நமது மூலிகை மருத்துவர்
வெண்ணிற கோடுகளுடன் காம்பில்லாமல் கூரிய முட்களுடன் கூடிய பசுமையும் நீலம் கலந்த இலைகளுடன், அழகான மஞ்சள் நிற பூக்களையும், முட்கள் நிறைந்த நீள் உருண்ட காய்களும் அதனுள் கடுகு போன்ற விதைகளையும் கொண்டு, எப்பகுதியை உடைத்தாலும் மஞ்சள் நிற பால் வடியும் குணத்தை கொண்டு நேராக ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அழகான ஒரு களைச் செடி தான் பிரம்ம தண்டு.
தரிசு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில் தானே வளர்கிறது. இதன் பூர்வீகம் மெக்சிகோ நாடு.
இது வறட்சியை தாங்கி வளரும் தன்மை உள்ளது. விதை மூலம் இனவிர்த்தி ஆகிறது.
இது அபின் செடியின் குடும்பத்தை சார்ந்தது. பிரம்மதண்டு செடியின் பூவைத் தவிர பிறபகுதிகளில் அனைத்திலும் கூரிய முட்கள் உள்ளது.
இதனுடைய பால், வேர், விதைகளில் நஞ்சுத்தன்மை இருப்பினும் இதனை விஷச் செடி என புறந்தள்ள வேண்டாம். அளவோடு பயன்படுத்த நல்ல மருத்துவ குணங்களை பெறலாம்.
தாவரவியல் பெயர்
Argemone mexicana
ஆங்கிலப் பெயர்
Mexican poppu, yellow thistle
வேறு பெயர்கள்
குருக்கம் செடி, குடியோட்டி பூண்டு
தாவரவேதிப்பொருள்கள்
Dihydropalmatine hydroxide, Berterinem protopine போன்றவைகள்
பிரம்மதண்டு செடியின் மருத்துவப்பயன்கள்
1. கண்நோய்களுக்கு
பிரம்மதண்டு செடியின் 20 பூக்களை ஒரு இரவு ஊறவைத்து தினம் காலையில் 40 நாட்கள் குளித்து வர கண்நோய்கள் அகலும்.
பிரம்மதண்டு செடியின் 2 பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் ஓர் இரவு ஊற வைத்து காலையில் அந்த பூக்களை அகற்றி, பூ ஊறிய தண்ணீரால் கண்களை கழுவி வர பார்வைதிறன் கூடும். கண்சிவத்தல், வலி மாறும்.
பிரம்மதண்டு செடியின் பால் ஒரு துளி கண்ணில் விடுவது கண்சதை வளர்ச்சி, கண் அரிப்பு, கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்கூச்சம், நீர் வடிதல் ஆகியவற்றிற்கு சிறந்தது.
2. பல்நோய்களுக்கு
விதையை பொடித்து பிரம்மதண்டு இலையில் சுற்றி வாயில் புகை பிடித்து விடுவது பல்வலி, பல்புழு, பல்சொத்தை இவற்றிற்கு சிறந்தது.
பிரம்மதண்டுச் செடியின் சமூலசாம்பலை சலித்து வைத்துக் கொண்டு பல்தேய்த்து வர பல் ஈறு பலப்படும். பல்வலி, பல் சொத்தை, பல் கரைதல் ஆகியவற்றிற்கு சிறந்தது.
பிரம்மதண்டு இலையை கசாயமிட்டு வாய் கொப்பளித்து வர ஈறுவீக்கம் மாறும்.
3. தோல்நோய்களுக்கு
பிரம்மதண்டு செடியின் பாலை மருள் (warts) உள்ள இடத்தில் போட்டு வர மருள் குணமாகும்.
பிரம்மதண்டு செடியின் சமூல சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து புண் உள்ள இடத்தில் பூச குணமாகும்.
பிரம்மதண்டு இலைசாறு தினம் காலையில் 1 கரண்டி வீதம் ஆகாரத்திற்கு முன் 40 நாட்கள் குடித்து வர தோல்நோய்கள் குணமாகும்.
பிரம்மதண்டு இலைச்சாறு 200 மி.லி, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் 100 மில்லி கலந்து தைல பதத்தில் காய்த்து கரப்பன்,ஊறல், சொறி, சிரங்கிற்கு பூசலாம்.
4. கட்டி உடைக்க
பிரம்மதண்டு செடியின் விதையை அரைத்து கட்டிகளில் பூசிவர கட்டி பழுத்து உடையும்.
5. தோள் வாதத்திற்கு
முருங்கைபிசின் பொடி 4 கிராம் பிரம்மதண்டு செடியின் மகரந்தம் ஒரு கிராம் எடுத்து பசு நெய்யில் மத்தித்து தினமும் காலையில் ஆகாரத்திற்கு முன் சாப்பிட்டு வரை தோளை பற்றிய வாதம் தீரும்.
6. தேள்கடிக்கு
பிரம்மதண்டு வேரை சதைத்து தேள்கடித்த இடத்தில் வைத்து கட்ட தேள்கடி விஷம் இறங்கும்.
பிரம்மதண்டு செடியின் சாற்றை கடிவாயில் தடவினாலும் தேள்கொட்டிய கடுப்பு தீரும்.
7. வெள்ளை மற்றும் கருப்பை சார்ந்த நோய்களுக்கு
பிரம்மதண்டு இலைச்சாறு, ஆடுதீண்டாபாளை இலைச்சாறு அரை கரண்டி வீதம் எடுத்து நெய்யில் கலந்து தினம் இருவேளை சாப்பிட வெள்ளை தீரும். மேலும் இது கருப்பை சார்ந்த நோய்களுக்கும் சிறந்தது.
8. காசநோய்களுக்கு
இலையைப் பொடித்து ஒரு கிராம் அளவில் தேன் கலந்து தினம் இருவேளை கொடுத்து வந்தால் காசநோய் (TB)- க்கு சிறந்தது.
பிரம்மி இலைச்சூரணம் ஒரு கிராம், விதை சூரணம் ஒரு கிராம் சேர்த்து தேன் கலந்து தினம் இருவேளை சாப்பிட சளி, இருமல் தீரும்.
பிரம்மதண்டு சமூலசாம்பல் சூரணம் 250 மில்லிகிராம் அளவில் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிடுவது ஆஸ்துமா, இருமல், கபநோய்கள், நுரையீரல் நோய்களுக்கு சிறந்தது.
9. ஆண்மை குறைவிற்கு
பிரம்மதண்டு விதையை சிறிதளவு எடுத்து பானங்களில் சேர்த்து குடித்துவர வீரியவர்த்தி உண்டாகும்.
10. மலக்கிருமிகளுக்கு
பிரம்மதண்டு வேர் சூரணம் அரைகிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து இரவு குடித்து வர மலக்கிருமிகள் அகலும்.
11.வயறுவீக்கம் மற்றும் சிறுநீர் குறைவிற்கு
பிரம்மதண்டு செடி 10 கிராம் அளவு எடுத்து 200 மில்லி தண்ணீர் விட்டு 50 மில்லியாக்கி தினம் இருவேளை குடித்து வர சிறுநீரை அதிகம் கழியச்செய்து, வயறு வீக்கத்தை குறைக்கும்.
12. கவனிக்க வேண்டியவைகள்
Leave a Reply