மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி பெருக்கினையொட்டி நடைபெறும் 99-வது வாவுபலி பொருட்காட்சி துவக்க நிகழ்வானது குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மண்டபத்தில் அன்று (18.07.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசுகையில்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் முன்னோர்களுக்கு தற்பனம் அளிக்கும் விதமாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு நிகழ்வாகவும் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான ஆடி முதல் நாள் முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு வாவுபலி பொருட்காட்சி விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த வருடம் 99-வது வாவுபலி பொருட்காட்சியினை சிறப்பாக நடத்திட குழித்துறை நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழித்துறை நகராட்சி, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறைக்கு சொந்தமான பொருட்காட்சி திடல் போதுமான இடவசதி இல்லை என்பதை பொதுமக்கள் உள்ளிட்டோர் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் மாற்று இடம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதோடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான வி.எல்.சி மண்டபம் ரூபாய்.10 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொருட்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் வேளாண்மைத்துறை சார்பில் காட்சிபடுத்தப்பட்ட விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை நேரில் பார்வையிட்டார்கள். நடைபெற்ற விழாவில் குழித்துறை நகர்மன்ற தலைவர் திரு.பொன் ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையர் திருமதி.ராமதிலகம், நகராட்சி பொறியாளர் திருமதி.ப.குறள்செல்வி, நகர்மன்ற உறுப்பினர் திருமதி.கெ.சு.மினி குமாரி, நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் திரு.ஜி.இளங்கோவன், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.பூதலிங்கம், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Leave a Reply