குமரி எழிலன்
மேடையில் அமர்ந்திருக்கும்
மேன்மை மிக்கோரே…
விதைதான் உறவாக பூமியை துளைப்பதற்கு
வேர்தான் உருவாக காரணம் நீர்தானே..
தைமகள் தவழ்ந்துவர துணையாய் நின்றது
மார்கழிமாதத்து பனிமழை நீர் தானே.
அய்யன் வள்ளுவனைபாப் பாடிப் பரவுதற்கு
பையன் வருகை தந்தேன்…
ஈராயிரமாண்டு இளைய
மெய்யன் வருகை தந்தேன்..
அகரத்தில் தொடங்கி னகரத்தில்
முடியும் வள்ளுவத்தைபாடவந்தேன்..
ஊர்கூடி வள்ளுவநார்க்கு எடுக்கின்ற விழாவிலே
ஓர்பாட்டுப் பாடவந்தேன்…
திருக்குறளில் அரசியல்
என்னும் தலைப்பிலே
சிறுகவிதை படிக்க வந்தேன்..
அரசியல் பிழைத்தாற்கு அறம் கூற்றாகுமென
அரசிளம்துறவி சொன்னான்…
குடிகாத்து ஒம்பும் முடியாட்சி
குறித்து
அடி இரண்டில் அய்யன்
சொன்னான்….
மடிஇன்மை மன்னவர்க்கு வேண்டும் என்பதை
மடியிருத்தி புத்தி சொன்னான்….
கடிமதில் அரண் காக்கும் காவலன்
புகழ்தனை
முடிமீது வைத்து சொன்னான்..
கடிதோச்சி மெல்ல. எறிந்தே
மக்களிடம் வரி பிரிக்க
முடியும் என்றான்..
அகரம் முதல் நகரம் வரை சொன்ன குரல்
அக்ரஹாரம் முதல் கிராமம் வரை கேட்கவில்லை..
வகுப்பறக்குள்ளேயே பதுங்கிக் கிடந்தவள்ளுவத்தை உலகுக்கு தந்த அரசியலார்க்கு நன்றி.
கடவுள் வாழ்த்திலே அறத்துப்பால் தொடங்கினாலும்…..
இறைமாட்சியாம் அரசியலில் தான் பொருட்பால் தொடங்குகிறது.
உடலரசியல்
உள்ள அரசியல்
உலக அரசியல்
கடவுள் அரசியல்.
பசியரசியல்…
பொருளாதார அரசியல்..
கல்வி கேள்வி அரசியல்
என்று பலவுண்டு.
சிற்றினம் சேராமல்..
தெரிந்து செயல் வகை செய்தால்
இதனை இதனால் இவன் முடிக்கும்
வலி அரசியல்..
காகம் கூகையை பகல் வெல்லுதல்
கால அரசியல் ..
நீர்முதலை கரைக்குவந்தால் வெல்லுமா.
இட அரசியல்.
செங்கோன்மைஎன்பது
கொடுங்கோன்மை செய்யாமல்
வரி பிரித்தல்…
வெள்ளம் அளவு மலர்… உள்ளம் அளவு உயர்வு …
ஊக்கமுடமை
???????????????????
மடியின்மை.
ஆள்வினை உடமை
முயற்சி யுடமை….
இடுக்கண் வருகையில் கண்கள் இடுங்கிட சிரியுங்கள்.. என்பான்
வள்ளுவன்.
கூறும் அரசியல் கூறுகள்.. விரிப்பின் விஞ்சும் என்பதால்
சுருக்கமாய் முடித்திடுவேன்…
நன்றி
வணக்கம்.
Leave a Reply