– குமரி எழிலன்
…….நல்லா சமைக்கணும் செவப்பா இருக்கணும் … தரகர் தங்க சாமியிடம், தன் மகனுக்கு, பெண் பார்க்கச் சொன்ன, பாக்கியத்தம்மாள் விளக்கிக் கொண்டிருந்தாள் ….
ஒரே வாரத்தில …. கொண்டாந்து ஏறக்கிருவோம் …. என்றார் தரகர் தங்கு
என்ன எறக்கிருவொம், கிறுக்க்கிருவோ முங்கறீங்களே…..
நா என்ன அண்டாகுண்டா வா கேட்டேன்… பொண்ணு தானுங்க கேட்டேன்
சரீங்கம்மா…..
நல்லா சமைக்கனும், செவப்பா இருக்கணும் … அவ்வளவு தானா ஏற்பாடு பண்ணிடுவோம். சாவியைப் போட்டு. தனது டி.வி.எஸ் பிப்டியின், காதைத் திருகினார் தரகு.
மூன்றாம் நாள் காலை அம்மா கேஸ் … காலிங் பெல் சத்தத்துடன் சிலிண்டர்காரர் குரல்கேட்டது. நாங்க கேஸ் புக் பண்ணவே இல்லியே …. சொல்லிக் கொண்டே, பாக்கியத்தம்மாள் ஹாலுக்கு வந்தாள்.
இந்த நேரம் பார்த்து கைபேசி கைக்குழந்தையாய்ச் சிணுங்கியது… காதில் பொருத்திக் கேட்டாள் பாக்கி…. அம்மா, நா தரகர் தங்கு பேசறேன் .. எறெக்கிட்டாங்களா?… என்னய்யா.. எறைக்கிட்டாங்களா…? பாக்கி பர்ஸ்ட் ஆனார்.
நல்லா சமைக்கணும், செவப்பா இருக்கணும்னு சொன்னீங்கல்ல…. அதான் கேஸ் சிலிண்டர்.- ஏற்பாடு பண்ணினேன்… எறக்கிட்டாங்களா…?
அந்த பையன்ட்ட ஆயிரம் ரூவா குடுத்து அனுப்புங்க 950 கேஸுக்கு 50 ரூவா புரோக்கர் கமிசன் ..
மயங்கி விழப்போன பாக்கியை தாங்கிப் பிடித்தார் புருசன் புருசோத்தமன்.
Leave a Reply