உயிர் நதியின் ஓசை
  • By Magazine
  • |
பொன்.குமார் எழுத்தாளர் குமரி ஆதவன் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாளராகவும் இயங்கி வருகிறார். குமரி ஆதவன் பல்வேறு சூழல்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிர் நதியின் ஓசை என்னும் கட்டுரைத் தொகுப்பாக்கித் தந்துள்ளார். தலைப்பு ஒரு கவிதைத் தொகுப்புக்கான தலைப்பு போல் உள்ளது.  இயற்கை மனிதனுக்கு தந்திருக்கிற மிகப்பெரிய கொடை நீராதாரம். நீர் ஆதாரங்கள் அதிகமாக அழிக்கப்பட்ட காலம் இந்த நூற்றாண்டுதான். ஏராளம் நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய் பூமி […]
Read More
மாடல்ல மற்றை யவை
  • By Magazine
  • |
 தலைவாசல் திருவள்ளுவர் உலகப் பொதுமறை  எழுதிய ஒப்புமை மிக்கப் புலவர். திருக்குறள் வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள்… என்கிறார் மேலைநாட்டறிஞர் ஒருவர். வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுஆதி? ஒருகுலத்துக்கொருநீதி… என்ற  மனோன்மணீயம் சுந்தரனார், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் (குறள்972)..என்ற குறள் போன்றவற்றை கற்கை நன்றே கற்கை நன்றே                        பிச்சைப்புகினும் கற்கை நன்றே… என்கிறார் அவ்வை. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக […]
Read More
வெள்ளையர் கைப்பற்றிய நாட்டைப் போராடி மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் இந்திய நாட்டு விடுதலைப்போரில் வெள்ளையரை எதிர்த்து நின்று போரிட்டு, வெற்றி வாகை சூடி, இழந்த நாட்டை வெள்ளையரிடமிருந்து கைபற்றிய ஒரே வீரமங்கை வேலுநாச்சியார். இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதிக்கும், முத்தம்மாள் நாச்சியாருக்கும் 1730- ஆம் ஆண்டு மகளாக பிறந்த வேலுநாச்சியார். பயமே தெரியாதவர். வீரம் நிறைந்தவர். கணவனைக் கொல்ல வந்த புலியுடன் போராடி அதனைக் கொன்ற வீரமங்கை. வீரத்தோடு விவேகமும் நிறைந்த பேரழகி. வேலுநாச்சியார் தமிழ், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், […]
Read More
குடல் நோய்களுக்கு சிறந்த “புடல்”
  • By Magazine
  • |
இது ஒரு வெள்ளரி குடும்பத்தை சார்ந்த கொடிவகை. காய்கள் பச்சை நிறத்துடன் வெண்ணிற மேல்படிவத்தைக் கொண்டு நீண்டு நுனியில் வளைந்து தொங்கும். பார்ப்பதற்கு பாம்பு போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இதனை Snake gourd என்பர். புடல் வகைகளில் கொத்துபுடல், நாய்புடல், பன்றிபுடல், பேய்புடல் என பல வகைகளுண்டு. இவைகளில் கொத்துபுடல், நாய்புடல் இவ்விரண்டும் குத்து செடியாக வளரும். பன்றிபுடல் செடியாக இருந்து அதன்காய் நீளம் குறுகியதாக இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்புடையது. இதனை உணவாக உண்பதில்லை. உணவாக […]
Read More
டங்ஸ்டன் சுரங்கமும் தமிழின அழிப்புகளும்
  • By Magazine
  • |
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டிப் பகுதியில் டங்ஸ்டன் என்ற கனிமத்தை எடுக்க 07.11.2024 அன்று ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலப் பகுதிக்குள்ளாக  அரிட்டாப்பட்டி என்ற ஊரை உள்ளடக்கிய ‘மாநிலத்தின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்” அமைந்துள்ளதால், வேதாந்தா என்ற தனியாருக்கு ஏலம் விட்ட ஒன்றிய அரசுக்கெதிராக உள்ளுர் மக்களின், சுற்றுச்சூழல் அமைப்புகளின் பலத்த எதிர்ப்பு வீரியம் கொண்டு வருகிறது. சுரங்கம் தோண்டஏலம் விடப்பட்ட இடம் தமிழ்நாடு அரசு 2002 -ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் கீழ், […]
Read More
நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்
  • By Magazine
  • |
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்   நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல். இராஜேந்திரா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் வைத்து நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கத்தில் வர்ம மருத்துவ மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.  இராஜேந்திரன் அவர்கள் வர்ம மருத்துவத்தில் நீரழிவு நோயின் வரலாறு , வர்ம மருத்துவத்தின் மூலம் நீரிழிவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நீரிழிவும் […]
Read More
விரோதிகள் இறப்பது உனக்கு இழப்பு
  • By Magazine
  • |
ஏதாவது ஒன்று இனிப்பாக இருக்கிறது என்றால் இன்னொன்று கசப்பாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று நன்றாக இருக்கிறது என்றால் இன்னொன்று மோசமானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று தெய்வீகமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொன்று அசுரத்தனமாக இருக்க வேண்டும். ஞானிகளின் புகழ்மிக்க கட்டளை நமக்குத் தெரியும். விரோதியிடமும் அன்போடிரு. லாவோத் சூ அதைவிட ஆழமாகப் போகிறார். வெறுப்புக்கு நல்லியல்பே பதிலாகட்டும் என்கிறார். இதற்கு வெகு ஆழமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக ஞானிகள் விரோதியிடம் அன்பாயிரு என்று சொல்லும் […]
Read More
பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு
  • By Magazine
  • |
மக்கள் சமுதாயத்தில் கருத்துப் பரிமாற்றத்துக்கு நூல்களும் செய்திப் பரிமாற்றத்துக்கு நாளிதழ்களும் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணிணி, கைபேசி போன்ற ஊடகச் சாதனங்கள் மிகுதியாக இருந்தாலும், செய்தி பத்திரிக்கைகளின் பரவலாக வளர்ச்சியை அவை தடுக்க முடியவில்லை. ஏராளமான நாட்டு நடப்புச் செய்திகளையும், வணிகம், தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசியல் கருத்துக்களையும் நாளிதழ் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, யுனைட்டெட் பிரஸ் போன்ற பெரும் செய்தி நிறுவனங்கள் கொடுக்கும் செய்திகளைத் […]
Read More
இதயத்தை பாதுகாக்கும் மாதுளை!
  • By Magazine
  • |
தினமும் வெறும் வயிற்றில் 1 மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறைவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். மாதுளை இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.      மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மாதுளை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. மாதுளை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவு […]
Read More
கடிதம் கண்டீரா?
  • By Magazine
  • |
மதிப்பிற்குரிய ஆசிரியர் பெரும்தகை அவர்களே ஒருவர் எதைக் கற்றுக் கொள்ளவில்லையோ அதை பயிற்றுவிப்பது மட்டும் கல்வி அல்ல. நாம் எப்படி இல்லையோ அப்படி மாற்றுவது தான் கல்வி என்பதை நீங்கள் உணர்வீர்கள். பாடநூலை மட்டும் கற்றுத்தரும் இயந்திரமாக செயல்படாதீர்கள். மாறாக வாழ்க்கை கல்வி வாழ்க்கை மூலம் மற்றும் வாழ்க்கை முழுவதும் கல்வி என்னும் நுணுக்கங்களை கற்றுத்தாருங்கள். ஒரு பறவைக்கு வேண்டிய தீனியை அதை பார்த்து எறிந்தால் அந்த பறவை பறந்து போவதில்லை மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து அந்த […]
Read More