SAVKIA-வின் 283-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு. கமலகண்ணன், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.01.2025 மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் மரு.கமலக்கண்ணன் மதிமயக்கி மூலிகை சேர்ந்தாடும் பாவை மூலிகைகளை காண்பித்து மருத்துவ பயன்களை கூறினார். மேலும் நீரழிவு புண், எல்லாவித புண்கள் குணமாகுவதற்கான களிம்பு செய்முறையை கூறினார். மேலும் இருமல், சளி, ஆஸ்துமாவிற்கு மருந்து செய்முறையை கூறினார். ஆண்களுக்கு விந்து கட்டு லேகியம் செய்முறையையும், வயிற்றுப்புண் குணமாக எளிய மருந்து செய்முறையையும், நரம்புத்தளர்ச்சைக்கு சூரணம் செய்முறையையும், கரள் சூலைக்கு எளிய பூச்சு மருந்தினையும் தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக திரு.ஸ்டீபன் ஆசான் ஆஸ்துமா, இரைப்பிருமல், மூச்சிரைப்பு இவற்றுக்கு எளிய மருந்து முறைகளைக் கூறி, அதற்கான வர்மப்புள்ளி தூண்டுதல்களையும் கூறினார்.
அடுத்ததாக, திரு. ஜெரின் ஆசான் சிலாசத்து பற்பம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக மரு.ஷேக் முகமது தலைநீரு காரணமாக வரும் கழுத்துவலிக்கு எளிய மருந்தினையும், Food Poison-க்கான எளிய மருந்தினையும், எல்லா விதமான காய்ச்சல், மூலம், பௌத்திரம், வாதநோய்களை குணப்படுத்தும் பச்சை கற்பூர மாத்திரை செய்முறையை கூறினார்.
அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் வாய்வு, படர் கிரந்தி, கைகால் பிடிப்பு, மேக வெட்டை, வண்டுகடி, கருமேகம், சொறிசிரங்கு, கரப்பன் இவற்றுக்கு பாவு சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் மூலநோய்க்கு களிம்பு செய்முறையையும், எண்ணெய் மற்றும் மூலநோயை குணப்படுத்தும் லேகியம் செய்முறையையும், இரத்த மூலம் குணமாக எளிய கசாயம் செய்முறையையும் கூறினார்.
கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் ஆசான் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
Leave a Reply