மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

  • By Magazine
  • |

A. தர்மராஜ் (த.ராசு)

முந்தைய பாகத்தின் தொடர்ச்சி…

பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் உடல் ரீதியான குறைபாட்டினால் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார நிலையில் மற்றவர்களைக் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலையினைத் தவிர்க்கின்ற விதத்தில் 2018-ல் சென்னை தி.நகரில் ஆம்வே நிறுவனமும், பார்வைதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இந்திய சங்கமும் இணைந்து ஒரு பயிற்சி மையத்தை தொடங்கின. இதன் மூலம் அவர்களின் வாழ்வு மேம்படுவதுடன் பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்று பெரிதும் நம்பப்படுகிறது. சென்னையில் இத்திட்டத்தை விரிபுபடுத்தவும் திட்டமிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான கால விரயத்தை குறைக்கவும், அவர்களின் விபரங்களை தவறுகளின்றி சேகரிக்கவும், அவர்களுக்கென்று தேசிய அடையாள அட்டை தயாரித்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2016 ஏப்ரலில் அறிவித்தது. இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அட்டையைப் பெறுவதற்கு 2 லட்சம் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்தனர். (தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.) இதனைத் தொடர்ந்து மாற்றுதிறன் சதவீதம், எந்த வகையான மாற்றுத்திறனாளி என்பதைக் கண்டறிந்து அட்டையை தயாரிப்பதற்கென்று தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.

தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த நாற்காலி பேட்டரியில் இயங்கக் கூடியது. தசைச்சிதைவு, பக்கவாதம் மற்றும் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த நவீன சக்கர நாற்காலியைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள், ஓன்றின் விலை சுமார் 80 ஆயிரம் ரூபாய். முழு முகவரி, தொலைபேசி எண், தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கல்விச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்பட ஆதாரங்களுடன், மாற்றுத்திறனாளி நல அலுவலகம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய சக்கர நாற்காலியை மானிய விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மாற்றுத் திறனாளியாகவும், அவர்களிலும் சிலர் உயர்கல்வி தகுதியுடன் தகவல் தொடர்பு திறமை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களிலும் காதுகேளாத, வாய் பேச முடியாதவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. தகுதி நீக்கத்துக்கானவர்களின் பட்டியலில் உள்ள காது கேளாத ஊமையர் மற்றும் தொழுநோயாளி என்ற சொற்றொடர்கள் நீக்கப்படுவதாக 2019 ஜீலையில் உள்ளாட்சித்துறை மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் பதிவு செய்யப்பட்டது.

பார்வைத்திறன், கேட்கும் திறன் இல்லாதவர்கள் மற்றவர்களை எளிதில் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு 2020-ல் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடுமையான ஊனமுற்றோருக்கான உதவித்தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி 2022 ஜனவரியில் தமிழக முதல்வர் அறிவித்த போது மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே நேரத்தில் அதனை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஊனமுற்றோர்களுக்கான சக்கர நாற்காலி முதன் முதலில் சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.ட்டி ஆராய்ச்சி பூங்காவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரால் வெயிடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலியை உலகின் வேறு எந்த தொழில் நுட்பங்களிலும் நான் பார்த்ததில்லை என்று அப்போது அவர் வியப்புடன் கூறியுள்ளார்.

அதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த அமர்ந்தபடி செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் நீண்ட நேரம் பயணித்தால் ரத்த ஓட்ட குறைபாடு, ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் புண் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படக் கூடும். புதிய சக்கர நாற்காலியை உபயோகித்தால் இக்குறைகள் நேராது. இதனை தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விநியோகிக்க முடிவானது.

அரசு வேலைகளில் ஊனமுற்றோருக்கான இலக்கு 4 சதவீதம் நிரப்பப்படாமல் இருக்கும் மாவட்டங்களில் சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கு முதலில் 1920-ல் நடத்தப்பட்டது. அத்துடன் முதுகுதண்டுவடம் பாதிப்பு உள்ளவர்கள், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாள்பட்ட நரம்பியல் பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளின் தன்னுரிமைகளை உள்ளடக்கியும், அங்கீகரித்தும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995 ஏற்கனவே நடைமுறையில் இருந்த போது அந்த சட்டம் மேலும் வலுவூட்டபடுவதுமான தேவை பலராலும் உணரப்பட்டது. அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா- 2014- ம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த ஜக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த அவர்களுக்கான 7 திறன் குறைவுகளை இந்த மசோதாவின் படி 21-ஆக அதிகரிக்கப்பட்டது. திராவக வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள், ரத்தத் தொடர்பான நோய்களாகிய தலசீமியா, ஹிமோபிலியா, மஸ்குலர் டிஸ்ட்ரஃபி எனும் தசை இறுக்க நோய், பார்க்கின்சன்ஸ் பாதிப்பு போன்றவையும் இதன்படி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அப்போது இருந்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 3 கோடி பேர். ஆரம்ப கட்டத்தில் எலும்பு தொடர்பான பாதிப்புகள், கண்பார்வை இழப்பு, காது கேளாமை ஆகிய குறைபாடுகள் உள்ளவர்கள் மட்டும் தான் அந்த மசோதாவின்படி சலுகை மற்றும் உரிமைகள் பெற முடியும் என்று இருந்த நிலைமையில் மற்ற திறன் குறைவுகள் உள்ளவர்களும் பெற முடிந்த நிலை உண்டானது.

