ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான்
  • By Magazine
  • |
சிரிப்புகள் ஒன்றை ஒன்று முட்டிப் திரியும் வகுப்பறைக்குள்ளே ஆசிரியை சொல்லிக்கொண்டிருந்தார் “குழந்தைகளே உங்களை யாராவது விரும்பத் தகாத வழியில் தொட அனுமதிக்கக் கூடாது” உடலின் குறிப்பிட்டப் பாகங்களை சுட்டிக் காட்டினார். கிச்சுகிச்சு மூட்டிய உணர்வோடான சிரிப்பில் குழந்தை முகங்கள் “அவ்வாறானசூழலில் என்ன செய்வீர்?” ஆசிரியையின் கேள்வியில் வகுப்பறை அமைதியாயிற்று. கிணற்றுள் கல்லெறியும் தொனியில் ஒரு குழந்தை “அவங்களுக்கு டிஸ்யும் டிஸ்யும்தான் ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான் அப்படியே காலி பண்ணிருவேன்” குழந்தையின் அடவுகளில் கராத்தேவின்  மஞ்சள் […]
Read More
கதவுக்குள்ளிருந்து கிரீச்சிடுவது ஒரு வட்டமே
  • By Magazine
  • |
இருபக்கங்களிலும் ஒவ்வாமையை வளர்த்தியிருக்கிறது கதவு உளுத்துபோன மரத்தால் ஆகியிருக்கின்றது கதவின் மனம் சிலுவை என அடிக்கப்பட்டிருக்கும் நிலையின் கண்ணி விடுவதாயில்லை கதவை அதன் கனத்தையும் தாண்டி புலம்பலை ஒரு சாபமென துப்பிக்கொண்டிருக்கின்றது கதவு இருபக்கங்களிலும் அங்கிருக்கும் இருபக்கங்களும் தனக்கான இருபக்கங்களை உற்பத்தி திறன்கொண்டு வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன அவ்வாறே கதவுகளும் பக்கங்களும் பக்கங்களும் கதவுகளும் என சுழலும் ஒரு வட்டம் தன்னுள் ஒளி பொருந்தியதாய் தன்னை நினைத்துக் கொள்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் தன்கை ஓட்டுச்சில்லால் அடிக்கின்றான் சில்லு சில்லாகும் […]
Read More
  • By Magazine
  • |
வசந்தம் ஒருநாளில் மலர்வதில்லை. அதுபோலத்தான் வாழ்வின் உயர்வு என்கிறார் அரிஸ்டாட்டில். என்றோ ஒருநாள் நடக்கப் போகின்ற தேர்வுக்காக நாம் வருடம் முழுவதும், படித்து, நம்மை தயார் செய்து காத்திருக்கிறோம். நன்றாக எழுதி நல்ல மார்க் எடுக்கிறோம் இல்லையா… உழைக்க வேண்டும். உழைத்தால் தான் கூலி கிடைக்கும். வியர்வை சிந்தாமல் எதுவும் கிடைக்காது. எது உங்களுக்கு தேவையோ அதை அளவில்லாமல் இப்பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும். சாதனை புரிய பிறந்த நீங்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள். […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
கோபம் தானாக அடங்கிப் போகிறது!
