– சஜிபிரபு மாறச்சன்
“கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிதை
சிற்பிக்கு தொடுவதெல்லாம் சிலை. எழுத்தாளனுக்கு எதுவும் கரு. வியாபாரிக்கு எல்லாம் லாபம்” என்பனவற்றை போல«, வறுமையில் தவிப்பனும் எப்படியும் சாதிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் நமது கடமையைச் செய்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை தூக்கியெறிந்து விட்டு உழைக்கத் தொடங்கினாலே, நமது பொருளாதார நிலை உயர்ந்து, சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முடியும்.
சிலர் நம்மால் அவனைப் போல படிக்க வசதியில்லையே என்று ஏங்குவதுண்டு. நன்றாக படிக்க முடியாத ஏழைகளா நீங்கள்? கவலையை விடுங்கள்.
வறுமையிலேயே தன் பிறப்பை எண்ணிக் குறை சொல்லிக் கொண்டு சோம்பேறிகளாய் திரிபவர்களைக் கூட, உசுப்பேற்றி சாதனை மன்னர்களாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் இந்த சாதனை.
ஏதோ வறுமையுடன் பிறந்தோம். உண்டோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம் என்று மற்ற உயிர்கள் போலில்லாமல் பகுத்தறிவு கொண்ட மனிதனாக நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, வறுமையை விரட்டி வளமான வாழ்வு வாழ்வதற்கு சாதனையை ஒரு பிடிப்பாக கொண்டு வாழ்ந்து சாதிப்போமே. நாம் வாழ்ந்து சென்றதற்கான ஆதாரங்களை பதிவுகளை நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் விட்டு செல்வோமே!
நானும் நாலுபேர் மாதிரி தானே பிறந்தேன்! ஏதோ வாழ்ந்து வாழ்க்கையை நடத்தாதீர்கள்! கடந்து போன நேரமோ, காலமோ கூட வராது. நேரம் தவறினா கூறியது தான். முதுமையில் வாழ இளமையிலேயே கொஞ்சம் சேர்த்து வையுங்கள். அன்று சம்பாதித்து அன்றே மொத்தத்தையும் செலவு செய்யாதீர்கள். கூடவே வாழ்ந்ததற்கான தடயங்கள் விட்டு செல்லுங்கள். பிறப்பு எடுத்தது சும்மா சாப்பிட்டு விட்டு, கதை பேசுவதற்கு அல்ல. சரித்திரத்தில் இடம் பெயர்வதற்கு வரலாற்று ஏடுகளில் உங்கள் பெயரை பொறிப்பதற்கு சாதனை நாயகனாக உலா வருவதற்கு! பல வெற்றிகளை கொட்டிக் கொடுக்க வெற்றிமகள் உங்கள் கூடவே வாசம் செய்யட்டும்.
Leave a Reply