பெருமை மின்னும் ராசா
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி மழிக்காத தாடி அழுக்கேறியச் சட்டை பழுப்பேறிய தலை அப்பாவின் அடையாளம். நைந்த வாழ்வை ஊக்குக்கோர்த்து பிய்ந்த செருப்போடு அணிந்திருப்பார். பண்டிகை நாட்களில் புலர்வதற்குள் செல்பவர் யாரிடம் கடன் வாங்குவாரோ துண்டின் ஒரு முனையில் மளிகை சாமான்களை உருண்டையாக  மூட்டைபோல் கட்டி முதுகுப்பக்கம் தொங்கவிட்டு கையில் ஆட்டின் தலையோடு பெருமை மின்னும் ராசா போல உறுமத்தில்தான் வீடு வருவார். நாங்கள் உறங்குவதாய் படுத்திருக்கும் இரவுகளில் நீளும் வறுமை பட்டியலை அம்மாவின் காதுகளுக்குச் சொல்லும் அவர் […]
Read More
  • By Magazine
  • |
– எஸ்.கே. கங்கா மரணங்கள் இயல்பானதுதான் என்று சொல்லி அத்தனை எளிதாகக் கடந்து போக முடியாத ஒரு மரணம் நேற்று சம்பவித்திருக்கிறது. (26.05.2026) பெரிய பட்டங்களிலோ, அதிகாரத்தின் ஆசனங்களிலோ அவன் அமர்ந்திருக்கவில்லை. ஆனால், நேற்று பிற்பகல் தொடங்கி முகநூல் முழுக்க அவன் நினைவுகளால் நிறைந்திருக்கிறார். தன் வாழ்க்கைப்பயணத்தில் அவன் யாரையெல்லாம் பாதித்தாரோ, அந்த உள்ளங்கள் யாவும் இன்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. அவனை அறிந்தவர்கள் எவராலும் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 60 வயதைக் கூடக் கடக்காதவன். […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. பிளாஸ்க் (Flask) பாட்டிலுக்குள் வைக்கப்படும் நீர் மட்டும் சூடாகவே இருப்பதற்கு காரணம் என்ன? பிளாஸ்க்கின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையே வெற்றிடம் (Flask) இருக்கும். வெப்பம் கடத்தப்படுவதற்கு ஏதேனும் ஒரு ஊடகம் (காற்று அல்லது பொருள்) தேவை. வெற்றிடத்தில் வெப்பம் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் நடைபெறாது என்பதால் வெப்பம் வெளியேறாமல் நீர் சூடாகவே இருக்கிறது. 2. பாதரசம் மட்டும் ஏன் திரவ நிலையில் இருக்கிறது? பாதரச அணுக்களுக்கிடையேயான பிணைப்பு (Metallic […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… 5.1.2 வான் கங்கைகள் (Galaxies) நாம் கண்ணால் காணுகின்ற கோடிக்கணக்கான விண்மீன்களால் செறிவுற்று காணப்படும் மிகப்பெரிய தொகுப்புகளே “வான் கங்கைகள்” எனப்படும். அவைகள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஒரு சிறிய வான்கங்கையானது (Galaxy) கோடிக்கும் மேற்பட்ட விண்மீன்களைப் பெற்றிருக்கும். ஒரு பெரிய வான்கங்கையானது முப்பது லட்சம் கோடி (3000x10000x1000000 lakhs) (3000 billion) விண்மீன்களைப் பெற்றிருக்கலாம் எனவும் விண்ணறிவாளர்கள் கருதுகின்றனர். […]
Read More
தமிழவேள் என்னும் கரந்தைச்செல்வர்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி இலக்கியம் குறிப்பது மூன்று தமிழ்சங்கங்கள். பன்னூறு ஆண்டுகளுக்கு பின்னர் பாண்டியனின் தலைநகராம் மதுரையில் 1801- ஆம் ஆண்டில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டார் மாமன்னர் பாண்டிதுரை. அதற்குச் சரியாக பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 1911- ஆம் ஆண்டு தஞ்சையை அடுத்த கரந்தை என்னும் பேரூரில் வடவாற்றங்கரையில் பிறிதோர் தமிழ்ச்சங்கமும் உருவாகியது. அருள் தமிழோடு ஆங்கிலமும் கற்ற மருத்துவர் கோபாலசாமி ராஜாளியார் தஞ்சையில் தொடங்கிய வித்தியா நிகேதனம் என்னும் தமிழ்ச்சங்கம் செயல்படாது போயிற்று. அதற்கு ஈடு செய்யும் […]
Read More
மார்பக புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும்  வைட்டமின் D புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி வைட்டமின் D மார்பக புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துமா?  சுமார் 79% வரை புற்று நோய் சிகிச்சையை நன்றாக மேம்படுத்தும் என அறுதியிட்டுக் கூறுகின்றனர விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து, அதன் முடிவுகள், உணவியல் மற்றும் புற்றுநோய் (Nuitrition &Cancer) ஆய்வுப் பத்திரிக்கையில் 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் 28, வெளிவந்தாகிவிட்டது. இப்போது நாம் வைட்டமின் என்றால் என்ன? நம் உடலில், அதன் பணி என்ன? அது என்ன நன்மையை மனிதனுக்குத் […]
Read More
கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்
  • By Magazine
  • |
சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் ! ‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் அறியப்படாத பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வரும் இவரை, நம் புதிய தென்றலுக்காக சந்தித்தோம். கேள்வி: இருபது ஆண்டுகால நீண்ட சமூக சேவைப் பயணம்… இந்த ஆர்வம் எப்படித் தொடங்கியது? பதில்: சமூகத்தில் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ உண்ணப்படுவோம் என்று நாம் பயப்படுகிறோம், ஏன்? இதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்ணப்படுவோம் என்று ஏன் அவ்வளவு பயப்பட வேண்டும்? எல்லா வாழ்க்கையிலுமே நாம் உண்ணுகிறோம். உண்பதன் மூலம் உயிர்களை அழிக்கிறோம். நீங்கள் எதை உண்டாலும் கொல்கிறீர்கள். நீங்கள் கொல்லத்தான் வேண்டும். ஏனெனில் உயிர் உயிரைத் தான் உண்ண முடியும். வேறு வழியில்லை. எனவே எவருமே சைவமாக உண்மையில் இருக்க முடியாது. யாரும்! எல்லோருமே அசைவம் தான். ஏனெனில் நீங்கள் உண்ணும் எதுவுமே உயிர்தான். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் ஆறறிவு விளக்கம் குறித்துப் பேசினார். மேலும் மூலநோய்களுக்கு கந்தக செந்தூரம், நரம்புச்சுருக்கம், கட்டிகளுக்கு வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார். திரு. சுப்பிரமணிய ஆசான் தமரக வாயு குணமாக மருந்து, சொறி, சிரங்கு, படை, […]
Read More
கிரியேட்டினின் பற்றி அறிவோம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட உதவும் ஒரு முக்கியமான இரத்தக் கழிவுப்பொருள் எனலாம். கிரியேட்டின் சில செய்திகள் இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரிப்பது, சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள இந்த கழிவைக் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. தசை ஆற்றலை பயன்படுத்தும் போது கிரியேட்டினின் […]
Read More