ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். அவருடைய கலையே உயர்ந்த தேவதாரு மரங்களின் மீது எப்படி ஏறுவது என்று சொல்லித் தருவது தான். நேராக மரங்களின் மீது எப்படி ஏறுவது என்பதை மக்களுக்கு கற்றுத் தருவார். காரணம் ஒருவர் தவறி விழுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒரு இளைஞர் வந்தார். அந்த ஆசிரியர் எப்படி ஏற வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, அவனை மரம் ஏறச் சொன்னார். அந்த ஆசிரியருக்கு […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
– துவாரகா சாமிநாதன் உனக்கான உருவத்தை சொற்களாய் விரித்து எளிதில் வடிவம் கொண்டு விடுகிறாய் மேகமே. கலைத்தும் கலைந்தும் ஏவாளின் மனக்காட்சியை வெளிப்படுத்தி குறிப்பால் உணர்த்துகிறாய் உயிரிணையும் காலத்தை. எனக்குத்தான் வெட்கம் மயில் போல் தோகை விரித்தாட முடியாது. நசித்து விடுகிறேன் ஆசைகளை இருந்துமென்ன  மழைத்துளிகளோடு கலப்புற்று வாசம் வீச வறண்ட நிலம் போல தயாராக வெடித்துக் கிடக்கிறேன் படர்ந்து ஈரம் பரவட்டுமே. என்றோ ஒருநாள் நீராய் மாறி வந்து நதிபோல் தழுவுவாய் என… வறள் நிலமாகி […]
Read More
நிராகரிப்பு…
  • By Magazine
  • |
–பாலமுருகன். லோ “ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும். “அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தேவையில்லாம நீங்கதான் இந்த விஷயத்தில சீரியஸா இருக்கீங்க.” அதற்குச் சொல்லலைப்பா. ஏதோ ஒருநாள் என்றால் சரி, போனா போகுது என்று விட்டு விடலாம். காலேஜுக்கு சரியான நேரத்திற்குத் தான் போக வேண்டும் அதை நான் மறுக்கல. ஆனா நீ என்னடானா! காலையில அதுக்குன்னு இப்படிய சாப்பிடாம போவதா? […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரபெண்மணி பிக்காஜி ருஸ்தம் காமா என்ற மேடம்காமா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் […]
Read More
எம்.எப்.தாமஸ்
  • By Magazine
  • |
எம்.எப் தாமஸ்   குறிப்பிடத்தக்க மலையாள திரைவிமர்சகர்.  கேரள திரைப்பட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். 50 வருடகாலம் மலையாள சினிமா மற்றும் திரைப்பட விமர்சகராக அவர் ஆற்றிய  பங்களிப்பை கருத்திற் கொண்டு குறிப்பிடத்தகுந்த  மலையாள திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சிறப்பு பெற்றவர். திரைப்படங்களின் மீதான எனது முடிவுறாத  காதல்_  எம் .எப் தாமஸ் மலையாளத்தில்: ஜே.எஸ் ஐஸ்வர்யா தமிழில் : கிருஷ்ணகோபால் பிரதிபலம் ஒன்றையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஒரு நபர் கலை […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் இரவு என்பது உறங்க அல்ல விழித்துக்கொள்ள… கனவு என்பது ஏங்க அல்ல இயங்க… பார்வை என்பது மறக்க அல்ல பதிந்து கொள்ள பயணம் என்பது பார்க்க அல்ல அனுபவிக்க கடல் என்பது அலைவீச அல்ல உயிர்கள் வாழ வாழ்க்கை என்பது வாய் பேச அல்ல வாழ்ந்து காட்ட… புரிவது என்பது சொற்களாலல்ல செய்கைகளால் இருப்பது என்பது கற்பனை அல்ல செயல்படுவது… உயிரால்மட்டும் வாழ்வது விலங்கு உணர்வோடும் வாழ்பவன் மனிதன்.. இன்பம் என்பது கையளவு அல்ல […]
Read More
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது. சல்லி வேர்கள் சிதைந்து விட்டால் வளர்ச்சிக்கு வேண்டிய நீர் சரியாக வந்து சேராது. வேர்கள் மரத்துக்கு ஆதாரம். மொட்டையாக நிற்கும் மரத்தால் எவருக்கும் பயனில்லை. கிளைகள் விரிந்தால் தான் பூக்கள் மலரும். காய்கள் கனியும். எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. இருந்தால் பூவும், பழமும் தரும். இறந்தால் விறகாக நம் வீடு வந்து சேரும். மரத்தின் வாழ்க்கையே மற்றவர் நலனுக்குத் தான். அது நிழல் தேடும் மனிதருக்கு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 289-வது கருத்தாய்வுக் கூட்டமானது, மரு.கமலகண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.07.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் புற்றுநோய்க்கு எளிய மருந்து செய்முறைகளையும், எலும்பு முறிவுக்கு மருந்து பூச்சு செய்து கட்டும் முறைகளை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.கே.செல்வநாதன் ஆசான் எல்லாவித மூலநோய்களுக்குமான கருணைக்கிழங்கு சூரணம் செய்முறையைக் கூறினார். திரு.வடிவேல் ஆசான் வர்மக்கலை மருத்துவத்தை அனைவரும் கருத்தாய்வுக் கூட்டத்தில் […]
Read More
தமிழா… உன் மொழி தமிழடா!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழ்க்குச் செம்மொழிஉயர்வு வந்ததாய்ப் பெருமைப்படும் இக்காலகட்டத்தில் தமிழர் நாடுதான் எல்லாவற்றிலும் முதன்மை என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் தெருக்கள் தோறும் தமிழ் அமைப்புகள் நாள்தோறும் நடக்கும் பொழுதிலே பாவேந்தரைப் போற்றும் வகையில் பாவலர் ஏழ் நாள் விழாவென அரசுதான் அறிவித்த மகிழ்விலே மக்கள் இருக்கையில் தமிழ்தான் எங்கே என்று தேடும் இழிநிலை இங்கு உள்ளது என்பதை நாம் எண்ணும் போழ்து,  இது ஒருநாடு இதற்குத் தமிழர் நாடு என்று பெயர் என நம் மனம் வெம்பிச் […]
Read More
  • By Magazine
  • |
கா.திலீபன்  தமிழாசிரியர் பௌர்ணமியைப்  போல் அலங்கரித்துச் சுற்றித்திரிந்த விண்மீனே! கால் வயிறு கஞ்சிக்காகவும், தன் மகனின் ஆசைக்காகவும், உடல் கருத்தும்! கண்கள் சிவந்தும்! கரும் நிலவாக சுற்றிக்கொண்டிருக்கிறாய்! அதனால்தான் என்னவோ? அதை அமாவாசை என்கிறார்களோ? என் ஆசை அம்மா! என்றும் உயர்ந்திருக்கிறாய்.
Read More