நமது மூலிகை மருத்துவர்
இன்சுலின் செடி, பிரேசில் மற்றும் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. இந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும் தன்மை இச்செடிக்கு இருப்பதால் இன்சுலின் செடி என பெயர் உண்டாயிருக்கிறது.
ஆனால் இது இன்சுலின் ஹார்மோனுக்கு மாற்று அல்ல. இச்செடியின் இலையை மட்டும் சாப்பிட்டு நீரிழிவு நோயை முழுவதும் கட்டுப்படுத்துவது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
இச்செடி தண்ணீர் வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். ஈரப்பதமுள்ள மண் ஏற்றது. தண்டுகளை வெட்டி நடவு செய்யலாம்.
இலைகள் நீள்வட்ட வடிவத்தில் பசுமையாக சற்று தடிமனாக புளிப்பு சுவையுடன் இலை காம்பின்றி தண்டை சுற்றி பிடித்திருக்கும்.
பூக்கள் அழகாக, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இச்செடி பூவுடன் அழகாக இருப்பதால் தோட்டங்களில் அழகு செடியாக வளர்க்கலாம். மேலும் வெளிச்சமாக இருக்கும் வீட்டின் உட்பகுதிகளிலும் தொட்டிகளில் அழகிற்காக வளர்க்கலாம்.
இது அழகு கொடுப்பது மட்டுமன்றி காற்றை சுத்தம் செய்து நல்ல காற்றை நாம் சுவாசிக்க கொடுக்கிறது. மேலும் நல்ல மருத்துவ குணங்களையும் பெற்றிருக்கிறது.
தாவரவியல் பெயர் : Costus igneus
ஆங்கில பெயர்கள் : Fiery costus, Spiral flag, insulin plant
இதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் Corosolic acid மற்றும் விட்டமின் C சத்து, நார்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புசத்து, Quervetin, Diosgenin மற்றும் புரதசத்தும் அடங்கியுள்ளது.
இன்சுலின் செடியின் மருத்துவ பயன்கள்
1. மதுமேகம் என்னும் நீரிழிவு நோய்க்கு
இன்சுலின் செடியின் இலை 1 எண்ணம் எடுத்து ஆகாரத்திற்கு முன் தினம் இருவேளை கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டு, இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து, அதற்கு ஏற்ப இலைகளின் எண்ணிக்கையை கூட்டியோ அல்லது ஒருவேளையோ தொடர்ந்து சாப்பிடலாம். இது நிரிழிவு நோய்க்கு சிறந்தது.
2. நோய் எதிர்ப்பு சக்திக்கு
இன்சுலின் செடியில் விட்டமின் C சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் உள்ளது. ஆகவே இதன் இலை 2 எண்ணங்கள் பறித்து துண்டுகளாக்கி 2 டம்ளர் தண்ணீரில் இட்டு 1 டம்ளராக வற்றவைத்து, ஆறினதும் சிறிது தேன் கலந்து தொடர்ந்து குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3. இருதய ஆரோக்கியத்திற்கு
இன்சுலின் செடி இலையில் பொட்டாசியம் மற்றும் நார்ச்த்தும் அதிகம் உள்ளது. ஆகவே இது இரத்த குழாய்களை தளரச் செய்து அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இருதய ஆரோக்கியத்தை பேணுகிறது. இதற்கு இன்சுலின் இலையை காய்த்து பானமாகவோ (Tea) அல்லது இலையை உலர்த்தி பொடித்த சூரணம் அரை கரண்டி அளவு தேனிலோ தொடர்ந்து சாப்பிடலாம்.
4. குடல் ஆரோக்கியத்திற்கு
இன்சுலின் இலை குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்கிருமிகளை ஊக்குவித்து குடல் நலத்தை பேணுகிறது. மேலும் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கலுக்கும் சிறந்ததாக இருக்கிறது.
5. தொண்டைவலி, இரைப்பு நோய்க்கு
இன்சுலின் இலை 2 எண்ணம் எடுத்து கசாயமிட்டு சிறு சூட்டில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இது தொண்டைவலி, இரைப்பு நோய், காய்ச்சல் இவற்றிற்கு சிறந்தது.
6. தோல் ஆரோக்கியத்திற்கு
இன்சுலின் செடி இலையை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர தோல் சுருக்கம் மாறி தோல் இறுக்கமடையும், பொலிவு உண்டாகும்.
7. புற்றுநோய் தடுப்பிற்கு
இன்சுலின் செடி இலையில் புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் உள்ளதால் இதனை தினம் ஒரு இலை வீதம் கசாயமிட்டு தேன் கலந்து குடிக்கலாம். மேலும் நாட்பட்ட நோய்களுக்கும் சிறந்தது.
8. காற்று சுத்தமடைய
இன்சுலின் செடி காற்றில் உள்ள கரியமில (CO2) வாயுவை குறைத்து நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்குவதால் வீட்டின் உள்ளே மற்றும் தோட்டத்திலும் வைத்தும் வளர்க்கலாம்.
9. கவனிக்க வேண்டியவைகள்
Leave a Reply