தற்கொலை ஒரு தீர்வல்ல

தற்கொலை ஒரு தீர்வல்ல

  • By Magazine
  • |

C. முருகன்

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

படிப்பில் மதிப்பெண் கிடைக்கவில்லை, கல்லூரிகளில் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை, + 2 முடிந்ததும் நாம் விரும்பிய படிப்பில் சேர முடியவில்லை, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காதல் தோல்வி, வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் என இப்படி பல பிரச்சனைகளுக்கு இன்று நம் சமூகத்தில் தற்கொலை தீர்வாகி விட்டது. இதுபோன்ற நிலை மாற வேண்டும்.

“என் மனமும் என் எண்ணங்களும் நானும் ஒன்றே”

இதை தினமும் காலையும், மாலையும் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை உச்சரியுங்கள். இதனால் உங்களுக்கு மன அமைதியும், புத்தி தெளிவும் கிடைக்கும்.  இதை நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

எல்லா பெற்றோர்களுக்கும் தன் குழந்தை L.K.G முதல் முதுநிலை படிப்பு வரை படித்து பட்டம் பெற வேண்டும் என்று தங்கள் மனதில் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை வீணாகக் கூடாது. நம் நாட்டின் பெரிய பெரிய மாமேதைகளை சொன்னால் அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள், நம் நாட்டின் மூத்த குடிமகனும், விஞ்ஞானியும் உலகம் போற்றும் அளவிற்கு வளர்ந்த ஐயா. திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள், இப்போது நாட்டின் மூத்த குடிமகளாகிய திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் இன்னும் சொல்ல போனால் நிறைய P.T. உஷா, கல்பனா சாவ்லா இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். இதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளுங்கள். எதற்கு எடுத்தாலும் தவறான முடிவுக்கு வராதீர்கள்.

தங்கள் குழந்தைகளைப் பற்றி பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும். மாணவர்கள் தினமும் பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து வந்தவுடன் அன்றைய தினம் காலையிலிருந்து மாலை வரை நடந்த எல்லா விஷயங்களை தங்கள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை பெற்றோர் செவி கொடுத்து கேட்க வேண்டும். அவர்களை புரிந்து கொள்ள வேண்டும். இதில் தாய்க்கு தான் முக்கியத்துவம் அதிகம். ஏனெனில் ஒரு குழந்தையைப் பற்றி தாய்க்கு தான் தெரியும். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் தாயால் புரிந்து கொள்ள முடியும். இதனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி தாயிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். அப்போது தான் அவர்களால் உங்களுக்கு நல்ல யோசனையும், தீர்வும் கிடைக்கும். அப்போது நீங்கள் மாற்று வழியை யோசிக்க மாட்டீர்கள்.

அதுபோல வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அதாவது அதிகமான வேலைப்பளு காரணமாகவோ அல்லது ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் அதனை வெளியே சொல்ல முடியாமல் மனதில் வைத்துக் கொண்டு மன அழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கிறது.

இவ்வாறு நடக்கும் போது இந்த பிரச்சனையை பற்றி தன் தாயிடம் மனம் திறந்து பேசுங்கள். அதனால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும். அவர்களால் சில தீர்வுகளும் கிடைக்கும். தற்கொலை என்ற எண்ணம் சற்றும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

நீங்கள் எடுக்கும் தவறுதலான முடிவுகள் பத்திரிக்கைகளில் வருகின்றது. அந்த நிலைமை இனி வேண்டாம்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு அவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். அதன்படி செயல்படுங்கள். எந்தக் காரணத்தை கொண்டும் தப்பான முடிவுக்கு வராதீர்கள்.

இதை நீங்கள் வீட்டிலோ பள்ளியிலோ, கல்லூரியிலோ தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ செய்யலாம். அது எப்படி என்று கூறுகிறேன். 10 அல்லது 20-க்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் எல்லாத்துறையையும்  சேர்ந்தவர்களும் செய்யலாம்.

மாணவர்களே அவரவர் ஒரு கை அளவு எடுத்து இடைவெளி விட்டு நில்லுங்கள்.. நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இரண்டு கைகளையும் உடம்போடு சேர்த்து வையுங்கள். அமைதியான இடமாக இருக்க வேண்டும். வேறு எந்த ஓசையும் நம் காதில் விழாமல் இருக்க வேண்டும்.

பார்வை நேராக இருக்க வேண்டும். அப்போது ஒருவர் இதைச் சொல்ல மற்றவர்கள் கேட்டு ஒரே குலமாக சொல்ல வேண்டும். உங்கள் கவனம் வேறு எங்கும் திரும்பாமல் இருக்க செய்யுங்கள். அறைக்குள் வைத்தும் செய்யலாம். திறந்த வெளியிலும் செய்யலாம்.

அறைக்குள்ளே செய்யும் போது ஜன்னல், கதவுகள் திறந்து இருக்க வேண்டும். இந்த மந்திரத்தைச் சொல்லும் போது மனம், புத்தி தெளிவுபடும். பிரபஞ்சத்தில் பிராணவாயு சுத்தமான காற்று இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் காந்த சக்தியோடு இணைந்து இருக்கிறது. இந்த காந்த சக்தியானது நம் உடம்பில் வந்து சேரும். அப்படி சேரும் போது மனம், புத்தி, அறிவு தெளிந்து உடலும், மனமும் தூய்மையாகிறது.

காந்தசக்தி பற்றி சொன்னபோது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் ஒரு பொருளை மேலே எவ்வளவு உயரத்தில் தூக்கி எறிந்தாலும் அது பூமியின் ஈர்ப்பு சக்தியால் கீழே வந்து விழுந்து விடும். அதுதான் காந்தசக்தி. காற்றோடு கலந்து காந்த சக்தியானது உடம்பையும், மனதையும் தூய்மையாக்குகிறது. புத்தி, அறிவு தெளிவுபடுத்துகிறது.

ஆனால் படிக்கும் போது போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது. பொறாமை ஒரு பொல்லாத ஆயுதம். நம் வாழ்வை முன்னேற விடாது. அன்போடும், பாசத்தோடும் பழகி பாருங்கள். படிப்பிலும் வேலையிலும் முன்னேற்றம் ஏற்பட்ட வாழ்க்கையில் உயர்வு உங்களைத் தேடி வரும்.

தேர்வு காலங்களில் தேர்வு நெருங்கி விட்டது என்ற பயமோ அச்சமோ தேவையில்லை. படிப்பில் கவனத்தை செலுத்துங்கள்.

வீட்டில் தனிமையில் இருந்து படிக்கும் முன் ஐந்து நிமிடம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். காலையிலும் மாலையிலும் சொல்லுங்கள். காலையிலும் மாலையிலும் தேர்வு நேரத்தில் காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் 10 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி தியானத்தில் அமர்ந்திருங்கள். எந்த பாடம் கஷ்டமோ கவலை வேண்டாம். அந்த பாடத்தை மனதில் நிலை நிறுத்தி கொண்டு தியானத்தில் அமர்ந்து மந்திரத்தை மனதுக்குள் சொல்லுங்கள். உங்களுக்கு நன்மையே கிடைக்கும்.  இதன் மூலம் தேர்வு எழுதும் போது மன அமைதியோடு நம்பிக்கையோடு தேர்வு எழுதலாம்.

மனம் விட்டு பேசுவதால் மன அமைதி கிடைக்கும். மற்றவரிடம் பேசுவதால் மன அழுத்தமும் குறையும். அதனால் மன நிம்மதியும் கிடைக்கும். தவறான முடிவு எடுக்கும் எண்ணம் சற்றும் வராது. தற்கொலை என்ற எண்ணத்திற்கே இடம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *