காத்திருப்பு

காத்திருப்பு

  • By Magazine
  • |

– துவாரகா சாமிநாதன்

உனக்கான

உருவத்தை

சொற்களாய் விரித்து

எளிதில் வடிவம்

கொண்டு விடுகிறாய் மேகமே.

கலைத்தும் கலைந்தும்

ஏவாளின் மனக்காட்சியை வெளிப்படுத்தி

குறிப்பால் உணர்த்துகிறாய்

உயிரிணையும் காலத்தை.

எனக்குத்தான் வெட்கம்

மயில் போல் தோகை விரித்தாட முடியாது.

நசித்து விடுகிறேன் ஆசைகளை

இருந்துமென்ன 

மழைத்துளிகளோடு

கலப்புற்று

வாசம் வீச

வறண்ட நிலம் போல தயாராக

வெடித்துக் கிடக்கிறேன்

படர்ந்து ஈரம் பரவட்டுமே.

என்றோ ஒருநாள்

நீராய் மாறி வந்து

நதிபோல் தழுவுவாய் என…

வறள் நிலமாகி காத்திருக்கிறேன்

நீ வருவாயென…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *