கடிதம் கண்டீரா?

கடிதம் கண்டீரா?

  • By Magazine
  • |

மதிப்பிற்குரிய ஆசிரியர் பெரும்தகை அவர்களே

ஒருவர் எதைக் கற்றுக் கொள்ளவில்லையோ அதை பயிற்றுவிப்பது மட்டும் கல்வி அல்ல. நாம் எப்படி இல்லையோ அப்படி மாற்றுவது தான் கல்வி என்பதை நீங்கள் உணர்வீர்கள். பாடநூலை மட்டும் கற்றுத்தரும் இயந்திரமாக செயல்படாதீர்கள். மாறாக வாழ்க்கை கல்வி வாழ்க்கை மூலம் மற்றும் வாழ்க்கை முழுவதும் கல்வி என்னும் நுணுக்கங்களை கற்றுத்தாருங்கள்.

ஒரு பறவைக்கு வேண்டிய தீனியை அதை பார்த்து எறிந்தால் அந்த பறவை பறந்து போவதில்லை மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து அந்த தீனியை விரும்பி தின்று கொண்டு இருக்கிறது. அதுபோலவே நீங்கள் கற்றுத்தரும் பாடங்களை நான் ஆர்வமுடன் பயில வேண்டும். உங்களது வருகைப் பதிவேட்டில் என்னை ஓர் அங்கமாக நினைக்காதீர்கள். எருமைமாடு, கழுதை படிக்க வந்தநேரம் மாடு மேய்க்கப் போயிருக்கலாம் என்றெல்லாம் எங்கள் மனம் நோகும்படி திட்டாதீர்கள், நானும் உங்களை போன்று உயிருள்ள உணர்வுள்ள மனிதன்தான். மனிதருக்குரிய மதிப்போடு என்னை நடத்துங்கள். அப்பொழுது தான் நானும் நல்ல மாணவருக்குரிய மரியாதையோடு உங்களிடம் நடந்துகொள்ளக் கற்றுக்கொள்வேன்.

நீங்கள் என் வளர்ச்சி பாதையில் அக்கரை கொண்டுள்ளீர்கள் என்பதை நான் உணர்ந்து கொள்ள முடியும். நான் பெறும் மதிப்பெண்களை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். மாறாக நான் எடுக்கும் முயற்சியை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.  எனது திறமைக்கு அப்பால் எதிர்பார்க்காதீர்கள் ஆனால் அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்த தவறாதீர்கள்.

சொல்

பள்ளிக்கூடமும், பாடங்களும் தான் எனது வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று நான் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். எனக்கு உங்கள் பாடத்திட்டத்தை விட வேறு பாடங்கள் நன்கு பிடிக்கலாம். அதில் அதிக ஆர்வம் இருக்கலாம். அவற்றில் அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம் அல்லது கற்றலை விட வேறு துறையில் அதிக ஆர்வம் இருக்கலாம். எனது ஆர்வம் எது என்று கண்டறிந்து செயல்பட உதவுங்கள். எனது ஆர்வத்தை உற்சாகப்படுத்தாவிடினும் பரவாயில்லை, உதாசினப்படுத்தாதீர்கள் காரணம் நாளைக்கு ஒரு தாமஸ் ஆல்வா எடிசனைப் போலவும் தென்கச்சி சுவாமிநாதனைப் போலவும் வரவேண்டும் ஆனால், அதை இழக்க நீங்கள் காரணமாக அமைந்துவிடக்கூடாது.

வாழ்க்கையில் நாம் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரிய விசயம், ஆனால் அதேசமயம் மற்றவர்களை துன்புறுத்தாமல் தன்னுடைய முயற்சியில் முன்னேறி சாதனைப்படுவதுதான் பாராட்டுக்குரியது.

வளர்ச்சியில் அக்கரை

ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற நீயூட்டனின் கேள்வி ஞானமே புவி ஈர்ப்பு விசையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தது.

எனக்குள் கேள்வி ஞானத்தை கற்று தாருங்கள். ஒளி நகல் (ஜ்மீக்ஷீஷீஜ் )போல் அப்படியே ஒப்புவிப்பதையோ எதிர்பாக்காதீர்கள். நானே கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க உதவுங்கள். 

