• By Magazine
  • |
கவிமுகில் பெ.அறிவுடைநம்பி காலம் வழங்கிய வாய்ப்பைக் கொண்டு களத்தில் இறங்கி விளையாடு! இலக்கை எட்டும் திறமை உனக்குள் இருக்கும் வரையில் போராடு! வெற்றி நிச்சயமெனும் உறுதிப்பாட்டை நெஞ்சில் பதித்து கற்று விடு! சாதனைப் பாதையில் தடம் பதிக்கும் சாகசப் பறவை ஆகிவிடு! முன்னேற்றம் எனும் மூலதனத்தை அடிப்படை யாக்கி நடைபோடு! தொடர் முயற்சியே பிரதானம் என்று மும்முரமாக செயலாற்று! கடின உழைப்பின் விளைச்சல் அதுவென கண்டும் அறிந்தும் மகிழ்ந்து விடு!
Read More
சொற்களில் முளைத்த நிலம்
  • By Magazine
  • |
நூலறிமுகம் – கூடல்தாரிக் ‘முதலெனப்படுவது நிலத்தோடு பொழுதே’ என்பார், தொல்காப்பியர்.அந்த வகையில் நிலமே மனிதனின் முதல் அடையாளமாகத் திகழ்கின்றது. இத்தகு சிறப்பு மிகுந்த நிலத்தினை உயிர்ப்பாக வைத்திருக்கும் உழுகுடிகளின் வாழ்வைப் பேசுகின்றன. ஏர் மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைத்தொகுப்பு..  இயற்கைச்சீற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அபகரிப்பு என நிலம் எளியவர்களின் கரங்களை விட்டு வெளியேறிச்சென்று விடுகின்றது.நிலமற்ற மனிதர்களின் வாழ்வு வார்த்தைகளால் வடிக்க இயலாதது. ஏர் மகாராசன் அவர்கள் மனிதர்களின் துயரங்களை நிலங்களும் அடைவதாக எழுதியிருப்பது இத் தொகுப்பினை […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By admin
  • |
வித்துவர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான நாங்குகுற்றி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வித்துவர்மம் பற்றி அறிவோம். வித்துவர்மம், விதைப்பையின் பின்புறம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பெண்களுக்கு அல்லிவர்மம் என்ற பெயரில் அமைந்துள்ளது. அண்ட வர்மம், பீஜக்காலம், பரல் வர்மம், ஆந்திரக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “விதமான வித்துறையில் வித்துவர்மம் விளக்கமுடன் மங்கையர்க்குஅண்டமென்பார்”.                                                                                                                 – வர்ம மடக்குநூல் மேலும், போக்கென்ன தண்டிடையில் நீருகட்டும்                                 […]
Read More
சமூகசேவகருக்கு பத்மஸ்ரீ விருது              கிடைக்குமா?
  • By Magazine
  • |
– சந்திப்பு : ஜி. ஜெயகர்ணன் என் உடலில் பலம் இருக்கும் வரை சமூக பணி தொடரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சமூக சேவகர் ராஜகோபால். இவர் சுமார் 750 -க்கு மேற்பட்ட அனாதையான இறந்த உடல்களை அடக்கம் செய்தும் விபத்துகளில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும் உள்ளார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மனநோயாளிகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களை காப்பகங்களிலும் சேர்த்து நிஜ கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். இவரை புதிய தென்றலுக்காக மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். […]
Read More
படைப்பாளியான பனைத் தொழிலாளி!
  • By admin
  • |
ஏராளமான பலன்களை வாரிக் கொடுக்கும் மரங்களில் முக்கியமான பனங்கற்கண்டு என அதன் பலன்கள் ஏராளம். அவற்றோடு கைவினைக் கலைஞர்களையும் கலைப் பொருட்களின் ஊடே வாழ வைத்துக் கொள்வதிலும் பனை மரத்திற்கு இணை இல்லை! இத்தகு பனையின் பெருமிதம் குறித்தும், பனை சாகுபடி நுட்பங்கள் குறித்தும் முன்னாள் பனை தொழிலாளியான அன்பையன்(67) என்பவர் கட்டுரைத் தொகுப்பாக எழுதி நூலாக்கியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ‘பனையோடு உறவாடு’ என்னும் அந்தப் புத்தகம் பனை மரத்தை நடுவது, வளர்ப்பது, சாகுபடி நுட்பங்கள், கருப்பட்டி, […]
Read More
உண்மையைத் தேடவோ…
  • By Magazine
  • |
மாயையை விலக்கவோஅவசியமில்லை – ஓஷோ உண்மையைத் தேட வழியில்லை. ஏனெனில் உண்மை தொலைவில் இல்லை. உண்மை “அங்கே” எங்கோ இல்லை. எனவே அதனிடம் நீங்கள் போக வேண்டியதில்லை. அதை நீங்கள் அடைய வேண்டியதில்லை. உண்மையை நீங்கள் தேட வேண்டியதில்லை. ஏனெனில் தேடுபவரின் சொந்த ஜீவனே அது. தேடுபவரை எப்படி நீங்கள் தேட முடியும்? அறிகிறவரை எப்படி நீங்கள் அறிய முடியும்? அது சாத்தியமில்லை. உங்களை நீங்களே தேட முடியாது. நீங்களே உண்மையாக இருக்கிறீர்கள். எனவே எல்லா தேடலும் […]
Read More
பேரரசின் முடிவு
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: ச ஆதத் ஹஸன் மன்டோ தமிழில்: நாணற்காடன் தொலைபேசி ஒலித்தது. அருகில் மன்மோகன் அமர்ந்திருந்தான். ரிசீவரை எடுத்து, “ஹலோ… ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபைவ் செவன்” என்றான். எதிர் முனையிலிருந்து “மன்னிக்கவும்… ராங் நம்பர்.” என்று பதில் வந்தது. மன்மோகன் ரிசீவரை வைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான்.      அவன் இந்தப் புத்தகத்தை இருபது முறைக்கும் மேல் படித்திருப்பான். அத்துனை முறை படிக்குமளவுக்கு அந்தப் புத்தகத்தில் அவ்வளவு சிறப்பு எதுவும் இல்லை. […]
Read More