• By Magazine
  • |
  – குமரி எழிலன்  …….நல்லா சமைக்கணும் செவப்பா இருக்கணும் … தரகர் தங்க சாமியிடம், தன் மகனுக்கு, பெண் பார்க்கச் சொன்ன, பாக்கியத்தம்மாள் விளக்கிக் கொண்டிருந்தாள் …. ஒரே வாரத்தில …. கொண்டாந்து ஏறக்கிருவோம் …. என்றார் தரகர் தங்கு என்ன எறக்கிருவொம்,  கிறுக்க்கிருவோ முங்கறீங்களே….. நா என்ன அண்டாகுண்டா வா கேட்டேன்… பொண்ணு தானுங்க கேட்டேன் சரீங்கம்மா….. நல்லா சமைக்கனும், செவப்பா இருக்கணும் … அவ்வளவு தானா ஏற்பாடு பண்ணிடுவோம். சாவியைப் போட்டு. தனது […]
Read More
உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை
  • By Magazine
  • |
பயணக்கட்டுரை – கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும்  வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார்  சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது  நான்  மகிழ்ந்தேன். முப்பது வருடத்திற்குப் பிறகு கோழிக்கோடு மண்ணில் கால்பதிக்கப் போகிறோம் என்ற மிதப்பு என்னை மகிழச் செய்தது. பத்தாம் வகுப்பு  ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து  விடுமுறைகாலத்தில் விளையாடும் போது எனக்கும் தம்பிக்கும்   ஓயாமல் சண்டை நடப்பதை சமாளிக்க முடியாத அம்மா  என் உறவினர் ஒருவரோடு  கொத்தன், கையாள் வேலைக்கு  […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம். “ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம் தும்மி என்ற வர்மம்”.                                                                                – வர்ம குருநூல் “வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ் தும்மிக்காலம்”. – வர்ம அகஸ்தியசாரி “பண்பான தும்மியதன் காலம் கேள் தொடரான பித்துக்காய் பிறமேதானே”.                                                                                                – கால வர்மநூல் மேலும், போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்                                 […]
Read More
மருதாணிச் சொல்
  • By Magazine
  • |
விரைவில் விரல்களில் மருதாணி இட்டு வருவதாய் பளபளத்துக் கிடந்த விடியலில் சொல்லிச் சென்றாய்.. சிவந்து கிடக்கும் உன் மெல்விரல் பார்க்கும்       ஆசையில் நாளெல்லாம் காத்துக்கிடக்கின்றேன். அந்திப்பொழுதின் செவ்வானத்தைப் பார்க்கிறேன் வானத்துக்கு யார் இட்டது மருதாணி எனக்கேட்டுக்கொள்கிறேன். பறவைகள் கூடடைந்த பின்பும் என்னிடத்தில் வராத நீ வழக்கம் போலவே வாக்குத் தவறுகின்றாய்.. நீ உச்சரித்துச் சென்ற மருதாணி என்னும் சொல் பச்சையாகப் படர்ந்து சிவக்கத் தொடங்குகின்றது என்னுள்… – கூடல் தாரிக்
Read More
  • By Magazine
  • |
இலையுதிர் காலம் போல                 இங்கொரு வருடம் வீழ்ந்து விலையிலா புதிய ஆண்டு                 விடிதலைக் காண்பாய் நண்பா! கலைந்தன துயரம் என்றும்                 கவிந்திடும் இன்பம் என்றும் அலையலையாக நெஞ்சுள்                 ஆர்த்தெழும் ஆனந்தம் தான்! மலையினைக் கடப்போம் என்றும்                 மடுவினைக் கடப்போம் என்றும் நிலைத்த நற்புகழை எல்லாம்                 நித்தமும் பெறுவோம் என்றும் குலைந்திடா பாரதத்தாய்க்                 குடியர சோங்கும் என்றும் கலைந்திடா கனவோடிங்கே                 களிப்புடன் வரவேற்போம் நாம்! உலகெலாம் போரொழிந்தும் […]
Read More
புத்தாண்டு  வாழ்த்துக்கள்!
  • By Magazine
  • |
உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…                 ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம்.  உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.                 சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…                 அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…                 சொல்லும் […]
Read More
சேலை
  • By Magazine
  • |
– சபா. முருகன் பாரம்பரியம் பண்பாடு நாகரிகம் பெருமிதங்கொண்டு பெண்மை அணியும் பேருணர்வு !! ஒப்பற்ற ஓர் ஓவியந்தீட்டும் ஓவியனின் கலையுணர்வும் கவனமும் சேலைகட்டும் சிரத்தையாயிருக்கிறது !! தலைமுறைப் பெருமையை தக்கவைக்கும் தகவமைப்பே சேலைகட்டல் உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் மடலாய் விரிந்து ஒரு மாமலராய் தோணவைக்கிறது பெண்மையை !! ஒரு சோலையின் சுகந்தத்தை ஓர் அழகிய உருவமாய் வனைகிறது சேலை புடவையின் பூரிப்பில் பெண்மையின் புன்னகையில் புதுப் பொலிவுகொள்ளும் பூலோகம் !! நிலங்கொண்ட நிறைமதியிவளென்று உளங்கொள்ளும் ஒழுக்கம் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் […]
Read More
பாரதி வசந்தன் அஞ்சலி குறிப்புகள்
  • By Magazine
  • |
– பொன்.குமார் பிரிய சகோதரனுக்கு  ஒரு பிரியா விடை சாவதெல்லாம் மனிதர்களே- நான் சாகாத பெருங்கவிஞன் நான் எழுதாமல் போனால் இன்றே இறந்திடுவேன் இது உண்மை                 – கவிஞர் பாரதி வசந்தன் வணக்கம் சார். ஒரு நிமிசம் பேசலாங்களா என்றுதான் அலைபேசியில் பேச்சைத் தொடங்குவார் எழுத்தாளர் பாரதி வசந்தன். குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவார். நான் அய்யா என்றுதான் அழைப்பேன். இடையிடையே சகோதரா என்பார். எழுத்தாளர் பாரதி வசந்தனை […]
Read More