பொதுவாக போக்குவரத்து வாகனங்களும், குடியிருக்கும் கட்டிடங்களும், கல்வி நிறுவன கட்டிடங்களும் மற்ற சாதாரண மனிதர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளும் எளிதாக ஏறி இறங்கவும், நுழைந்து செல்லவும் ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த மசோதாவில் முக்கியமான அம்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் அதுவரை இருந்த 3 சதவீத ஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு சிரமம் தரும் வகையிலான இட மாறுதல்களும் பணி ஒதுக்கீடும் தடை செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி நிற்கும் வாய்ப்பினை இந்த மசோதாவானது அதிகப்படுத்தியது.

தமிழகம் முழுவதும் உள்ள 11 லட்சத்துக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பொருட்டு 2020 மார்சில் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் மூலம் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

மாற்றுத் திறனாளிகள் சேவகர்களுக்கென தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இதன்படி மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிவோர் மற்றும் சுயமாக தொழில் புரிவோர், சிறப்பாக சேவை செய்த தனிநபர் மற்றும் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்வோர், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சி அல்லது கண்டுபிடிப்புகள், சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் முதலான 14 பிரிவுகளின் தேசிய விருதுகள் வழங்கப்படுவதாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள்அதற்கான படிவத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

2022 ஆண்டு வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை வாயிலாக சமூக பாதுகாப்பு உதவி நிதியை தமிழகத்தில் சுமார் 3 லட்சம் பேர்களுக்கு ரூ.2000 உயர்த்தப்பட்டதை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் வரவேற்றனர். இருப்பினும் தெலுங்கானா, ஆந்திராவை போன்று 40 சதவீதமாக ரூ.3000 உயர்த்தப்படும் என எதிர்பார்த்த உறுப்பினர்களுக்கு அது ஏமாற்றத்தையே தந்தது.

2022 ஜனவரியில் தமிழ்நாடு போக்குவரத்துத்  துறையின் மூலம் அரசு சில உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது. பேருந்து நிறுத்தத்தில் மாற்றுத்திறனாளி ஒரே ஒருவர் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தத்துக்கு முன்போ தாண்டியோ நிறுத்தி அவருக்கு இடையூறு செய்யக் கூடாது. பேருந்தில் இடமில்லை என்று மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக் கூடாது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வேறு பயணிகள் அமர்ந்து இருப்பார்களானால் அவர்களை எழச் செய்து மாற்றுத் திறனாளியை அமர வைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் விதத்தில் ஏளனமாகவோ, இழிவாகவோ, கோபமாகவோ பேசலாகாது. அவர்களிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணிப்புடனும், ஓட்டுநருக்கு தனித்துவ சமிக்ஞையுடனும் பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். அவர்களுக்குரிய தேசிய அடையாள அட்டையின் அசல் அட்டை கொண்டு 40 சதவீதம் மாற்றுத்திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய இலவச பயணச்சீட்டை பேருந்து நடத்துநர் வழங்குவார்.

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் உள்ள பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி 75 சதவீத பயண கட்டண சலுகையில் அனுமதிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை மேற்படி சங்கத்தினர் வரவேற்றனர்.

கடந்த 2022 செப்டம்பரில் திருவொற்றியூர் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அத்துடன் அவர்களுக்கான தேசீய அடையாள அட்டை, வங்கி கடன் மானியம், ஆவின் உதவி உபகரணங்கள், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு ஆகிய உதவிகளையும் வழங்கினார். மேலும் நவீன மூன்று சக்கர வண்டிகள், மூன்று சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகளும் வழங்கினார்.

2021 ஜீலை மாதம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சுமார் 16 லட்சம் மதிப்பிலான அதிநவீன செயற்கைக் கால்கள், பேட்டரியில் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகள் முதலான நலத்திட்ட உதவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. தலைநகர் சென்னையில் 2024- ஆம் ஆண்டு நிலவரப்படி 39 லட்சம் அளவிலான வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 11369 பேர் மாற்றுத் திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். இவர்கள் மார்ச் 25-க்குள் படிவம்- டி யை பூர்த்தி செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ உரிய அதிகாரியிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று முன்னதாகவே அறுவுறுத்தப்பட்டது.

சென்னை பகுதிக்குள் இருக்கும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளர் ஆஃப் அடையாறு இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கண்ணாடி வழங்கும் விழா நடத்தப்பட்டு கண்ணாடி வழங்கப்பட்டது. இதிலே ரோட்டரி கிளர் தலைவர், போர்ட்ஸ் லேபராட்டரீஸ் நிர்வாக இயக்குநர், ஐ.ஐ.ட்டி பேராசிரியர், ரோட்டரி கிளப் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *