தலையங்கம்
  • By admin
  • |
அன்புள்ள வாசகப் பெருமக்களுக்கு வணக்கம், இந்தியா எனும் சனநாயக நாடு பல்வேறு கோணங்களிலும் தலைசிறந்த நாடு. கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், ஆன்மீகம், தொழில்நுட்பம் எனும் அனைத்து வளர்ச்சிகளும் நிறைந்த நாடு. எனினும் மெருகூட்டப்படாத தார்மீக நெறிகளால் அறிவுத்திறனிலும் தன்னம்பிக்கையிலும் முழுமையடைய முடியாததை எல்லாப் பகுதி மக்களிடமும் காணமுடிகிறது. கோடிகள் படைத்தவர்கள் அரசின் ஆயிரம் கரங்களையும் பற்றிப் பிடித்து நிற்க, ஆதரவற்ற மக்கள் கோடிக்கோடியாய் நிலைகுலைந்து வாழுகின்றனர். பார்த்தால் பளபளக்கும் பட்டுவேட்டிக்குள் பதைபதைக்க வைக்கும் நச்சரவைப் போன்று […]
Read More
திருப்தி
  • By admin
  • |
திருப்தி வீட்டில் கொஞ்சமும் இடமில்லை என்பதுதான் அவரது பிரச்சினை. அப்பாவும்,அம்மாவும், மனைவியும், நான்கு குழந்தைகளும் அங்குத் தங்குவது அவருக்குப் பிரச்சினை. எல்லாவற்றையும் கேட்ட குரு,உங்களுடைய கோழிகளையும் வீட்டின் உள்ளில் தங்க வை என்றார். கொஞ்சம் தயக்கம் காட்டிய பின்னும் குரு கூறியது போலச் செய்தார். அடுத்த நாள் வீட்டில் பிரச்சினைகள் என்றார் குருவிடம். ஆடுகளையும் வீட்டில் கெட்டு என்றார் குரு. வீட்டில் உள்ளவர்கள் எனக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது என்கின்றனர். பசுவினையும் வீட்டினுள் கெட்டு என்றார் குரு. அடுத்த […]
Read More
புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சி
  • By admin
  • |
புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சி உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்க உடலில் வளர்சிதை மாற்றம்  என்ற செயல்பாடு முக்கியமானது. மனிதர்களுக்கு இந்த வளர்சிதை மாற்ற செயல்பாடு இயற்கையாகவே அமைந்தது. வாழ்க்கை முறை, உழைப்பு இல்லாத நிலைக்கு மாற்றம் பெற்றதால் உடலின் இயங்கு தன்மை குறைந்து நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடைப்பயிற்சி மட்டுமே உதவும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், தினமும் சுமார் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு, […]
Read More
  • By admin
  • |
நூல் மதிப்புரை… “ஆட்டுக்குட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார் கவிஞர் குமரி ஆதவன். இந்த நூலில் அநியாயங்கள், அறியாமைகள், மூடநம்பிக்கைகள் அவற்றின் மூலம் மனித சமுதாயம் அடைந்து வரும் துன்பங்கள் அந்த துன்பங்களை கூட கடவுள், சாதி, மதம் என்ற பெயரால் ஆதரிக்க கூடிய மனிதர்கள் என்ற வகையில் மனித சமூகத்தில் நிலவி வரக்கூடிய சீர்க்கேடுகளை சுமார் 73 கவிதைகள் மூலமாக வெளிக் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர்.       ‘’நம்பிக்கையை மெச்சினோமென்று      அசரீரி சொல்ல      அநியாயமாய்ப் […]
Read More
  • By admin
  • |
வாவுபலி விவசாய திருவிழா… மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி பெருக்கினையொட்டி நடைபெறும் 99-வது வாவுபலி பொருட்காட்சி துவக்க நிகழ்வானது குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மண்டபத்தில் அன்று (18.07.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் முன்னோர்களுக்கு தற்பனம் அளிக்கும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் […]
Read More
  • By admin
  • |
