கவிதை
- By Magazine
- |
-
தாங்கிடத் தண்ணீர்
இருந்தால் தான் தாமரையும்
ஓங்கிடக் கதிர் வாங்கி மலரும்..
தடுக்கிடத் தடைகள்
இருந்தால் தான்
முடிந்திடும் வெற்றியும்
முயற்சிக்கு கிடைத்த
பரிசாகத் தெரியும்..
தாங்கவும் சிலர்..
தடுக்கவும் பலர்..
வாழ்வின் வெற்றிக்கு
வேறென்ன வேண்டும் ??
கமல. அருள் குமார்
Leave a Reply