போன்சாய் வாழ்க்கை
  • By Magazine
  • |
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் கொஞ்சம் வளர்ந்தாலும் கிளைகளை உடைத்துவிட்டு கொஞ்சுகிறான் நான் அழகி என்று ! என் இயல்பில் படராமல் அவன் இசைவுக்கு வளரும் எனக்கோ போன்சாய் மரங்கள் பிடித்தமில்லை வட்டத்தொட்டிக்குள் வாழும் போன்சாய் போல் வீட்டுச்சுவருக்குள் முடிகிறது என்வாழ்வும் நீர் தேடி அழையமுடியா வேரின் வலியும் இலக்கின்றி ஓடும் என் வாழ்வின் வலியும் ஒத்த பாதையில் பயணிக்கிறது
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பயனளிக்கும் கைத்தொழிலை தக்க காலத்தில் கற்றுக்கொண்டால் வாழ்க்கைக்கு வளம் ஊட்டும் கற்ற கைத்தொழில் யாருக்கும் எப்போதும் அடிமையாக்காது காட்டும் கைத்தொழில் சிறப்புறக்கற்றால் பலருக்கு கொடுக்கலாம் வேலைவாய்ப்பு கைத்தொழில் கற்றவர் தானே தொழிலாளி தானே முதலாளி வேலை நேர கட்டுப்பாடில்லை எப்போதும் உழைக்கலாம் எந்த நேரத்திலும் ஓய்வு எடுக்கலாம் உழைப்பிற்கேற்ப வருவாய் கூடும் வாழ்க்கைதரமும் பெருகும். தணிக்கை – வரி ஏய்ப்பு சோதனை பிரச்சனை இல்லை பயமின்றி உழைக்கலாம் சிறந்த கைத்தொழில்களால் நாமும் உயர்வோம் நாடும் உயரும்.
Read More
ஏக்கம்
  • By Magazine
  • |
குமரி எழிலன் சன்னலில் ஒரு சாயல் தெரிந்தது… அது வானத்து நிலவோ … நிலவைத் தொட கைகள் துடித்தன கண்கள் மட்டுமே தழுவி மீண்டன… தோற்ற மயக்கமா? உண்மைத் தோற்றமா? நிலவுக்கும் தெரியும் கண்களுக்கும் புரியும்..  நாள் நட்சத்திரம் தேதி குறிப்பிட்டா கைகள் குலுக்கும் காயங்கள் சேரும்.. காய்ச்சலுக்கு மருந்து காத்திருக்குது கடைகளில் அல்ல … கண்களில் …. கைகளில் … இதயங்களில் …. காலம் உருண்டோடுகிறது உலகம் சுழன்று கொண்டிருக்கிறது கற்பனையில் மட்டும் வாழ்வது கனவல்லவா […]
Read More
வீரமங்கை வேலுநாச்சியாருக்காக தலைகொடுத்த உடையாள்வெட்டுடையாள் காளி
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் சிவகங்கைச் சீமையைச் சீரோடும், சிறப்போடும் ஆட்சி செய்த மன்னன் முத்துவடுகநாத பெரிய உடையத்தேவரை, ஆலயத்தில் வழிபாடு செய்து திரும்பிய போது ஆங்கிலப்படை வஞ்சகமாய்ச் சூழ்ந்து கொன்றது. வேலுநாச்சியாரை கொலை செய்ய முயன்றது. வேலுநாச்சியார் வெள்ளையர் படையினரிடமிருந்து தப்பி வருகிற போது தாகத்தால் சுருண்டு விழுந்தார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் என்ற பெண் ஓடிச் சென்று தண்ணீர் கொடுத்தாள். பசிபோக்க உணவு கொடுத்தாள். தான் உணவும், தண்ணீரும் கொடுத்தது மகாராணிக்கு தான் என்று […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
Irretrievable Marriage (நீடிக்கவே முடியாத திருமணம்) – வழக்கறிஞர் பி. விஜயகுமார் விவாகரத்து வழக்கு பல காரணங்களால் நீதிமன்றத்தில் கணவராலோ அல்லது மனைவியர்களாலோ தாக்கல் செய்யப்படுகிறது. பரஸ்பர விவாகரத்து கணவன்- மனைவி இவரும் சேர்ந்து தாக்கல் செய்வார்கள். பரஸ்பர வழக்கில் கணவன்- மனைவி இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விடும். ஒரு தரப்பினர் மட்டும் தாக்கல் செய்யும் வழக்குகளில் விவாகரத்து எளிதாக கிடைக்காது. ஏனென்றால் மறுதரப்பு கட்சிக்காரர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். சில வழக்குகளில் நீதிமன்றம் கணவன் – […]
