A. தர்மராஜ் (த.ராசு)
முந்தைய பாகத்தின் தொடர்ச்சி…
2021-ஜீன் மாதத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
அதே ஆண்டு அதே மாதத்தில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது, மாற்றுத்திறனாளிகளுக்கான நலதிட்டங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நலத்திட்டங்கள் உபகரணங்கள் விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரதை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு அரசு வேலையில் 4 சதவீத இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 சதவீதம், 20 பேர்களுக்கு மேல் பணியாற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரசு பேருந்துகளில் அவர்களுக்கு கட்டணச் சலுகை, வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்வித தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். உபகரணங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். அரசு கட்டிடங்களை அவர்கள் அணுகவும், பயன்படுத்தவும் எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும் என்று இவ்வாறெல்லாம் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார் முதலமைச்சர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நேரடியாக கவனித்து வருபவர் முதலமைச்சர் தான்.
மாற்றுத் திறனாளிகள் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கேற்றவாறு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட உதவி உபகரணங்களை அந்த ஆண்டில் தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நிதியை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்த நிதி ஒதுக்கீடு தவறாமல் செய்யப்படுகிறது.
2021 செப்டம்பரில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கெரோனா நோய் பரவி, மக்களுக்£க முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துகின்ற நடைமுறை தொடங்கியிருந்தது. அந்நாட்களில் லெயோனாட் செஷயர்ட் தொண்டு நிறுவனத்துடன் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்காகவும், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரையில் அவர்களை தடுப்பூசி போட்டு கொள்வதற்கு வீட்டுக்கு வந்து போடலாமா அல்லது அப்பல்லோ மருத்துவமனைக்கு வர வேண்டுமா என்று விபரம் கோரப்பட்டது. இந்த நடவடிக்கை அந்த காலகட்டத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவில் பலன் தந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் 2016- ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த ஒரு வழக்கில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தடைவிதித்து உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2021 ஆகஸ்டில் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கெரோனா நோய் பரவ ஆரம்பித்திருந்த நாட்களில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் காரணமாக மாற்றுத் திறனாளிகள் வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். ஆகவே அதன் பொருட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொதுமுடக்கம் நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் நலனில் அரசு தனிகவனம் செலுத்த வேண்டும். ஆகவே அவர்களுக்கென்று ஏற்றுக் கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை மாநில அரசு வகுக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
2021 ஆகஸ்டில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று அரசு செய்த மற்றொரு நன்மையாக அவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் வழங்கும் கல்வி திட்டம் செயல்படுத்த எடுத்த முடிவு ஆகும். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பதில் அளித்த போது அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, மாற்றுத் திறனாளிகள் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு உதவிக் கருவிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைகள் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன்படி இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வண்டிகள், காதொலிக் கருவிகள், பார்வையற்றோருக்கான கருப்புக் கண்ணாடி, ஒளிரும் மடக்கு குச்சிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாற்றுவழியில் தொடர்பு கொள்ளும் சாதனங்கள் உள்ளிட்ட 24 வகையான உதவி உபகரணங்கள் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான நிதி ஆண்டுதோறும் தேவைக்கேற்ப ஒதுக்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தோரை கௌரவிக்கும் விதத்திலான விருதுகள் குறிப்பிட்ட காலகட்டங்களில் முதல்வரால் வழங்கப்படுகிறது. இதற்கென சிறந்த முறையில் சேவை புரிவதற்கான சமூகப் பணியாளர் விருது, சிறந்த நிறுவனம், மறுவாழ்வு அறக்கட்டளை, செவித்திறன் பாதித்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், பார்வைக் குறைபாடு உடையோருக்கு கற்பிக்கும் ஆசிரியர், சுய தொழில் புரிவோரில் சிறந்தவர், பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் ஆகியோர் 2021 டிசம்பரில் பரிசு பெற்றவர்களில் இடம் பெற்றனர். இந்த விருதுகள் ஒவ்வொன்றிலும் 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.
2021 டிசம்பரில் 3-ல் டெல்லி, விக்யான் பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்ட போது, மேடைக்கு வரமுடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேடையிலேயே விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆனால் மேடைக்கு வர முடியாமல் கீழே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களுக்கு குடியரசுத் தலைவரே மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து விருதுகளை வழங்கினார்.