  • By Magazine
  • |
ஜப்பானில் தியானத்தை ஜா.ஜென் என்பார்கள். ஜா.ஜென் என்றால் உட்கார்ந்து விடுவது என்று பொருள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது. ஒரு ஜென் துறவி ஒரு நாளுக்கு ஆறிலிருந்து எட்டு மணிநேரம் சும்மா உட்கார்ந்திருக்கிறார். ஒன்றும் செய்யாமல் சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கிறார். அப்படிச் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் உட்கார்ந்திருக்கும் போது மனம் தானாக ஓய்ந்து போகிறது. புத்தி பேதலித்தவர்களை ஜென் மடங்களுக்கு அழைத்து வருவார்கள். அங்கே அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தருவதில்லை. உட்கார்ந்திருக்க உதவுவார்கள். உணவு தருவார்கள். […]
Read More
அணுக்கனிமப் படிவங்கள்
  • By Magazine
  • |
அணுக்கனிமப் படிமங்கள் அகழ்வு, இரண்டு அடுக்குச் செயல்பாடுகளாக இருக்கும். அணுக்கனிமப் படிமங்கள் நிலத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. முதலில் நிலமேற்பரப்பில் இருந்து 2.5 முதல் 3 மீட்டர் ஆழம் வரையில் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும். அடுத்தகட்டமாக அடுத்த அடுக்கு அகழ்விக்கப்படும். 2 ஆவது அகழ்விப்பு முடிக்கும் போது கனிமப்பிரிவு ஆலையில் இருந்து கொண்டு வரப்படும் நிராகரிக்கப்பட்ட அணுக்கனிமங்கள் இல்லாத மண்ணைக் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படும். அகழ்விப்பு சராசரி 6 மீட்டர் வரையிலும் அதிகபட்சம் 9 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும். […]
Read More
  • By Magazine
  • |
பிறரை வென்று வாழ்வதற்காய்ப்                 பித்தலாட்டம் செய்வதுவும் உறவை எல்லாம் மிதிப்பதுவும்                 உண்மை தன்னை மறைப்பதுவும் திறமையாக ஏய்ப்பதுவும்                 திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும் புறமே கூறி நடப்பதுவும்                 புகழைத் தருமென்(று) எண்ணாதே! அறமே இல்லாச் செய்கைகளால்                 ஆதிநாளில் கிடைப்பதெலாம் இறவாப் புகழென்றாகாதே;                 ஈசல் வாழ்வே அதற்குண்டு: மறந்தும் கேடு செய்யாமல்                 மனிதநேயத் தொண்டுடனே சிறந்த செயலைச் செய்வோர்க்கே                 சீரும் பேரும் நிலைத்திருக்கும்! நிறமும் இனமும் மதமுமெலாம்                 […]
Read More
வித்தைகள் கற்க வாழ்நாள் போதாது
  • By Magazine
  • |
மத்திகோடு சிவகுமார் ஆசான்பேட்டி கண்டவர் : ஜி.ஜெயகர்ணன் ஆசான்கள் என்பவர்கள் ஆழம் காண முடியாத அறிவு பொக்கிஷங்கள் என்றால் மிகையல்ல. ஆம்புலன்ஸ், அதிநவீன மருத்துவமனைகள் ஒன்றுமே இல்லாத காலத்தில் கூட இவர்கள் பாரம்பரியமாக கற்றுக் கொண்ட கல்வியாலும் தங்களது அனுபவ அறிவினாலும் எண்ணிலடங்காத மனித உயிர்களை காப்பாற்றி வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அத்தகைய அறிவு ஜீவிகளான ஆசான்கள் தமிழகத்தின் தென்கோடியிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும் அதிகமாக காணப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆசான்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
Read More
இட்லி புராணம்
  • By Magazine
  • |
தமிழன் கண்டுபிடித்த தலையாய உணவு இதன் வரலாற்றுக்காலம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பது காய்ந்த வயிற்றிற்கும் காய்ச்சல் காரருக்கும் உதவுவது மருத்துவர் மருந்துசீட்டில் எழுதாத மருந்து. எப்போது உண்ணலாம் எதனுடனும் உண்ணலாம் ஒரே மாவுதான் சுவை வேறு- தோசை- இட்லியாய் எந்த தமிழர் விருந்திலும் இதற்கு இடமுண்டு பலரின் பயணத்தில் உடன் வருவது துணியுடன் ஒட்டி அவிழ்ந்தாலும்- பிரிக்கப்படுவது மாலை வரை தாக்கு பிடிக்கும் மறுநாள் இட்லி உப்புமாவாக மலரும். […]
Read More
உலகைப் படிப்பவன்
  • By Magazine
  • |
எப்போதும் எதிலும் ஒழுங்கைக் கடைபிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு காணும் எல்லாவற்றிலும் நீளும் தாமதம் காணச் சகிக்காமல் தலைக்கேறும் கோபத்தில் தானாகவே கிடைத்து விடுகிறது சிடுமூஞ்சிப் பட்டம் தேவையின் உச்சத்தில் காலைப் பிடித்தும் காயை நகர்த்தியும் காரியம் சாதித்துவிடும் எதிர் வீட்டுக்காரருக்கு சாமர்த்தியசாலிப் பட்டம் பொருந்திப் போகிறது. எப்போதும் உதவியென யார் கேட்டாலும் ஓடிச்செய்யும் மாடி வீட்டு நண்பருக்கு எளிதில் கிடைக்கிறது இளிச்சவாயன் பட்டம் எப்படி வாழ்வதென்ற கேள்வியோடும் எதைப் படிப்பதென்ற ஏக்கத்தோடும் எனைச் சுற்றியுள்ளோரைக் கண்டு மனிதர்களின் […]
Read More