தினமும் வெறும் வயிற்றில் 1 மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறைவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். மாதுளை இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மாதுளை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. மாதுளை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வருகிறது. இது தவிர மாதுளை இரத்த அழுத்த பிரச்சனையையும் கட்டுப்படுத்துகிறது. தினமும் வெறும் வயிற்றில் மாதுளை சாறு குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மாதுளை மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.
– சஜிபிரபு மாறச்சன்
Leave a Reply