• By Magazine
  • |
க.மதிவாணன் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது இல்வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பொருளாதாரம் மேன்மை அடையும் போது இல்வாழ்க்கையும் மேம்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலாவால் தான் பூமிக்கு பெருமை. அதுபோல பொருளாதாரத்தால் தான் இல்வாழ்க்கைக்கு பெருமை கிடைக்கும் பொருளாதாரமே நாட்டையும் வீட்டையும் வளப்படுத்தும். பணம் கையில் இல்லாத போது மனிதனின் சூழ்நிலை என்பது கடும் வெயிலில் காலணிகள் அணியாமல் நிற்பது போல பொருளாதாரம் வளர்ச்சியை எட்டும் போது, அவ்வீட்டில் மனக்கவலை, வறுமை, பூசல்கள் எதுவுமே இருக்காது. […]
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
உள்ளுணர்வு வேர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ மாசேதுங் சிறுவனாக இருந்த போது அவருடைய தாயார் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவருடைய தாயார் தோட்டத்தில் பூத்த மலர்களைப் போல அழகான மலர் வேறு யார் தோட்டத்திலும் இல்லை. அவர் அந்தப் பூக்களை மிகுந்த நேசத்தோடு வளர்த்தார். அவருடைய அன்பினால் அந்த பூக்கள் தனித்தன்மையான பரிசைப் பெற்று தந்தன. மாசேதுங் இன்னும் குழந்தையாக இருந்தபோது, அவர் தாயார் நோய்வாய்ப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய நோயைப் பற்றியோ அல்லது அவரை நெருங்கிக் […]
Read More
வசூல் வேட்டை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… விதைக்காமல் அறுவடை இதுதான் இந்நாட்களின் மகத்தான வித்தை மந்திரம் தந்திரம் எதுவுமில்லை… மறுதலிக்காமல் நடத்தப்படும் வசூல் வேட்டைக்கு வயது வித்தியாசம் இல்லாத… விளைச்சல்.
Read More
புல்லன்குழி செம்முதல் அபூபக்கர் ஆசான்
  • By Magazine
  • |
பண்டை சேரநாட்டின் தெற்குபகுதியில் ஆய்நாடாகவும், வேணாடாகவும் வரலாறு கண்ட தற்போதைய குமரிமண்ணானது , குறிப்பாக குமரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள், தமிழரின் உயரிய கலைகளிலொன்றான வர்மக் கலையின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக போரில் தங்களைப் பாதுகாக்கவும், எதிரியை முடக்கவும் இதைப் பயன்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை குணப்படுத்தவும் இதே அறிவு பயன்பட்டது. இதனால் போரும் மருத்துவமும் இணைந்த ஒரு தனித்துவ மரபு இங்கு உருவானது. இந்த உடல்-மனம்-திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு பெரிய சிந்தனைத் தளம் ஆயகலைகள் […]
Read More
கல்வியின் வரலாறும் வளர்ச்சியும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பிறப்பினாலும், வளர்ச்சியினாலும், தோற்றத்தினாலும் மனிதர் அனைவரும் ஒன்றே என்றாலும், தனி ஒருவன் கல்வி கற்று அறிவும் ஆற்றலும் பெற்று உயர்ந்து நிற்கும் போது, அவனை உலகம் மதித்துப் போற்றுகிறது. எனவே சமுதாயத்தில் ஒரு தனிமனிதனின் பெருமைக்கும், புகழுக்கும், அறிவுக்கும் கல்வி ஒரு தலையாய காரணம் ஆகும். அறவுடையோன்வழி அரசும் செல்லும் என்பது அசைக்க முடியாத உண்மை. கிறிஸ்துவத்துக்கு ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கி.மு 15- ஆம் நூற்றாண்டினை இந்திய வரலாற்றில் வேதகாலம் என்று குறிப்பிடுவர். […]
Read More
எங்கள் ஓட்டு…
  • By Magazine
  • |
மயூரி சித்தாராமன் எங்கள் ஓட்டு உங்களுக்கே….. ஆங்… ஞாபகம் வந்திட்டு… இப்ப நா வாக்காளரு…! அய்யா நா சொல்லியத கொஞ்சம் கேட்டுட்டு போங்கய்யா.. கட்சிய விட கட்சி மானம் கொடிகட்டிப் பறக்காமே ? அவிய தேர்தல் முடியிறவர சூடு சொரணைய வாடகைக்கு வுட்டுருக்காவளாம்…! அதோ பாருங்க ஒரு கட்சிக்க இனிசியலுக்கு அப்பன் பெயரா மகன்பெயராண்ணு ரெத்தத்தின் ரெத்தங்களுக்கு பாலூத்துயாவளாம்… அப்பப்பா… பருப்புக் கொழம்புக்குள்ள மீனை போட்டு சமச்சமாதி கூட்டணி தயார்… அய்யா.. அரசியல் பிரம்மாக்களே.. தேர்தல் வாக்குறுதி […]
Read More
வட்டக்கும்மி கொட்டுங்கடி கொட்டி ஆடுங்கடி பொங்கலிலே
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஊர்க்கிழவி தலைமையில் அம்மன் பாட்டுக்கு வட்டக்கும்மி கொட்டும் கோயில் முற்றம் காவேரிப் பொங்கும் கொள்ளிடத்து ஆற்றுக்குள்ளிருந்து கருங்காளைகளைக் கழுவித்துடைத்து வண்டிபூட்டி வரும் பூலான்தேவியின் அப்பா கோவில் சுற்றுச் சுவரில் ஏற்றியிருந்த திருவள்ளுவன் பார்க்க செவ்வந்திபூச் சடை பின்னிய இளையவள் குறும்புக்காரி காணும் பொங்கலில் குரவையிட்டு ஆடுகிறாள் ஆடுகிறாள் அவள் அம்மையும் பாட்டியும் அண்டைவீட்டு மாமியும் ஆடி துடியேறி மயங்கிச் சரியும் பெண்டிரின் மருங்கைப் பிடித்து தூக்கி நிறுத்தும் வீராங்கணை தொடை தட்டிச் சிரிக்கிறாள் […]
Read More
புதியதென்றல்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சுதந்திரப்போர்ப் புயலினிலே தியாகம் செய்தோர்                 சூழ்நிலையில் அமைதியினைச் செய்த நேரம் இதமான விடுதலையின் தென்றல் காற்று                 இந்தியமண் மீதினிலே வீசலாச்சு; முதன்முதலில் நறுமணத்தோ டிங்கே வீசி                 முற்றான இன்பத்தைத் தந்த தென்றல் எதனாலோ சிறிதுசிறிதாக மாறி                 இனியமணம் தனையிழந்து வீசு தின்று! மதசாதி இனபேதம் கலந்தாலோ                 மனிதமெனும் நேயம்தான் குறைவதாலோ சதகோடி நிதிசிலரும் குவிப்ப தாலோ                 சாக்கடையாய் அரசியலும் ஆனதாலோ வதம் செய்யும் வன்முறைகள் நிறைந்தாலோ […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்    பி. விஜயகுமார் முதல் மனைவி இறந்து போயிருந்தாலும் இரண்டாவது மனைவிக்கு கணவரின் ஓய்வூதியம் வராது தற்சமயம் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இது. கணவர் அரசு ஊழியர். அவருக்கு முதல் மனைவி இருந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் கணவர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். திடீரென கணவர் இறந்து போகிறார். இப்போது கணவரின் ஓய்வூதியம் பெறுவது சம்மந்தமாக முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் […]
Read More