இவ்வுலகில் மனிதனாக ஏதோ இப்பிறவி எடுத்தோம்… வாழ்ந்து விட்டு போய்விடுவோம். இருப்பதை உண்டு களித்து விட்டு வாழ்வோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். நாம் மனிதனாக அரிய பிறப்பெடுத்து உள்ளோம். செயற்கரிய காரியங்கள் படைக்கத்தான் நாம் மனிதனாக பிறந்துள்ளோம். நாம் பிறக்கும் போது நம்மை யாருக்கும் தெரியாது. நாம் இறக்கும் போது, சரித்திரம் பேச வேண்டும். வரலாற்றில் நமது பெயர் இடம் பெற வேண்டும். எந்தவொரு சிறப்பான காரியங்கள் செய்யாமல் இருக்கிறோம் என்றால் நாமும் விலங்குகளுக்கும், மரங்களுக்கும் ஒப்பானவர் தானே, அறிவு வேண்டுமா? அதற்கு வேண்டிய கடும் உழைப்பிற்கு உங்களைத் தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். உணவு வேண்டுமா? அதை அடைய பாடுபட்டே ஆக வேண்டும். கடும் உழைப்பு என்பது தான் விதி. கடும் உழைப்பு இன்பத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. முழுமனதோடு உழைப்பதற்கு தயாரானால் வாழ்க்கையில் இன்பம் சேரும். தமது அரிய ஆற்றல்களும், வலிமையும் பழக்கப்படுத்திக் கொள்ளுதலால் தான் வருகின்றன. உழைக்க உழைக்கத்தான் நமக்கு வழிகள் திறந்து கொண்டே வரும் உழைக்க தொடங்கும் போதே இப்பிரபஞ்ச பேராற்றல் நமக்கு உதவி செய்ய முனைகிறது. இப்பிரபஞ்சத்தோடு நாமும் இணைந்து செயற்கரிய செயல்கள் செய்து சாதனை படைப்போம்… பார்போற்ற வாழ்வோம்…
Leave a Reply