காது கேளாதவர்கள் மற்றும் பெருமூளை பாதித்து அவர்களின் உணர்வுகளை பேச்சு மொழியில் வெளிப்படுத்த முடியாதவர்களின் உதவிக்காக மின்னணு ஸ்மார்ட் கருவிகளை சென்னை ஐ.ஐ.ட்டி கண்டறிந்துள்ளது. காது கேட்கும் திறன் குறைந்தவர்கள், சில குறிப்பிட்ட சொற்களை உள்ளடக்கிய பேச்சுகள் மற்றும் எச்சரிக்கை ஓசைகளை உடனடியாக அறிந்து கொள்ள ஸ்மார்ட் வாட்ச் போன்று கையில் கட்டிக் கொள்ளும் உபகரணம் தான் அது. அந்த மின்னணு உபகரணம் குழந்தை அழும் சத்தம், அலாரம், வீடுகளில் வைத்துள்ள அழைப்பு மணி போன்ற பதிவு செய்யப்பட்ட பொதுவான ஒலிகளை உணர்ந்து அதை வைப்ரேஷன்எனப்படும் அதிர்வலைகள் வாயிலாக வெளிப்படுத்தும். இன்னொரு கருவியானது மூளை பாதிப்பால் பேச முடியாதவர்களின் உணர்வுகளை அவர்களின் கை அசைத்தல் வழியே அறிந்து, அதை அவர்கள் வைத்திருக்கும் மொபைல் போன் செயலி வழியே ஒலிக்கும். இதை மற்றவர்கள் கேட்டு அவர்களின் எண்ணத்தை தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் இதுபோன்ற உபகரணங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கும், அவர்களின் வாழ்க்கை முறைக்கும் போதுமான அளவில் உதவி புரியவில்லை. எனவே இதுபோன்ற உபகரணங்களும் ஐ.ஐ.ட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்கிறார் அங்குள்ள பேராசிரியர் ஒருவர்.
கோயில்கள், கோயில் திருமண மண்டபங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக திருமணத்தை நடத்தி வைக்கும் திட்டம் தமிழகத்தில் உள்ளது.
சென்னையை அடுத்து கட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். ஆக்குபேஷனல் தெரபி (செயல்முறை) கல்லூரியில் 2021 டிசம்பரில் மாற்று திறனாளர்கள் தின விழா நடைபெற்ற போது, மாற்றுத் திறனாளர்களுக்கு உரிய செயல்முறை மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களது இயலாமை குறித்த அச்சத்தை போக்க முடியும். தன்னால் பிறரை போல் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அதன் இணை துணைவேந்தர் குறிப்பிட்டார்.
பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ்) உள்ளிட்ட அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசபயிற்சி அளிக்கிற திட்டம் உள்ளது. சென்னைய தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யவும் திட்டம் உள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4-வது தமிழ் மாநில மாநாடு 2022 செப்டம்பர் நாலாவது வாரத்தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் பேசிய போது மாற்றுத்திறனாளி என்று சுயமரியாதைப் பெயரை சூட்டியவர் கருணாநிதி தான். கெரோனா பரவிய காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்றும் தடுப்பூசி வழங்கப்பட்டது. அதில் 3 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கென 2022-2023 நிதியாண்டில் ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்க உத்தரவிடப்பட்டது. கடுமையான இயலாமை, அறிவுசார் குறைபாடு, தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. சாலை ஓரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்த விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அரசு வேலை வாய்ப்பில்4 சதவீத இட ஒதுக்கீட்டினை அவர்களுக்கு வழங்க ஏதுவாக உயர்மட்டக்குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. கிராமங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் வழங்க தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். சிங்கப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமூக நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பலவகையான மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் 1922 ஏப்ரல் 8-ல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள், வீட்டு மனைப்பட்டா கோரும் மாற்றுத்திறனாளிகளின் விபரங்களைத் தொகுத்து வருவாய்த் துறையினரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் வழங்க தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமூக நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பலவகையான மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் 1922 ஏப்ரல் 8-ல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள், வீட்டுமனைப் பட்டா கோரும் மாற்றுத்திறனாளிகளின் விபரங்களைத் தொகுத்து வருவாய்த் துறையினரிடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்களை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பும் படி மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, கரூர், திருவாரூர், ஈரோடு, சேலம் ஆகிய 17 மாவட்டங்களில் மொத்தம் 696 மனுக்கள் பெறப்பட்டன.
சமூக நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பல வகையான மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் 2022 ஏப்ரலில் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள் வீட்டுமனை பட்டா கோரும் மாற்றுத் திறனாளிகள் விபரங்களைத் தொகுத்து வருவாய்த் துறையினரிடம் சமர்ப்பிக்கஅறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்களை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து அரசுக்கு உடனடியாக அனுப்பும் படி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, கரூர், திருவாரூர், ஈரோடு, சேலம் ஆகிய 17 மாவட்டங்களில் மொத்தம் 696 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனை பட்டா வழங்க நடைமுறையில் உள்ள நில ஒப்படைப்பு முன்னுரிமைப் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளைச் சேர்த்து உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆகவே, அதன் அடிப்படையில், மாவட்ட வாரியாக வீட்டுமனை பட்டா கோரும் மாற்றுத் திறனாளிகளின் மனுக்களைப் பெற்று அவற்றின் மீதுதகுந்த நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயணம் செய்யும் வகையிலான பேருந்துகளை கொள்முதல் செய்வதை வலியுறுத்தி, அவர்களுக்கான பல்வேறு அமைப்புகளின் சார்பில் 2023 மார்ச் மூன்றாம் வாரத்தில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் குறித்த வழிமுறைகளை பின்பற்றுதல் பற்றி தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் பொதுத் தேர்வின் போது அவர்களுக்கான சலுகைகள் முறையாக தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வித மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும் தரைத்தளத்தில் மட்டுமே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு கூடுதலாக ஒருமணி நேரம் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
செவித்திறன் குறைபாடுடைய மற்றும் டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களின் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிறமையால் அதன் விபரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
Leave a Reply