இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”

இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம்.

அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். மேலும் இதன் இலைகளை சுருட்டி நூலால் கட்டி போட்டால் அதன் விளிம்புகளிருந்து பல செடி முளைகள் தென்படும். இதனாலே தான் இதற்கு “கட்டிப்போட்டால் குட்டி போடும்” செடி என்று சொல்லி அழைப்பதுண்டு.

இதன் இலை தடித்து பசுமை நிறத்தில் கழுதைகள் காது போன்ற வடிவத்துடனும், அதன் ஓரங்கள் மேடு பள்ளமாகவும் இருக்கும். கழுதையின் காதுபோன்று இலை இருப்பதால் இதற்கு ஞிஷீஸீளீமீஹ் மீணீக்ஷீ ஜீறீணீஸீt (கழுதை காதுசெடி) என்ற பெயரும் உண்டு.

இச்செடியின் பூ மணி வடிவில் இருக்கும். இதனை குழந்தைகள் நெற்றியில் சொடக்கு விட்டு விளையாடுவார்கள். இதனால் இதற்கு சொடுக்கு பூ செடி என்ற பெயரும், மணி வடிவில் இருப்பதால் “கத்தீட்ரல் பெல்” (சிணீtலீமீபீக்ஷீமீறீ தீமீறீறீs) என்ற பெயரும் உண்டு.

ஒரு இலையை ஒடித்து அதன் நடுவில் சிறிது மண் தூவி விட்டு தண்ணீர் தெளித்து வந்தாலே இலையின் ஓரத்திலிருந்து பல செடிகள் முளைக்கும். ஆகவே முதிர்ந்த ஒரு செடி ஆயிரகணக்கில் இளஞ்செடிகளை உருவாக்கும் தன்மை பெற்றிருப்பதால் இதற்கு Donkey ear plant  என்ற பெயரும் உண்டு.

இதன் இலை தடிமனாக சதைப்பற்றுடன் நீர்சத்து மிகுந்து காணப்படும். இலையை ஒடிக்கும் போது சத்தத்துடன் ஒடியும். இதற்கு காற்றிலுள்ள ஈரபதத்தை உறியும் தன்மை இருப்பதால் கிவீக்ஷீ ஜீறீணீஸீt என்ற பெயரும் உண்டு.

மேலும் இது பல நோய்களை விரைவில் குணமடைய செய்யும் மருத்துவகுணம் பெற்றிருப்பதால் இதற்கு Mother of Thousand plant என்ற பெயரும் உண்டு.

இதன் பூர்வீகம் மடகாஸ்கர். இது வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. ஒரு அடி முதல் 4 அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது.

தாவரவியல் பெயர்

Bryophyllum pinatum

வேறுபெயர்கள்

Cathedral bells, Airplant, Mother of thousand, miracle leaf, life plant, good luck leaf.

அதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்

Bryophyllin A, Ferulic acid, Cinnamic acid, Kaemferol, qucercetin, Rutin malic acid

தாதுசத்துக்கள்

மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, நாகசத்து, தாமிரசத்து, காட்மியம் போன்றவைகள்.

உயிர்சத்து

                விட்டமின் C, விட்டமின் B சத்துக்கள்

பிறசத்துகள்

                நார்சத்து, புரதசத்து, மாவுசத்து

இரணக்கள்ளியின் மருத்துவப்பயன்கள்

1.சிறுநீரக கற்கள் கரைப்பதற்கு

இரணகள்ளி இலை 2 எண்ணங்கள் எடுத்து மென்று காலையில் ஆகாரத்திற்கு முன் சாப்பிட்டு வெந்நீர் அல்லது இளநீர் குடித்து வர சிறுநீரககற்கள் கரையும். மேலும் இது பித்தப்பை கற்களுக்கும் சிறந்தது.

2. இரணக்காயத்தை ஆற்றுவதற்கு

வெட்டுப்பட்ட புண், ஆறாத புண்களுக்கு இரணக்கள்ளி இலையை லேசாக வதக்கி அரைத்து பூச புண் விரைவில் ஆறும்.

3. வெள்ளைபடுதல் மாறுவதற்கு

இரணகள்ளி இலை இரண்டு எண்ணங்கள் எடுத்து நறுக்கி கசாயமிட்டு குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், நீர் எரிச்சல் குணமாகும்.

4. தலைவலிக்கு

இரணக்கள்ளி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். மேலும் வலியுடன் கூடிய வீக்கங்களுக்கும் பற்று போடலாம்.

5. சளி இளிருமலுக்கு

இரணக்கள்ளி இலை 2 எண்ணம் எடுத்து நறுக்கி சிறிது நல்லமிளகு சேர்த்து கசாயமிட்டு வடித்து ஆறியதும் சிறிது தேன் விட்டு லேசான சூட்டில் குடிப்பது சளி, இருமல், ஒவ்வாமையால் ஏற்படும் தும்மல், இரைப்பு போன்ற வியாதிகளுக்கு சிறந்தது.

6. குடல் புண்ணிற்கு

காலையில் தினமும் ஆகாரத்திற்கு முன் ஒரு இரணகள்ளி இலையை மென்று சாப்பிடுவது குடல்புண்ணிற்கு சிறந்தது. இது அமில சுரப்பை கட்டுப்படுத்தி வயறு புண்ணாகாமல் பாதுகாக்கிறது.

7. பெரும்பாட்டிற்கு

பெண்களுக்கு மாதாந்திரமாக ஏற்படும் அதிக இரத்தபோக்கிற்கும், அதிக வயிற்று வலிக்கும் இரணகள்ளி இலைச்சாறு தினம் 10 மில்லி வீதம் குடிக்க வேண்டும். இது இரத்தம் உறையும் தன்மையை விரைவுபடுத்தி இரத்தபோக்கை குறைக்கிறது. மேலும் இது இரத்தமூலத்திற்கும் சிறந்தது.

8. மஞ்சள் நோய்க்கு

                இரணக்கள்ளி இலை தினம் ஒன்று வீதம் 10 நாட்கள் மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும். இது மஞ்சள் காமாலைக்கு சிறந்தது. மேலும் கல்லீரல், புற்றுநோய்க்கும் சிறந்தது.

9. மதுமேகம் மற்றும் அதிக இரத்த அழுத்தநோய்க்கும்

                இரணக்கள்ளி உலர்ந்த இலை 4 எண்ணம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பானமாக தினம் குடித்தால் இது மதுமேகம் மற்றும் அதிக இரத்த அழுத்த நோய்க்கு சிறந்தது. மேலும் இரத்த புற்றுநோய்க்கு சிறந்ததாக கூறப்படுகிறது.

10. கண்வலிக்கு

இரணக்கள்ளி இலைச்சாற்றை கண்ணை மூடிக்கொண்டு இமைகளின் மேல் பூசி உலர்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்துவர கண்வலி மாறும்.

11. கவனிக்க வேண்டியவைகள்

  1. அளவுக்கு அதிகமாகவும் நீண்ட நாட்கள் சாப்பிடும் போதும் ஒவ்வாமை ஏற்படலாம். சாறு 10 மில்லி வீதமும், இலைகள் 4 எண்ணங்கள் வீதமும் தினம் சாப்பிடலாம்.
  2. குமட்டல், கழிச்சல், வயிற்றுவலி, ஊறல், தடிப்பு ஏற்படலாம்.
  3. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *