கடிதம் கண்டீரா?
  • By Magazine
  • |
மதிப்பிற்குரிய ஆசிரியர் பெரும்தகை அவர்களே ஒருவர் எதைக் கற்றுக் கொள்ளவில்லையோ அதை பயிற்றுவிப்பது மட்டும் கல்வி அல்ல. நாம் எப்படி இல்லையோ அப்படி மாற்றுவது தான் கல்வி என்பதை நீங்கள் உணர்வீர்கள். பாடநூலை மட்டும் கற்றுத்தரும் இயந்திரமாக செயல்படாதீர்கள். மாறாக வாழ்க்கை கல்வி வாழ்க்கை மூலம் மற்றும் வாழ்க்கை முழுவதும் கல்வி என்னும் நுணுக்கங்களை கற்றுத்தாருங்கள். ஒரு பறவைக்கு வேண்டிய தீனியை அதை பார்த்து எறிந்தால் அந்த பறவை பறந்து போவதில்லை மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து அந்த […]
Read More
ஆண்களை விட பெண்களின்ஆயுட்காலம் அதிகம்… உண்மையா…?
  • By Magazine
  • |
அதிக  ஆயுள்  உள்ள  பெண்கள்.. பெண்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள். நீண்ட காலம் வாழ்வதில்லை இப்படி ஒரு பொதுக்கருத்து நிலவி வருகிறது இது உண்மையா? இல்லை. உண்மையே இல்லை. பெண்களுக்கு மெதுவாக வயதாகிறதா?  ஆம் என்பதே உண்மை. ஆனால் ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். இதனை விட முரண்பாடாக  பெண்களுக்கு இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், ஆண்களை விட ஒட்டுமொத்த உடல் நோய்களின் விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களின் வாழ்நாள்… மனிதனின் வாழ்நாளைக் கணக்கிட்டால், […]
Read More
மக்களின் பயத்தை போக்குவதற்காக பஜனை பாடினேன்
  • By Magazine
  • |
ஆசான் கோலப்பன் அவர்கள் பேட்டி கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் கோலப்பன் ஆசான் அவர்கள். புதிய தென்றலுக்காக அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தோட்டத்தில் சுறுசுறுப்பாக இளைஞரை போல வேலை செய்து கொண்டிருந்த சிலம்ப ஆசான் கோலப்பன் அவர்களை சந்தித்தோம். அப்போது அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
ஓடி ஒளியும் எதிர்தரப்பினருக்கு சம்மன் வழங்கும் முறை Civil (உரிமையியல்) வழக்குகளில் பிரதிவாதிகள் வாதியின் சம்மனை வாங்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பர். சம்மன் வாங்கினால் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். ஆதலால் சம்மன் வாங்காமல் ஓடி ஒழிந்து கொண்டிருப்பர். வாதிக்கோ, பிரதிவாதிக்கு சம்மன் கொடுத்தால் மட்டுமே அவர் இடத்தில் பிரதிவாதி கட்டுமானம் செய்வதை தடை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சம்மன் பிரதிக்கு வழங்கப்படாததால் வாதி மிகவும் மன உளைச்சலில் இருப்பார். இப்பேர்பட்ட சூழ்நிலைகள் […]
Read More
‘வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
கைக்கிட்டிக்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான தும்மிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைக்கிட்டிக்காலம் பற்றி அறிவோம். “பார் சிப்பி கீழ்வாறின் பக்க சார்வில் பரிவான கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம குருநூல் “……………….. தும்பிக்காலம் நின்றதன் நாலிறையின் கீழ் கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம கடிகார நரம்புச்சூத்திரம் மேலும், கொள்ளும் கைகெட்டிக்காலம் கொண்டால்                 குருவருளால் குறியதினை கூறக்கேளு            விள்ளும் வாய்பிளந்து நீர் பாயுமப்பா                 வெகுவான […]
Read More
உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை
  • By Magazine
  • |
பயணக்கட்டுரை – கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும்  வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார்  சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது  நான்  மகிழ்ந்தேன். முப்பது வருடத்திற்குப் பிறகு கோழிக்கோடு மண்ணில் கால்பதிக்கப் போகிறோம் என்ற மிதப்பு என்னை மகிழச் செய்தது. பத்தாம் வகுப்பு  ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து  விடுமுறைகாலத்தில் விளையாடும் போது எனக்கும் தம்பிக்கும்   ஓயாமல் சண்டை நடப்பதை சமாளிக்க முடியாத அம்மா  என் உறவினர் ஒருவரோடு  கொத்தன், கையாள் வேலைக்கு  […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம். “ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம் தும்மி என்ற வர்மம்”.                                                                                – வர்ம குருநூல் “வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ் தும்மிக்காலம்”. – வர்ம அகஸ்தியசாரி “பண்பான தும்மியதன் காலம் கேள் தொடரான பித்துக்காய் பிறமேதானே”.                                                                                                – கால வர்மநூல் மேலும், போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்                                 […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More