கைத்தொழில்

  • By Magazine
  • |

இரா.சிவானந்தம்

பயனளிக்கும் கைத்தொழிலை

தக்க காலத்தில் கற்றுக்கொண்டால்

வாழ்க்கைக்கு வளம் ஊட்டும்

கற்ற கைத்தொழில்

யாருக்கும் எப்போதும்

அடிமையாக்காது காட்டும்

கைத்தொழில் சிறப்புறக்கற்றால்

பலருக்கு கொடுக்கலாம்

வேலைவாய்ப்பு

கைத்தொழில் கற்றவர்

தானே தொழிலாளி

தானே முதலாளி

வேலை நேர கட்டுப்பாடில்லை

எப்போதும் உழைக்கலாம்

எந்த நேரத்திலும் ஓய்வு எடுக்கலாம்

உழைப்பிற்கேற்ப

வருவாய் கூடும்

வாழ்க்கைதரமும் பெருகும்.

தணிக்கை – வரி ஏய்ப்பு

சோதனை பிரச்சனை இல்லை

பயமின்றி உழைக்கலாம்

சிறந்த கைத்தொழில்களால்

நாமும் உயர்வோம்

நாடும் உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *