நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல். இராஜேந்திரா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் வைத்து நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் வர்ம மருத்துவ மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த. இராஜேந்திரன் அவர்கள் வர்ம மருத்துவத்தில் நீரழிவு நோயின் வரலாறு , வர்ம மருத்துவத்தின் மூலம் நீரிழிவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் நீரிழிவும் வர்ம மருத்துவமும் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் உதவி இயக்குனர் டாக்டர்.சரோஜா, சென்னை அரசினர் சித்த மருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சசி, சென்னை அரசினர் சித்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் லஷ்மண் ராஜ், டாக்டர் ஆனந்தராஜ், திருமதி இந்திரா ராஜேந்திரன், திரு. ராமசாமி, பஞ்சபட்சி நாராயணன், தாமஸ் ஆசான், கிறிஸ்துதாஸ் ஆசான், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply