போன்சாய் வாழ்க்கை

போன்சாய் வாழ்க்கை

  • By Magazine
  • |

ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

கொஞ்சம் வளர்ந்தாலும்

கிளைகளை உடைத்துவிட்டு

கொஞ்சுகிறான்

நான் அழகி என்று !

என் இயல்பில் படராமல்

அவன் இசைவுக்கு

வளரும் எனக்கோ

போன்சாய் மரங்கள்

பிடித்தமில்லை

வட்டத்தொட்டிக்குள்

வாழும் போன்சாய் போல்

வீட்டுச்சுவருக்குள் முடிகிறது

என்வாழ்வும்

நீர் தேடி அழையமுடியா

வேரின் வலியும்

இலக்கின்றி ஓடும்

என் வாழ்வின் வலியும்

ஒத்த பாதையில் பயணிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *