க.மதிவாணன்
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது இல்வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பொருளாதாரம் மேன்மை அடையும் போது இல்வாழ்க்கையும் மேம்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நிலாவால் தான் பூமிக்கு பெருமை. அதுபோல பொருளாதாரத்தால் தான் இல்வாழ்க்கைக்கு பெருமை கிடைக்கும் பொருளாதாரமே நாட்டையும் வீட்டையும் வளப்படுத்தும்.
பணம் கையில் இல்லாத போது மனிதனின் சூழ்நிலை என்பது கடும் வெயிலில் காலணிகள் அணியாமல் நிற்பது போல பொருளாதாரம் வளர்ச்சியை எட்டும் போது, அவ்வீட்டில் மனக்கவலை, வறுமை, பூசல்கள் எதுவுமே இருக்காது.
அங்கு உள்ளவர்களுக்கு உள்ளம் மட்டுமல்ல உடல் நலமும் மிகவும் சீராகவே இருக்கும்.
சம்பாதிக்கும் அளவுகோலும், அதை சுதாரிப்போடு செலவிடும் அளவுகோலும் சிறப்பாக சீராக இருக்கும் போது இல்வாழ்க்கையும் அதன் ஒட்டுமொத்த பலன்களும் சிறப்பாக அமையும்.
அதுபோக பொருளாதாரத்தில் மிகவும் மேன்மை நிலையில் இருக்கும் போது உங்கள் சொந்தங்களை வெறுக்காதீர்கள்.
ஒரு தனிமனிதனால் சாதிக்க முடியாததை, ஓர் கூட்டு குடும்பம் சாதித்து காட்டும்.
வாழ்க்கையில் எப்பவும் இளமை நம்மோடு வாசம் செய்வது இல்லை. காலம் என்னும் மாயவன் இளமையை எடுத்து கொள்வான்.
பொருளாதாரம் நம்மோடு கூடவே இருக்கும் என தப்பு கணக்கு போடவே கூடாது. சூழ்நிலை காரணமாய் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும்.
மலையில் ஏறி சாதனை படைத்தவன் ஒரு நாள் அவன் உயிரையே பணயமாக கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு விடுவான்.
மல்லிகை மணம் வீசிக்கொண்டே இருப்பது போல் தெரியும் அஃது மணம் வீச மறுக்கும் போது அதனுடைய வாடை வேறு மாதிரியாக இருக்கும்.
பொருளாதாரம் மேன்பட, தக்க வைக்கும் பக்குவமும் தெரிய வேண்டும். எப்பவும் நிழலில் செல்ல முடியாது. வெயிலும் நம் மீது விழும் என தெரியவும் வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் கடையை ஆரம்பித்து விடுவதும் மிக சுலபம். அந்த கடையை தக்க வைத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது தான் சாதுர்த்தியமாகும்.
மாற்றமே மாற்றத்தை செய்து கொண்டே இருக்கும். எல்லா காரண நிகழ்வுகளுக்கு யார் காரணம் என அறிய முடியாது. எல்லாம் கடந்து செல்வதை அறியலாம். ஆனால் பார்க்க முடியாது. தென்றல் தொடுவதை அறியலாம். ஆனால் அதை பார்க்க முடியாது.
ஒருவன் நான் வெற்றி பெற்று விட்டேன் என சொல்லவே முடியாது. ஏனென்றால் அப்படி ஓர் இலக்கு என்று ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் நான் வெற்றி பாதையில் பயணிப்பதாக சொல்லலாம்.
பொருளாதாரம் மேம்பட, புரிதல், முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, விட்டு கொடுக்கும் மனப்பான்மை, தொலைநோக்கு பார்வை என்ற ஆறும் வேண்டும்.
தனிமனிதன் கூட சில சமயம் பொருளாதாரத்தில் தோல்வி, அடையலாம், கூட்டு குடும்பத்தின் முயற்சி என்பதில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஒரு பெண் குழந்தை இல்லறத்தில் தானே முடிவு எடுப்பதை விட, கணவனோடு சேர்ந்து கலந்துரையாடல் செய்து எடுக்கும் முடிவுகள் என்பது நல்லதாகவே அமையும்.
பொருளாதாரத்தை எப்பவும் நம்மோடு தக்க வைக்க மனதில் எப்பவும் நல்ல எண்ணங்கள், சிந்தித்து செயல்படுவது நிறைவான மனமும் வேண்டும். பொருளாதாரம் சிறப்பாக அமையும் போது, மற்ற எல்லா செல்வங்களும் உங்களை தேடி வரும். உங்கள் வாழ்க்கை உங்களின் மேலான நல்ல எண்ணத்தால் உருவாகும் போது உங்கள் முன்னேற்றம் கண்டு உலகம் வியந்து பார்ப்பதே நீங்கள் வெற்றி பாதையில் பயணிப்பதாக அர்த்தம்.
Leave a Reply