கஸ்தூரிபா ஜாண்ஸன்
சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் கிழங்கு, முடவன் கிழங்கு, பண்ணைகிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் ஒருவகை கிழங்கு. தமிழ்நாட்டில் கொல்லிமலை, சேர்வராயன், ஏற்காடு போன்ற மலைகளில் உயரமாக இடங்களில் விளைகிறது. இது பாறைகளின் வெடிப்பில் விளையும் ஒருவகைப் பெரணியை சேர்ந்த தாவரமாகும். இக்கிழங்கின் மேல்பகுதி கம்பளி போர்த்தியது போல் மெல்லிய இழைகளுடன் உண்மையிலேயே ஆட்டுக்கால் போல் தோற்றமளிக்கிறது. எனவே சைவ ஆட்டுக்கால் என்று பெயர் பெற்றது.
இதன் தாவரவியல் பெயர்
Drynaria qucercifolia
இது மலைப்பகுதியில் விளைகிறது. இதை யாரும் பயிரிடுவதில்லை. தானே வளர்கிறது.
மலைப்பிரதேசங்களில் பாறைகளின் இடுக்குகளில் குறிப்பிட்ட பருவங்களில் காணப்படும். பிற காலங்களில் இக்கிழங்கின் மேல்பகுதி சுருங்கி விடுவதுடன் அதில் உள்ள நீர்ச்சத்தும் போய் விடும். அதனால் இதனை பதப்படுத்துவதற்காக மலைகளில் புதைத்து விடுவார்கள். இது வருடக்கணக்காக கெடாமல் இருக்கும். மண்ணுக்கடியில் இது விளையாது.
பாறைகளிலிருந்து பாஸ்பரஸ், புரதம், செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் சிலிக்கா போன்ற சத்துக்களை உறிஞ்சி வைத்துக் கொள்கிறது. இதனை பக்குவப்படுத்தி பொடியாகவும், எண்ணெயாகவும் பயன்படுத்துகின்றன. சில நாட்டு மருந்துகடைகளிலும், மலையடிவாரங்களில் உள்ள சந்தைகளிலும் பெரிய சாலைகளிலும் கூட கிடைக்கிறது.
மருத்துவகுணங்கள்
இந்த ஆட்டுக்கால் கிழங்கு சுமார் 4000 வகை நோய்களை குணமாக்கும் என்கிறார்கள். கொரோனா சமயத்தில் இதனை பயன்படுத்தி சுமார் மூன்றே நாட்களில் சுகம் பெற்றதாக கூறப்படுகிறது.
இது மூட்டுவலி உள்ளவர்களுக்கு அற்புத மருந்து ஆகும். இதனை பயன்படுத்தி வந்தால் பல மாதங்கள் படி ஏறாமல் இருப்பவர்களும் மூட்டுவலி, முதுகுவலி, தலை முதல் கால் வரை ஏற்படும் அனைத்து வித எலும்பு பிரச்சனைகளையும் தீர்க்கும்.
சைனஸ் கோளாறுகள், இதய பிரச்சினைகள், மலச்சிக்கல், வாயு கோளாறுகள், தசை சம்பந்தமான நோய்கள் அனைத்துமே விலகி விடும்.
மேலும் சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்புகள் சுருங்குதல், புற்றுநோய் எனப் பல்வேறு நோய்களுக்கும் முடவாட்டுகால் கிழங்கு அருமருந்து ஆகும்.
இக்கிழங்கின் மேல்பகுதியை சுத்தம் செய்து அந்த தோலை வெந்நீரில் போட்டு குளித்து வந்தால் சரும அலர்ஜி, அரிப்பு, சொறி, சிரங்குகள் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் விலகி விடும். நரம்பு பிரச்சினைகள் நீக்கி ஆண்களுக்கு ஆண்மைக் கோளாறுகள் அகற்றும்.
இக்கிழங்கின் மேல்தோலை சீவி அத்தோலினை கொதிக்க வைத்த நீரை மூட்டுவலி உள்ளவர்கர்கள் தடவினால் மூட்டுவலி நன்கு குறையும். இந்த நீரில் சிறு குழந்தைகளை குளிக்க வைத்தால் வாதநோய்கள் விலகி விடும். இந்த கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது ஆகும்.
பெண்களுக்கு தரும் நன்மைகள்
இக்கிழங்கில் உள்ள கால்சியம், இரும்புசத்து போன்றவை மிகுந்த பயனளிக்கிறது. லாரிக் அமிலம் இருப்பதால் பெண்களின் குழந்தை பேறு காலத்திலும், பாலூட்டும் பருவத்திலும் மிகுந்த பயனளிக்கிறது. பருவம் அடைந்த பெண் குழந்தைகளுக்கும், மெனோபாஸ் முடிந்தவர்களுக்கும் மிகுந்த பலனளிக்கிறது. பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இக்கிழங்கு உணவாக சமைத்து சாப்பிட முடியாது. ரசம் அல்லது சூப் மாதிரி தான் பயன்படுத்த முடியும். உலகம் முழுதும் இக்கிழங்கு கிடைக்கிறது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூகினியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அதிகம் காணப்படுகிறது.
இதன் சூப் அருந்தி வர நரம்பு முடிச்சு நோய் என்றும் Vericose vein குணமாகும். தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர வேண்டும். இதன் ருசியானது அப்படியே ஆட்டுக்கால் சூப் குடித்த மாதிரியே இருக்கும்.
நெடுநாள் வலிகள், நரம்பு பிரச்சினை, ரத்த ஓட்டம், முழங்கால் வலி, மூட்டுவலி, தலைவலி, தோள்வலி, தலைநீர், தலைபாரம் போன்ற நோய்கள் அனைத்தும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குணமாகும். சுருக்கமாக சொன்னால் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களை போக்கும்.
இக்கிழங்குக்கு முடக்கு வாதநோயை சரி பண்ணும் தன்மை உள்ளதால் வாதவல்லி என்றும் இது உயரமான மலைகளில் மட்டுமே கிடைப்பதால் ஆகாயராஜன் என்றெல்லாம் கூட அழைக்கப்படுகிறது. இதனை சூப் செய்து மலையடிவாரங்களிலும், தெரு ஓரங்களிலும் மக்கள் விற்று வருகிறார்கள். ஆட்டுக்காலின் சூப் மாதிரியே அதன் ருசியுடன் உள்ளதால் இதனை சைவ ஆட்டுக்கால் சூப் என்கிறார்கள்.
இக்கிழங்குகளை வாங்கி ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு சிறிது மணலினால் மூடி எப்போதாவது நீர் தெளித்து வந்தால் எப்போதும் புதுக்கிழங்கு போலிருக்கும். தேவைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில வீடுகளில் இதன் இலைகளின் அழகுக்காக வளர்க்கிறார்கள். ஆனால் மலைகளில் பாறைகளின் இடுக்கில் வளர்வதை மாதிரி இதில் சத்துக்கள் கிடையாது. Monkey ginger என்றும் அழைப்பர். புல்லுருவிகள் மாதிரி எந்த இடத்தில் வளர்கிறதோ அந்த இடத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சி விடும்.
கொழுப்புக்கட்டிகளை குணமாக்கும் தன்மை கொண்டது. மலைகளில் இதனை சூப் செய்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் குதிகால் வலி, தலைவலி, முதுகுவலி, தசைவலி என எந்த வலியும் அவர்களை தாக்குவதில்லையாம்.
இதன் தோலை சீவிய பின் கழுவி உரலிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு இடித்து எடுப்பார்கள். அதில் தேவையான அளவு இஞ்சி, பூண்டு, தக்காளி, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைக்கலாம். அரைகிலோ பொடித்து கிழங்குடன் ரு தேக்கரண்டி மஞ்சள் தூள், கறி மசாலா, மல்லிப்பொடி, சிறிது புதினா, கறிவேப்பிலை சேர்த்து கொள்ளலாம். நன்கு கொதித்ததும் ஆற வைத்து மிளகுப்பொடி, தேவையான உப்பு சேர்த்து வடிகட்டி அருந்தலாம். அதிகமாக அருந்தினால் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரச்சினைகள் உண்டாகலாம்.
இவ்வாறு பல்வேறு வகையில் பயன்தரும் ஆட்டுக்கால் கிழங்கினைப் பயன்படுத்தினால் நல்லது.
Leave a Reply