சித்த மருத்துவக் கருத்தாய்வு கூட்டம்…! SAVKIA-வின் 277-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.அசரி ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் , திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.07.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில்  இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில்,திரு. இராஜன் ஆசான் மேகநோய், வாய்ப்புண், குடல்புண், வாய்நாற்றம், வாந்தி, உஷ்ண நோய்கள் இவற்றுக்கு ஏலாதி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் ஆண்மைக்குறைவு, வாதம் இவற்றுக்கு லிங்க செந்தூரம் […]
Read More
பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள்
  • By admin
  • |
பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள் நண்பர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து எனக்குத் தந்தார் – அன்பு அதை நான் 7 துண்டுகளாக்கி  7 பேருக்குப் பகிர்ந்தேன் – பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை பக்கத்து வீட்டு நண்பருக்குக் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறிந்து விடும்” என்று வாங்க மறுத்தார் – மூடநம்பிக்கை இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது. எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே “ என்றார் – உரிமை […]
Read More
மதுரையின் மாண்புமிகு உணவுகள்
  • By admin
  • |
மதுரையின் மாண்புமிகு உணவுகள் தூங்கா நகர் எனும் பெயருக்குரிய மதுரை, ‘உணவுகளின் பெரு நகரம்’ எனப் பெருமை கொண்டிருக்கிறது. சங்க காலம் முதலே ‘உண்டு உயர்ந்தோர்’ பட்டியலில் இந்நகர்வாசிகளே நகராமல் நின்று நிலைக்கின்றனர். ‘மதுரைக் காஞ்சி’ வாசிப்போர், இந்நகரத்துத் தெருக்களில் மணக்கும் விதவித உணவுகளையும்நுகர்ந்துணர முடியும். மதுரையில் ஒவ்வோர் உணவுச் சாலையையும் அடையாளம் காட்டிட அக்காலத்தில் கடை வாசலில் ‘தனியாக ஒரு கொடி’ பறக்க விடப்பட்டதும் அறிய முடிகிறது. வேறுபட்ட உணவுகளை, சுவை குன்றாது வழங்கிட அக்காலத்தில் […]
Read More
நேர்மை
  • By admin
  • |
நேர்மை நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நேர்மையில்லாமல் நடந்துக் கொள்ளும் சமயத்தில் நாம் மட்டும் ஏன் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது. நேர்மையின்றி வாழ்பவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். நேர்மையுடன் வாழ்வதால் நமக்கு என்ன கிடைக்கிறது? என்று நினைப்பவர்கள் இந்த கதையை முழுமையாகப் படியுங்கள். ஒரு நாட்டுடைய அரசர் அவருக்கு அதிகமாக வயதானதால் புது அரசரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வருகிறார். ஆனால் இந்த முறை தன்னுடைய குடும்பத்திலிருந்து இல்லாமல் மக்களில் இருந்து […]
Read More
உழைப்பு
  • By admin
  • |
உழைப்பு…. இவ்வுலகில் மனிதனாக  ஏதோ இப்பிறவி எடுத்தோம்… வாழ்ந்து விட்டு போய்விடுவோம். இருப்பதை உண்டு களித்து விட்டு வாழ்வோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். நாம் மனிதனாக அரிய பிறப்பெடுத்து உள்ளோம். செயற்கரிய காரியங்கள் படைக்கத்தான் நாம் மனிதனாக பிறந்துள்ளோம். நாம் பிறக்கும் போது நம்மை யாருக்கும் தெரியாது. நாம் இறக்கும் போது, சரித்திரம் பேச வேண்டும். வரலாற்றில் நமது பெயர் இடம் பெற வேண்டும். எந்தவொரு சிறப்பான காரியங்கள் செய்யாமல் இருக்கிறோம் என்றால் நாமும் விலங்குகளுக்கும், […]
Read More