்மா இல்லை; அம்மாவின் புகைப்படம் மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டிருந்தது. காலம் அவளை மெல்ல அழைத்துச் சென்றது. அவனும்  நகரங்கள்  பல மாறி வேலையிலும் வாழ்க்கையிலும் மூழ்கியிருந்தான். ஆனால் சில இரவுகளில், வானம் வெளுக்காமல் நிற்கும் பொழுதுகளில், அவனுக்குள் அந்த பனந்தோப்பின் காட்சி உயிர்த்தெழும் – சிட்டுக்குருவியின் சத்தம், “விர்” என்ற கல்லின் ஓசை, ராமலிங்கத்தின் அழுகை, விஜயனின் அலறல். அந்த நினைவுகள் அவனைக் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
இலக்கியங்கள் என்பவை சமூகத்தின் கண்ணாடி மட்டுமல்ல, அவை சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு கருவியும் கூட. அந்த வகையில், முனைவர் செந்துறை சி. தங்கராசு அவர்கள் படைத்துள்ள ‘மங்கள நாட்டு மாணிக்கங்கள்’ நாவல், இன்றைய உலகளாவிய சமூகக் குழப்பங்களுக்குத் தீர்வாக ஒரு சிறந்த ஜனநாயகக் கட்டமைப்பை முன்மொழிகிறது. ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும், அங்கு நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிக நுட்பமாக விவரிக்கும் இந்த நாவல், ஒரு கற்பனை நாட்டின் […]
Read More
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச சூட்டில் இலைகளின் நிறம், மணம், ருசி மாறாமல் கிரீன் டீ எனப்படும் பசும் தேயிலை தயாரிக்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் பச்சைத் தேயிலை போட்டு பால் சேர்க்காமல் பற்களில் சிறிது சிறிதாகப் படும்படி அருந்த வேண்டும். சுக்கு, பட்டை, மிளகு, ஏலம், கிராம்பு, துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், […]
Read More