வீட்டில் கொஞ்சமும் இடமில்லை என்பதுதான் அவரது பிரச்சினை. அப்பாவும்,அம்மாவும், மனைவியும், நான்கு குழந்தைகளும் அங்குத் தங்குவது அவருக்குப் பிரச்சினை.
எல்லாவற்றையும் கேட்ட குரு,உங்களுடைய கோழிகளையும் வீட்டின் உள்ளில் தங்க வை என்றார். கொஞ்சம் தயக்கம் காட்டிய பின்னும் குரு கூறியது போலச் செய்தார். அடுத்த நாள் வீட்டில் பிரச்சினைகள் என்றார் குருவிடம்.
ஆடுகளையும் வீட்டில் கெட்டு என்றார் குரு. வீட்டில் உள்ளவர்கள் எனக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது என்கின்றனர். பசுவினையும் வீட்டினுள் கெட்டு என்றார் குரு.
அடுத்த நாள் குருவினைச் சந்தித்தார். இனி மிருகங்களையெல்லாம் வீட்டிலிருந்து வெளியே தள்ளு என்றார்.
ஒரு மணி நேரம் கழிந்து வந்து, இப்போது தாராளம் வீட்டில் இடமுண்டு என்றார்.
ஏற்கெனவே இருக்கும் அழகை ரசிக்காதவர்கள் கற்பனையான அழகின் பின்னால் பயணிப்பர். உள்ளதில் அவர்கள் திருப்தியடைவதில்லை. சொந்தமாக ஏராளம் உண்டெங்கிலும் அதில் திருப்தியடையாதவர்கள் ஏராளம் உள்ளவர்களின் பின்னால் நின்று ஏங்குவர்.
Leave a Reply