உனக்கு என்ன தெரியும்? என்று சொல்லி ஒரு போதும் நான் கேட்கும் கேள்விகளையோ நான் சொல்லும் கருத்துக்களையோ நிராகரிக்காதீர்கள். ஒருவேளை நான் கேட்க்கும் கேள்விகள் முட்டாள் தனமாக இருந்தாலும் தயவுசெய்து கவனியுங்கள். எனது பய உணர்வும் வெட்கமும் தொலைந்து போவதற்கு அது வாழகாவமாக அமையும், அவ்வாறே நான் கேட்பதை நீங்கள் கவனித்தால்தானே நானும் நீங்கள் சொல்வதைக் கவனித்து கற்றுக் கொள்வேன்.

ஊக்கமும் ஆக்கமும் பயன் பாட்டுக்குரியது

எது வேண்டாம் என்று நாம் ஒதுக்குகிறோமோ அது நம் பயன்பாட்டுக்கு வரும். என் வளர்ச்சியில் அக்கறை உண்டென்றால் தேவைப்படும் வேளையில் எல்லாம் என்னை கண்டிப்போடு நடத்துங்கள். நான் வெளியில் ஒரு வேளை முரண்டு பிடிப்பது போல் தோன்றினாலும், அது எனக்கு தேவை என்பதை நான் நிச்சயம் உணர்ந்துகொள்வேன் ஒரு போதும் என் வகுப்பு தோழர்கள் தோழிகள் முன் என்னைக் கேலி செய்யாதீர்கள். அது என்னைக் காயப்படுத்தும். உங்களுக்கு எதிராக என்னைச் செயல்பட தூண்டும். தனியாக என்னை அழைத்து நீங்கள் சொல்லும் விமர்சனங்கள் மிகுந்த பலனளிக்கும். நான் திருந்தி வாழ்வதற்கு உதவிச் செய்யும்.

இன்னொரு மாணவனை எனக்கு எடுத்துக்காட்டாகவோ இன்னொருவரோடு ஒப்பிடவோ செய்யாதீர்கள், அவ்வாறு நீங்கள் செயல்படும்போது அவனை (ளை )யும் உங்களையும் ஒருவேளை நான் வெறுக்க நேரிடும். நான் சிறந்தவனாக இருந்தாலும் என்னை உதாரணத்துக்காக பிறரிடம் புகழாதீர்கள் அதுவும் அடுத்தவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும், தகுந்த நேரத்தில் நீங்கள் எனக்கு கொடுக்கும் அங்கீகாரம் அது எனக்கு வரவேற்பை அளிக்கும். அதைவிட இருக்கின்ற இயல்பிலேயே ஏற்றுக்கொள்வது மிகச் சிறந்தது.

மன ஒருமைப்பாடு

சிந்தனையோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால், எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் மன ஒருமைப்பாடு அவசியம். இதை ஆங்கிலத்தில் கான்செண்ட்ரேஷன் என்று சொல்லுவார்கள். சூரிய ஒளிக்கதிர்களை ஒரு லென்ஸ் மூலம் பிரதிபலித்து ஒரு பேப்பர் அல்லது துணியின் மீது அந்த ஒளியை ஒருமுகப்படுத்தும் பொது அதில் எப்படி நெருப்பு பற்றுகிறதோ, அதே முறை தான் எந்த விஷயத்திலும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் அது நிச்சயம் வெற்றி பெறும். சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவுவாற்ற இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்ற சமயம், கேம்ப் இர்லிங் என்ற இயற்கை எழில் மிகுந்த ஒரு இடத்திற்கு சென்றார். அங்கிருந்த பொழுது வீதி வழியே இயற்கைக் சூழலை ரசித்தபடி நடந்து சென்றார். அப்பொழுது ஒரு நீரோடையின் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தில் சில இளைஞர்கள் கூட்டமாக நின்று தண்ணீரில் மிதந்து கொண்டு சென்ற முட்டை ஓடுகளை குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டதில், ஒரு ஒரு முட்டை ஓட்டை கூட தொடவில்லை. அவர்களுக்குள் யார் குறிபார்த்துச் சுடுவது என்பதில் போட்டியும் டென்சனும், யாரும் குறி பார்த்துச் சுட முடியவில்லை. விவேகானந்தர் கவனிப்பதை பார்த்து விட்டு அவரிடம் சென்று குறி பார்த்துச் சுடுவது என்பது எளிதான விஷயமில்லை. நீங்கள் கூட துப்பாக்கியால் சுட்டால் அதைச் சுட முடியாது முடிந்தால் முயற்சி செய்துப் பாருங்கள் என்று அவரிடம் துப்பாக்கியை கொடுத்தார்கள். விவேகானந்தர் தயங்கவில்லை முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட்டார், முட்டை ஓடுகள் ஒவ்வொன்றயும் சிதற வைத்தார்.

