மயூரி சித்தாராமன்
எங்கள் ஓட்டு உங்களுக்கே…..
ஆங்…
ஞாபகம் வந்திட்டு…
இப்ப நா வாக்காளரு…!
அய்யா
நா சொல்லியத கொஞ்சம்
கேட்டுட்டு போங்கய்யா..
கட்சிய விட கட்சி மானம்
கொடிகட்டிப் பறக்காமே ?
அவிய
தேர்தல் முடியிறவர
சூடு சொரணைய
வாடகைக்கு
வுட்டுருக்காவளாம்…!
அதோ பாருங்க
ஒரு கட்சிக்க இனிசியலுக்கு
அப்பன் பெயரா
மகன்பெயராண்ணு
ரெத்தத்தின் ரெத்தங்களுக்கு
பாலூத்துயாவளாம்…
அப்பப்பா…
பருப்புக் கொழம்புக்குள்ள
மீனை போட்டு சமச்சமாதி
கூட்டணி தயார்…
அய்யா..
அரசியல் பிரம்மாக்களே..
தேர்தல் வாக்குறுதி
இருக்கட்டும்யா…
மாசாமாசம்
உதவித்தொகை…
ஏகப்பட்ட இலவசம்…
இப்புடி எல்லாத்தையும்
உங்க சொந்த பணத்துல
செலவழிப்பியளா..?
சொந்த பணம்
தட்டுப்பாடாயிட்டா
எங்ககூட கூலி வேலைக்கு
வருவியளா?
அப்புடிண்ணா
போஸ்டரு-நோட்டீசு
கட்டவுட்டு-கொடி-வெடி
ஒண்ணும் வேண்டாம்யா
இந்து-கிறிஸ்து-முஸ்லிம்
சத்தியமா
எங்க ஓட்டு உங்களுக்கே!
Leave a Reply