Read More
கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்க
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமது ராஜ உறுப்புகளுள் ஒன்று கல்லீரல். சென்ற செப்டம்பர் 2024 புதியதென்றல் மாத இதழில் இந்நோய் பற்றிய சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் விரிவாக்கத்தில் காணப்படும் அதிகமான கொழுப்பு படிதல் ஒரு முக்கியமான கல்லீரலில் உண்டாகும் நோய் ஆகும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் ஆபத்தை உண்டாக்கும். எனவே இந்நோ வராமல் தடுக்கவும், வந்தால் பாதிப்பினை குறைக்கவும் அல்லது முற்றிலுமாக அழித்து விடவும் தேவையான முறைகளைப் பற்றிப் பார்ப்போம். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  287-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.05.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.கே. செல்வநாதன் ஆசான் காசம், சயம், கை கால் எரிவு, தாகம், விக்கல் சுரம், அஸ்திவெட்டை, வாந்தி, நெஞ்செரிவு, குன்மம், காமாலை, வாயு இவற்றுக்கு தாளீசபத்திரி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு. அருள்தாஸ் ஆசான் இரத்த […]
Read More
தோல்நோய்களுக்கு  சிறந்த‘பிரம்மதண்டு’
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் வெண்ணிற கோடுகளுடன் காம்பில்லாமல் கூரிய முட்களுடன் கூடிய பசுமையும் நீலம் கலந்த இலைகளுடன், அழகான மஞ்சள் நிற பூக்களையும், முட்கள் நிறைந்த நீள் உருண்ட காய்களும் அதனுள் கடுகு போன்ற விதைகளையும் கொண்டு, எப்பகுதியை உடைத்தாலும் மஞ்சள் நிற பால் வடியும் குணத்தை கொண்டு நேராக ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அழகான ஒரு களைச் செடி தான் பிரம்ம தண்டு. தரிசு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில் தானே வளர்கிறது. இதன் […]
Read More
வேடன் எனும் கருஞ்சூறாவளி
  • By Magazine
  • |
தக்கலை ஹாமீம் முஸ்தபா கூடி நிற்கும்  பெரும் மக்கள் திரள்முன் நின்று கொண்டு வேடன் என்னும் அந்தக் கலைஞன், “நான் பாணன் இல்லை  பறையன் இல்லை புலையன் இல்லை நீ தம்புரானும் இல்லை நீ தம்புரான் என்றால் எனக்கொரு மயிருமில்லை இனி காலமில்லை காத்திருக்கப் போவதுமில்லை பொறுத்துப் போகும் எண்ணமுமில்லை” என்று   ராப் இசையில் தன் குரலை அதிரவிடும்போது கூடிநிற்கும் பெரும் கூட்டமும் அவரோடு  சேர்ந்து ஆரவாரிக்கிறது. கேரள மக்கள் இசைமரபில் குறிப்பாக மலையாள நாடன் பாட்டு […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அல்லிவர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அழல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அல்லிவர்மம் பற்றி அறிவோம். அல்லிவர்மம் நாபியின் நேர் பின்புறம் நான்குவிரலின் மேல் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது. இவ்வர்மம் அரசவர்மம், அல்லி அரச வர்மம், அல்லி அரசாணி வர்மம், சந்திர புஷ்கரணி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “சாதிக்கும் சந்திரபுஷ்கரணியோடு தாவி நிற்கும் மாய்கை மகரத்தூடுற்று வாதிக்கும் பின்பாகம் அல்லி அரசவர்மம்”.                                                                                                 – வர்மகுருநூல் […]
Read More