 இளைஞர்களுக்கு ஆச்சர்யம் இருந்தாலும், அவர்கள் சமாளித்தார்கள் நீங்கள் துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்று இருப்பதால் உங்களால் சுட முடிகிறது என்று சொன்னார்கள். அதற்க்கு விவேகானந்தர் சிரித்தபடி நான் என் வாழ்நாளில் இதுவரை துப்பாக்கியை தொட்டு கூட பார்த்ததில்லை. நண்பர்களே, எனக்கு இதுதான் துப்பாக்கி சுடும் முதல் அனுபவம் என்று சொல்ல அதை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்களது முக பாவத்தைப் புரிந்து கொண்ட விவேகானந்தர் எல்லாம் மன ஒருமைப்பாட்டில் தான் இருக்கிறது. நீங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உங்கள் கவனத்தை ஒருங்கிணைக்க முடியாமல் குறிபார்த்ததில் தவறிவிட்டீர்கள்.

 ஆனால் எனக்கு அதை குறிபார்த்துச் சுட வேண்டும் கவனம் தான் முழுமையாக இருந்தது அதனால் என்கவனம் முழுவதையும் குறிபாரப்பதில் ஒருங்கிணைத்தேன். சுட்ட போது குறி தவறவில்லை.  இளைஞர்கள் குறிபார்த்து சுடுவதில் உள்ள உண்மையை புரிந்துகொண்டனர்.

இளைஞர்கள்

ஆசிரியர் பெருத்தகை அவர்களே எனக்கும் அதுபோல் அக்கறை வேண்டும் என் வளர்ச்சியில் அக்கறை உண்டென்றால் தேவைப்படும் வேளையிலெல்லாம் என்னை கண்டிப்போடு நடத்துங்கள். நீங்கள் எனக்கு தேவைதான் என்பதை நிச்சயம் உணர்ந்துக்கொள்வேன். உங்களுக்கு எதிராக என்னை சொல்லும் விமர்சனங்கள் மிகுந்த பலனளிக்கும். நாம் திரும்பி பார்ப்பதற்கும், திருத்திவாழ்வதற்கும் உதவிசெய்யவும்.

உனக்கு என்ன தெரியும் என்று சொல்லி ஒருபோதும் நான் கேட்கும் கேள்விகளையே நான் கருத்துக்களையோ நிராகரிக்காதிர்கள். ஒரு வேளை நான் கேட்கும் கேள்விகள் முட்டாள் தனமாக இருந்தாலும் தயவுசெய்து கவனியுங்கள்.

எனது பய உணர்வும் வெட்கமும் தொலைந்து போவதற்கு அது வாய்பாக அமையும் அவ்வாறே நான் கேட்பதை நீங்கள் சுவனித்தால்தானே நானும் நீங்கள் சொல்வதை கவனிக்க கற்றுக்கொள்வேன்..

உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் அரசியல் நிலை பாடுகளையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் அவற்றிக்கு தீர்வு கொடுப்பதோ அவற்றை அளவிடுவதே எனது வேலையல்ல. தயவு செய்து 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் தயாரித்து வைத்திருத்தவற்றை புதுப்பியுங்கள் அந்த குறிப்பு நன்புதுமையைப் பிறப்பெடுப்பதற்கு அது வழிகாட்டும் எப்போதும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். துதிபாட வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள் நான் எப்போதும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன் . ஆனால் நன்றியை சொற்களில் சொல்லி விட முடியது வாழ்வில் நிச்சயம் காட்டுவேன், என் போன்ற மாணாக்கரின் உணர்வு இதுவாக தான் இருக்கும் என்ற உணர்வில் உங்களுக்கு இக்கடிதம் எழுதியுள்ளேன். பிழைகளை சிற்பமாக்கிட உளி தேடுங்கள். அன்பு ஆசிரியர் பெருந்தகை அவர்களே, நீங்களும் ஒரு காலத்தில் மாணவராக இருந்தீர்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் முதல் மதிப்பெண் பெறவில்லையோ? ஒரு போதும் எதையும் மறந்ததில்லயே? தொடர்ந்து உங்களையே நீங்கள் அனுபவமாகி படியுங்கள்.

  C. முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *