உலகைப் படிப்பவன்
  • By Magazine
  • |
எப்போதும் எதிலும் ஒழுங்கைக் கடைபிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு காணும் எல்லாவற்றிலும் நீளும் தாமதம் காணச் சகிக்காமல் தலைக்கேறும் கோபத்தில் தானாகவே கிடைத்து விடுகிறது சிடுமூஞ்சிப் பட்டம் தேவையின் உச்சத்தில் காலைப் பிடித்தும் காயை நகர்த்தியும் காரியம் சாதித்துவிடும் எதிர் வீட்டுக்காரருக்கு சாமர்த்தியசாலிப் பட்டம் பொருந்திப் போகிறது. எப்போதும் உதவியென யார் கேட்டாலும் ஓடிச்செய்யும் மாடி வீட்டு நண்பருக்கு எளிதில் கிடைக்கிறது இளிச்சவாயன் பட்டம் எப்படி வாழ்வதென்ற கேள்வியோடும் எதைப் படிப்பதென்ற ஏக்கத்தோடும் எனைச் சுற்றியுள்ளோரைக் கண்டு மனிதர்களின் […]
Read More
மது ஒழிப்பு மாரத்தான்
  • By Magazine
  • |
எத்தனை நாளைக்குத்தான் தொண்டனாகவே இருக்கிறது. கொடி பிடிக்கிறதும் சுவரொட்டி ஒட்டுறதுமாகவே போய்ட்டுருந்துச்சுண்ணா நமக்கு என்ன மதிப்பு… திருமூர்த்தி தீவிரமாய் யோசித்தான். நாமளும் கவுன்சிரலாகணும். அப்புறம் எம்.எல்.ஏ அமைச்சர்னு போய்ட்டே இருக்கணும். சீட்டு கிடைக்கணும், மக்களையும் நம்ம பக்கம் திருப்பணும். சட்டென்று ஒரு திட்டம் மனதில் பட்டது. அன்று மாலையே நண்பர்களை சந்தித்தான். திங்கள்கிழமை கலெக்டர் ஆபீஸ்க்கு மனு கொடுக்க போவணும்டா… என்ன மனு… எப்படி மனு… சும்மா மொட்டையா மனு கொடுக்க போகணும்னு சொன்னா எப்படி… நண்பர்கள் […]
Read More
சட்டத்தை  தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
புதிய சட்டத்திருத்தம்- சில மாற்றங்கள் பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்தால் அது குறித்த விபரங்கள் வழக்குப்பதிவு செய்தவருக்கோ அல்லது அவர் பக்கம் சாட்சி சொல்ல இருப்பவர்களுக்கோ வழக்கின் விபரம் தெரியாமலிருக்கும். நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லச் செல்லும் போதுதான் வழக்கின் விபரத்தைப் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தவருக்கும் சாட்சிகளுக்கும் தெரிவிப்பர். ஆதலால் சாட்சி சொல்லுபவர்கள் நீதிமன்றத்தில் அத்தனையும் கோட்டை விடுவர். குற்றவாளி எளிதாக வழக்கில் இருந்து தப்பிவிடுவான். நடந்த சம்பவம் ஒன்றாக இருந்திருந்தாலும் […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
சிப்பிச்சக்கர வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்குவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சிப்பிச்சக்கர வர்மம் பற்றி அறிவோம். புறமுதுகில் சுளுக்குவர்மத்தின் இருவிரல் கீழ் அமைந்ததே சிப்பிச்சக்கர வர்மமாகும். இந்த வர்மத்தை பதித்து அனுக்கிவிட்டால் சுழலி உண்டாகும் என்று வர்ம குருநூல் கூறுகிறது. இவ்வர்மம் சிப்பிக்குழிவர்மம், பூணூல்காலம், இரத்தம் துப்பி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.  “சுளுக்கு வர்மத்தின் ரண்டுவிரல் தாழே பூணூல்காலம்”.                                                                                                 – வர்ம குருநூல் “முன்னெல்லு […]
Read More
  • By Magazine
  • |
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் […]
Read More
வ.உ.சி-க்கு உதவி செய்த கைதிகள்
  • By Magazine
  • |
வ.உ.சி-க்கு கோவை சிறைதான் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! வ.உ.சி -யைஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டித் தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனிஅறை.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுத்தான் வஉசியை அடைத்து வைத்தனர்..! சிறைக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு உடைதந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் […]
Read More
சுதனும் மதனும் சுனாமியும்
  • By Magazine
  • |
ஒரு விடுமுறை நாள். மதனை சுதன் விருந்துக்கு கூப்பிட்டிருந்தான். பூவரச மரமும், புன்னை மரமும் நின்றிருந்த சுதனின் வீட்டிற்கு வந்த மதனை வரவேற்று உபசரித்தார்கள் சுதனின் அம்மா.  சுதனின் அம்மாவை மதனும் அம்மா என்றே அழைப்பான். மதனின் அம்மாவை சுதனும் அம்மா என்றே அழைப்பான்.  மத்தியானச் சாப்பாட்டிற்கு நல்ல சாளை மீன் அவியல், சூரத்துண்டு பொரியல், மஞ்சத் தண்ணீ மீன்குழம்பு என வித விதமா பரிமாறி வயிறு நிறைய உண்ண வச்சாங்க அம்மா.  சாப்பிட்டப் பிறகு, அதற்கு […]
Read More
சாலையில்  இறந்து கிடக்கும் பூனைக்கான இரங்கல் குறிப்பு
  • By Magazine
  • |
வண்டியில அடிபட்டு செத்துகிடக்குது பாருங்கப்பா, பாவம் அந்த பூனை. சாம்பல்கரிய நிறத்தில் உப்பிப்போய் கிடந்த அந்தப் பூனையின் உடலில் வண்டியின் தடயங்களைக் கண்டறிய இயலவில்லை. இதோட அப்பா பூனை எங்கப்பா இருக்கும்?… தேடிவரும்ல. நெஞ்சுக்கு முன்னிருந்தது அவனின் குரல்… அப்பாவை எவ்வளவு பெரிய உருவமாக எழுப்பிவிட்டான்! கடுகுக்குள்ளிருந்து எகிறும் குரலை குறுகத் தறித்தால் எங்கு கொண்டு பொத்தி வைப்பது. அது பெரிய பூனைதான் என்பதையும் தனித்தலையும் திறன் கொண்டது என்பதையும் நான் சொல்லவில்லை. அவ்வாறே அது கைவிடப்பட்டதாகவோ […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
பாரதி என்னும் சாரதி
  • By Magazine
  • |
சீவலப்பேரி என்றவுடனே நம் கண் முன் விரியும் காட்சி சீவலப்பேரி பாண்டி என்னும் தொடர் கட்டுரையும் திரைப்படமும்தான் … அந்த ஊர் இன்னொரு சிறந்த மனிதனை கவிஞனை ஒரு யுக புருசனை ஈன்றதும் கூட…. ஆம் மகாகவி பாரதி பிறந்த ஊர் சீவலப்பேரி புகுந்த ஊர் எட்டயாபுரம் படித்த ஊர் நெல்லை சரணடைந்த ஊர் பாண்டிச்சேரி மறைந்த ஊர் சென்னை….. ஆம் தாமிர பரணிக் கரையில் பிறந்து மெரினா கடற்கரையில் கரைந்தார்….. ஆம் மகாபாரதத்தில் யுத்தரதத்திற்கு கண்ணன் […]
Read More