பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள்

பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள்

  • By admin
  • |

பலாப்பழம் கற்றுத் தரும் படிப்பினைகள்

நண்பர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து எனக்குத் தந்தார் – அன்பு

அதை நான் 7 துண்டுகளாக்கி  7 பேருக்குப் பகிர்ந்தேன் – பகிர்ந்துண்ணல்

ஒரு துண்டை பக்கத்து வீட்டு நண்பருக்குக் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறிந்து விடும்” என்று வாங்க மறுத்தார் – மூடநம்பிக்கை

இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது. எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே “ என்றார் – உரிமை

எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”  என்று கேட்டார். நாகர்கோவில் என்றேன். “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்” என்றார் – திமிர்

கீழ் வீட்டுக்குக் கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி’ என்றார் – மதம்

வீட்டுப் பணிப் பெண்ணுக்குக் கொடுத்தேன். “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க சாப்பிடப்போற முதல் பலாச்சுளை இதுதான்” என்றாள் – ஏழ்மை

நண்பர் ஒருவருக்குக் கொடுத்தேன். “ அடுத்த வருஷம் எனக்கு முழுப் பழமா கொடுக்கணும்” என்றார் – நட்பு

துணைவியாருக்கு ஒரு சுளை கொடுத்தேன் – கடமை

என்னால் ஒரு பலாச்சுளைகூட சாப்பிட முடியவில்லை – நோய் ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களைச் சொல்லித் தருகிறது.   உணர்வோம்! உயர்வுடன் வாழ்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *