கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்

கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்

  • By Magazine
  • |

கஸ்தூரிபா ஜாண்ஸன்

கிரீன் டீ

தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச சூட்டில் இலைகளின் நிறம், மணம், ருசி மாறாமல் கிரீன் டீ எனப்படும் பசும் தேயிலை தயாரிக்கப்படுகிறது.

கொதிக்கும் நீரில் பச்சைத் தேயிலை போட்டு பால் சேர்க்காமல் பற்களில் சிறிது சிறிதாகப் படும்படி அருந்த வேண்டும்.

சுக்கு, பட்டை, மிளகு, ஏலம், கிராம்பு, துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், எலுமிச்சைப் புல், செம்பருத்திப் பூக்கள், ஆப்பிள் பழத்தோல், வேர்கடலையின் சிவப்பு நிறத்தோல் இவற்றுள் பல்வேறு விதமான சத்துப் பொருட்கள் அடங்கியுள்ளதால், மேற்கூறிய பொருட்களில் ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தலாம். இதயநோய், பக்கவாதத்தை தடுத்து பலமும், சக்தியும் தந்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்

நாம் உண்ணும் உணவில் நச்சு முறிவுக் காரணிகள் எனப்படும்    (Anti oxidants) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது நமது மூளையை சுறுசுறுப்பாக்கி, ஞாபக சக்தியையும், ஆரோக்கியத்தையும், இளமைத் தன்மையையும் தருகிறது. வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் நச்சுப் பொருட்களை தடுத்து, செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து செல்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. (Free Radicals) எனப்படும் நச்சுப் பொருட்களால் உண்டாகும் தோல் சுருக்கம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants) எனப்படும் நச்சு முறிவுக் காரணிகள் தடுக்கின்றன.

வைட்டமின்களில் C யும், E யும், தாது உப்புகளும் சிறந்த நச்சுக்கொல்லி காரணிகளாகத் திகழ்கின்றன. இரத்த ஓட்டத்தை சீராக ஆக்குகின்றன. நம் உடலில் அதிக நச்சுப் பொருட்கள் காணப்படும் போது இயற்கை நச்சுக் கொல்லிகளான பளவனாய்ட்ஸ் போன்றவை, கார்போஹட்ரேட், புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றுடன் கலந்து தான் செயலாற்ற முடியும். மேற்கூறிய மூன்று சத்துப் பொருட்களும் உடலில் இல்லாத போது இந்த நச்சுக்கொல்லிகள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் செயலற்றவை ஆகி விடுகின்றன.

ஆனால் கிரீன் டீயில் உள்ள நச்சுமுறிவுக் காரணிகள் Free Radicals எனப்படும் நச்சுப் பொருட்களை எதிர்த்து நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெருக்குகின்றன.

ஆப்பிள், ஆரஞ்சு, கருந்திராட்சை, மாம்பழம், தர்பூசணி, திராட்சை ரசம், பப்பாளி, அன்னாசி போன்ற பழ வகைகளிலும், ஓட்ஸ், சோயாபீன்ஸ், பீட்ரூட், லெட்டூஸ், காலிப்பிளவர், முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய்,  உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், சோளம், நெல்லிக்கா£ய், முள்ளங்கி, தக்காளி, மீன், பொரிகடலை, நிலக்கடலை, காரட், தேன், சர்க்கரை, உணவுக்காளான், சாக்லெட் போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் நச்சுமுறிவுக் காரணிகள் அதிகம் அடங்கியுள்ளன. சமைத்த கேரட்டில் பீட்டா கரோட்டின் ஃபொலோனிக் அமிலம் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. தேனீக்களால் சேகரிக்கப்படும் தேனிலும் மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. நாம் பசிக்கும் போது பயன்படுத்தும் விதமாக காய்களையும், கனிகளையும் கண்கவர் வண்ணங்களில் இறைவன் படைத்துள்ளான். இவை எல்லாவற்றையும் விட கிரீன் டீயில் நரம்பு மணடலத்தின் செயலை ஊக்குவிக்கும் தாது உப்புகள், வைட்டமின்கள், நோய் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக மிக சேர்ந்துள்ளன. எனவே உலகிலேயே தலைசிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் என கிரீன் டீ கருதப்படுகிறது. ஒரு குவளை கிரீன் டீ அருந்துவது பத்து குவளை ஆப்பிள் ரசம் குடிப்பதற்கு சமமாகும். எனவே அனைவரும் கிரீன் டீ அருந்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *