SAVKIA-வின் 287-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.05.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில், திரு.கே. செல்வநாதன் ஆசான் காசம், சயம், கை கால் எரிவு, தாகம், விக்கல் சுரம், அஸ்திவெட்டை, வாந்தி, நெஞ்செரிவு, குன்மம், காமாலை, வாயு இவற்றுக்கு தாளீசபத்திரி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக, திரு. அருள்தாஸ் ஆசான் இரத்த விருத்தி, பித்தம், Creatinine இவற்றுக்கு அன்னபேதி இரகசிய மருந்து செய்முறையை தெளிவாகக் கூறினார். மேலும் உடல் மெலிவு, நடை சிரமம், தளர்வு, வர்ம காயம் இவற்றுக்கு தெற்றிப்பூ நெய் செய்முறையையும் தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக, திரு.ஜாண் ஆசான் வாயு, அஜீரணம், Food poison இவற்றுக்கு சூரணம் செய்முறையை கூறினார்.
திரு. அருள்செல்வன் ஆசான் வர்மம், ஈளை, இளைப்பு இவற்றுக்கு குடிநீர் செய்முறையை கூறினார்.
அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் வாதம், மூட்டுவலி, உடல் அசதி இவற்றுக்கு சிலாசத்து பற்பம் செய்முறையினை கூறினார்.
அடுத்ததாக திரு.கருணாநிதி ஆசான் உடல்வலி, சுளுக்கு, அசதி, வர்ம காயம் இவற்றுக்கு எளிய குடிநீர் செய்முறையைக் கூறினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் அவர்கள் யோக மெய்யியல் குறித்து விளக்கிப் பேசியதோடு, கால் கை வலிப்புக்கான காணொளி காட்சியினை காண்பித்ததோடு, ஜன்னியை கட்டுப்படுத்தும் வர்மப்புள்ளிகளையும் கூறினார். கூட்டத்தினை இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply