– கஸ்தூரிபா ஜாண்ஸன்
நமது ராஜ உறுப்புகளுள் ஒன்று கல்லீரல். சென்ற செப்டம்பர் 2024 புதியதென்றல் மாத இதழில் இந்நோய் பற்றிய சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் விரிவாக்கத்தில் காணப்படும் அதிகமான கொழுப்பு படிதல் ஒரு முக்கியமான கல்லீரலில் உண்டாகும் நோய் ஆகும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் ஆபத்தை உண்டாக்கும். எனவே இந்நோ வராமல் தடுக்கவும், வந்தால் பாதிப்பினை குறைக்கவும் அல்லது முற்றிலுமாக அழித்து விடவும் தேவையான முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
இந்நோய் பற்றி மக்களிடையே சரியான விழிப்புணர்ச்சி இல்லை.
மது அருந்துவதால் கல்லீரல் செல்கள் பழுதாகி அதில் குளறுபடி ஏற்பட்டு அதில் கொழுப்பு படியும் நிலை உள்ளது. அவர்கள் உடனடியாக மதுவை நிறுத்த வேண்டும். ஆனால் மது அருந்தாதவர்களுக்கும், சிறுவர்களுக்கும் கூட இக்காலத்தில் இந்நோய் உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் விரிவாக்த்தில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பு படிதல் நாள்பட்ட கல்லீரல் நோயின் நான்கு நிலைகளில் முன்னேறும்.
கல்லீரல் வீக்கம் செயலிழப்பின் அறிகுறிகள்
பொதுவாக மஞ்சள் காமாலை, உடலில் கண்களில் மற்றும் சிறுநீர் மஞ்சளாகவும், வயிற்றின் வலதுப்பக்கத்தில் வலியும், சீக்கிரம் ஜீரணம் ஆகாமலும், குழப்பம் அல்லது சிந்தனை சிரமங்கள், வயிறு, கைகள் அல்லது கால்களில் வீக்கம், கடுமையான சோர்வு, பலவீனம், பசியில்லாமை, தூக்கமின்மை, பொதுவாக வலது கணுக்காலில் வீக்கம் உண்டாகலாம்.
எளிதில் இரத்தம் கசிவு மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படும். இரத்த வாந்தியும் ஏற்படலாம். கல்லீரல் செயல்பாடு குறைவதால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலியும் எற்படும். மலம் வெளிர் நிறமாகப் போகும் தோள், கை, கால்களில் சிவப்பு நிற திட்டுகள் காணப்படும்.
சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். உள்ளங்கைகள் சிவப்பாக மாறும். வெள்ளைபடுதல், கண்எரிச்சல், உடல்சூடு போன்றவை உண்டாகலாம். வயிற்றை சுற்றி கொழுப்பு சேருவதும் இதற்கு ஓர் அறிகுறியாகும். கை கால்களிலும் வயிற்றுபகுதிகளிலும் கருமை நிறம் படிவதும் ஒரு அறிகுறியாகும்.
பித்தம் தவிர்த்து கல்லீரலில் கொழுப்பு குறைக்க மஞ்சள் காமாலை நோய்க்கு கொடுக்கும் மருந்துகளை பயன்படுத்தலாம்.
ஆரம்பத்திலேயே இந்த கல்லீரல் கொழுப்பு சேர்வதை தடுத்து விட்டால் இந்நோய் பற்றி அஞ்ச வேண்டியது இல்லை.
கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும் மூலிகைகளும், உணவுகளும்
இவற்றுள் கீழா நெல்லிக்கு முக்கிய பங்குண்டு. கீழ்க்காய் நெல்லி என்று அழைக்கப்படும் இச்செடியின் காய், வேர், இலைகள் எல்லாமே இந்த நோயை தீர்க்க உதவும். இதன் காய்ந்த சூரணம் (காய வைத்த பொடி) அரிப்புகள். இரத்த விருத்தி, அனீமியா, ஜீரண தூண்டி காமாலை, ஹெப்படைட்டிஸ் போன்ற நோய்களையும் குணமாக்குகிறது. இது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மாத்திரைகளாகவும் கிடைக்கும். இம்மூலிகை ஒரு கல்லீரல் தேற்றி எனலாம். இம்மூலிகையினை அரைத்து எருமைத் தயிரிலோ அல்லது பசுந்தயிரிலோ கலந்து அருந்தி வரலாம். இம்மூலிகைக்கு சர்க்கரை நோய், சிறுநீரக கற்களையும் குறைக்கும் குணமும் உண்டு. இது ஒரு சிறுநீர் பெருக்கி ஆகும்.
தூதுவளை இலைகள் மற்றும் பூக்களையும் பயன்படுத்தலாம். இதற்கு வெண்தூதுவளை சிறந்தது. இத்துடன் சிறிது கருஞ்சீரகப் பொடி சேர்த்து தீநீர் போட்டு தினம் காலை 20 மி.லி அல்லது 30 மில்லி அருந்தி வரலாம். அப்போது கல்லீரல் கொழுப்புடன் பித்த கற்களும் தீரும்.
பூனைமீசை மூலிகையுடன் வெள்ளைக் கரிசலாங்கண்ணியும் சேர்த்து அரைத்து எவ்வாறேனும் பயன்படுத்தலாம்.
கருப்பு நிறக் கொள்ளு வேக வைத்த நீர் இரண்டு மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்வதும் நலம் பயக்கும்.
நெல்லிக்காயுடன் இஞ்சி அரைத்து நீருடன் வடிகட்டி அருந்தலாம்.
தனியா, பனங்கற்கண்டு, சீரகம் சேர்த்த குடிநீர் (Soup) தினம் அருந்தி வரவும்.
காபி, டீ போன்ற பானங்கள் கல்லீரலுக்கு சிறந்த புத்துணர்ச்சியை உண்டாக்கும். எனவே வெள்ளை சர்க்கரை போடாமல் முடிந்தால் பால் தவிர்த்து தினம் 3 கப் இவற்றில் ஏதாவது ஒரு பானம் அருந்தலாம். இவற்றில் ஆன்டாக்ஸின் உள்ளது. அது கல்லீரலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
திராட்சை பழங்கள் அமில நீக்கியான ஆண்டாஸிட் எனும் பொருள் வைட்டமின் C நிறைந்து காணப்படுகிறது. அதுவும் சர்க்கரை போடாமல் சாறாகவோ, பழங்களாகவோ எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட்டும் சர்க்கரையின்றி எடுத்துக் கொள்ளலாம். இது உணவுக் கழிவுகளை நீக்கும்.
எல்லாவிதமான ஆல்மண்ட்ஸ், பூசணி, பாதாம், பிஸ்தா போன்ற விதைகளும் உப்பு போடாமல் உண்ணலாம்.
ஓமேகா 3 நிறைந்த தட்டையான மீன்கள் நல்லது.
துரித உணவுகள், சத்தற்ற குப்பை உணவுகளையும் உண்ண வேண்டாம்.
மதியம் குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்த்து கொண்டு இரவு சிறிது உணவு குறைத்து கொள்ளலாம்.
கீழ்க்காய் நெல்லியுடன் சீரகம், கறிவேப்பிலை கொதிக்க வைத்தும் அருந்தி வரலாம். 10 மிளகுடன், மஞ்சள் சீரகத் தண்ணீர் கொதிக்க வைத்தும் அருந்தலாம்.
மஞ்சள் கீழ்க்காய் நெல்லியுடன் சிற்றாமணக்கு சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு உண்டு வரலாம்.
நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி ஜீஸ் மிகவும் நல்லது.
மூன்று நாட்கள் கறிவேப்பிலை அரை கைப்பிடி கொதிக்க வைத்து அல்லது சாறு காலையில் அருந்தி வரலாம். அதே மாதிரி தொடர்ந்து மூன்று நாட்கள் கொத்தமல்லி இலை பின்பு மூன்று நாட்கள் காலை புதினாவும் சாறாகவோ அல்லது கொதிக்க வைத்தோ அருந்தி வரலாம்.
காபி, டீ-க்கு பதில் சுக்கு, மல்லி, துளசி, ஏலக்காய், செம்பருத்தி பூக்கள் சேர்ந்த பானம் அருந்தி வரலாம். இவற்றுள் ஏதாவது குறைந்தாலும் பரவாயில்லை. இதை அருந்தி வரலாம்.
சீரகம் வறுத்துப் பொடித்து வைக்கவும். வெறும் வயிற்றில் காலையில் இரண்டு நெல்லிக்காய்கள், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன் சோற்றுக் கற்றாளை ஜெல் நன்கு கழுவி சேர்த்து சீரகப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும். தொடர்ந்து காலை ஐந்து நாட்கள் அருந்தி வர இந்நோய் எங்கு போனது என்று தெரியாது.
காலை உணவை ஒன்பது மணிக்குள்ளும் மதியம் 2 மணிக்கு முன்னும் இரவு 7 மணிக்கு முன்பு உண்ண வேண்டும். இரவு அசைவ உணவுகளை உண்ண வேண்டாம்.
பாதாம் சிறிது எடுத்து இரவு நேரம் நீரில் ஊற வைத்து காலை அத்துடன் மோர் சேர்த்து அருந்துவது இந்நோய்க்கு சிறந்த மருந்து.
சுத்தமான மஞ்சள் வாங்கி மில்லில் கொடுத்து பொடியாக்கி கால் லிட்டர் நீரில் 1 தேக்கரண்டி போட்டு அத்துடன் கல்லுப்பு போட்டு கரைத்து 3 நாட்கள் குடித்து வந்தால் கல்லீரலில் கொழுப்பு படிமங்கள் தீரும். கடையில் வாங்கும் மஞ்சள் பொடியில் கலப்படம் இருக்கலாம்.
மாவுச்சத்து உணவுகளை பாதியாகக் குறைத்து, முழு தானிய உணவுகளான வரகு, குதிரை வாலி போன்றவை சாப்பிடலாம். கொழுப்பு சத்தும் குறைத்து, தினம் ஒரு முறை உணவுக்கு பதில் பழங்கள் மட்டும் உணவாக (மதியம்) எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளும், வெள்ளரி பிஞ்சு, காரட், நூல்கோல் போன்றவைகளும் சேர்த்து கொள்ளலாம். கீரைகள் முக்கியமாக பசலை கீரை, வெங்காயம், பூண்டு, முட்டைகோஸ், பூசணி விதை, நெல்லிக்காய் போன்ற காய்கறிகளும் சிறந்தவை.
சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, ப்ளுபெரி போன்ற பழங்களுடன் முலாம்பழம், தர்பூசணி, நெல்லி, செவ்வாழை பழம் போன்ற பழங்கள் நல்லது. இது உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
பாலில் மஞ்சள் பொடி அல்லது தேன் கலந்து அருந்தலாம். முட்டையின் வெள்ளைகரு, கரும்புச்சாறு போன்றவை நல்லது. நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மட்டுமே நல்லது. வேறு எண்ணெய்களை தவிர்க்கவும். காபி, கிரின் டீயும் அருந்தலாம்.
கொள்ளு கசாயம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். எனவே ஒரு நாள் விட்டு விட்டு 50 கிராம் அதனை வேகவைத்து நீரை அருந்தி வரவும். பால், தயிர் போன்ற புரதங்கள் அதிகம் தேவை.
ஒரு அளவுக்கு கடுகு, வெந்தயம், மஞ்சள் பொடி, சீரகம், ஓமம் வறுத்து அத்துடன் கல்லுப்பு போட்டு பொடிக்கவும். இந்தப் பொடி ஒரு தேக்கரண்டி மதியம் உணவுடன் போட்டு சாப்பிடவும்.
அரிசிக்கு பதில் மதியம் சிறு தானிய உணவு எடுத்து கொள்ளலாம். மாலை நேரம் சுண்டல், ஆவியில் வேகவைத்த உணவுகள் உண்ணலாம். மதியம் நேரம் மல்லிக்கீரை, இஞ்சி சிறுது உப்பு சேர்த்து மோர் குடிப்பது நல்லது.
தடுக்க வேண்டியவை
அதிகம் கொழுப்பு, காரம், உப்பு நிறைந்த உணவுகள், பாமாயில், உருளைக்கிழங்கு, மாவுச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை குறைக்க வேண்டும். இயன்றவரை நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் தவிர பிற எண்ணெய்கள் பயன்படுத்த வேண்டாம். கோழிக்கறி, ஆட்டுக்கறி மற்றும் மாட்டு கறி போன்றவைகளும் பயன்படுத்த வேண்டாம்.
மது எந்தமுறையிலும் பயன்படுத்த வேண்டாம். வெள்ளை சர்க்கரையும், டீ, காபி போட்டு அல்லது வேறு ஏதாவது பலகாரங்கள் செய்தோ பயன்படுத்த வேண்டாம். கடைகளில் விற்கும் செயற்கை பானங்கள் வாங்கி அருந்த வேண்டாம். இவற்றில் பல ரசாயன மருந்துகளும், அதிகமான இனிப்பும் சேர்ந்திருக்கும். மாறாக பழங்கள் வாங்கி சாறாக்கி இனிப்பு சேர்க்காமல் அருந்துங்கள். ஆல்கஹால் எந்த வடிவத்தில் இருந்தாலும் அருந்த வேண்டாம். சிலர் பீர் குடித்தால் தப்பில்லை என்பர். அது சரி இல்லை.
கல்லீரலை சுத்தம் பண்ண கைப்பிடி புதினா இலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, 3 பல் பூண்டு, ஒரு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைத்து நீர் சேர்த்து வடிகட்டி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் உண்டாகும் பல நோய்களும் குறையும்.
உப்பு அதிகம் சேரும் கருவாடு, அப்பளம், ஊறுகாய் போன்ற உணவுகள் உட்கொள்ள வேண்டாம்.
ஆவாரம் பூ பொடியை கொதிக்க வைத்து அருந்தி வர சர்க்கரை நோயின் தீவிரம் குறையும். கல்லீரல் பலப்படும்.
சீந்தில் கொடியின் இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த பயனை தரும்.
மூக்கிரட்டை கீரையும் சிறந்தது.
காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மாத்திரைகள் பயன்படுத்தக் கூடாது. மேலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தப் போன்ற நோய், கொலஸ்டிரால் போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
உடற்பருமன் தான் பயங்கரமான எதிரி. திடீரென பட்டினி கிடந்து ஒரே மாதத்தில் அதிக எடை குறைக்க கூடாது. மாதம் ஒரு கிலோ சிறிது சிறிதாக குறைக்கலாம். 100 சென்டிமீட்டர் உள்ள பெண்கள் 90 சென்டிமீட்டர் இருக்கலாம். அதற்கு மேல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். யோகா செய்வதும் நல்லது. அனைத்துக்கு மேலாக 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம்.
கல்லீரல் இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை நன்கு தொடர்ந்து வேலை செய்யும். இந்நேரம் விழித்திருந்து அதற்கு இடையூறு செய்தால் நாம் பல நோய்களுக்கு உள்ளாவோம். மன அழுத்தம் இன்றி நல்ல தூக்கம் அவசியம். 5 மணி நேரமாவது தொடர் தூக்கம் தேவை. கல்லீரலுக்கு பழுது பட்டாலும் தன்னைத்தானே சரிபண்ணும் திறன் உண்டு. இந்த நோய்க்கு நான்காவது படியில் (Final stage) இரத்தக்குழாயில் குட்டி குட்டியாக கொழுப்பு அடைத்து கொள்வதால் என்ன சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாது. கல்லீரல் பழுதாகினால் சரிபண்ண முடியாது என்ற நிலை ஏற்படும். எனவே விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவோம்
Leave a Reply