கவிஞர். E.K. சுப்பையாகம்பர்
மனிதர்கள் தங்கள் செயலுக்கும் தொழிலுக்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் தன்னை தானே தன் மனதை சீர்திருத்தி கொண்டால் இறைவனை அறியலாம்.
பிரபஞ்சத்தை கைகளால் வளைத்து பிடிக்க முடியாது. ஆனால் உண்மை பக்தியால் அரவணைத்துக் கொள்வது எளிதான காரியம்.
ஆன்மாக்கள் தனித்தனியாக இருந்தாலும் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு இருந்தாலும் இறைவனை பக்தி கண்ணோடு பார்த்தால் தியானம் என்பது தனியாக அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் தியானம் செய்வது உண்மை தியானம் அல்ல.
சாலை மேடு பள்ளமில்லாமல் ஒரே சீராக இருந்தால் வாகனம் குலுங்காமல் ஓடும். வாகனத்திலிருப்பவர்களின் பயணம் சுகமாக இருக்கும். அதே போல் அன்றாட வாழ்க்கைக்கும் சரி நம்முடைய மனதிற்கும் சரி வருமானத்திற்கேற்ப செலவு செய்தால் குடும்பம் தள்ளாடாது. வரவுக்கு மிஞ்சி செலவு செய்தால் துன்பமும், துயரமும் தான் மிஞ்சும்.
தோல்வியை கண்டு துவளாமலும் வெற்றியில் இறுமாப்பு அடையமாலும், அச்சம், வெறுப்பு, கோபம், பொறாமை இவை மனதின் தன்மையை துளைத்து விடும். சாதனையை நிகழ்த்துவது ஆர்வம் இல்லாவிட்டால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. நாம் மனநிலையை ஒற்றுமை என்னும் மனத்தை கொண்டு வர வேண்டும்.
அறிவையும், ஆர்வத்தையும்ஒரே எண்ணத்தில் கொள்ள வேண்டும். அதுவே மனித ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கும். மனித எண்ணத்திற்கும் மனோபாவத்துக்கும் தொடர்புயிருக்கிறது. ஆர்வம், விடாமுயற்சி இருந்தால் மட்டும் போதாது. நாம் மனித ஒற்றுமையை செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை வேண்டும்.
நல்ல எண்ணத்தோடு பழகினால் அவர்களும் உங்களோடு அன்பாய் பழகுவார்கள். முதலில் நீங்கள் மனித ஒற்றுமையை காக்க வேண்டும். ஆக்கம், துணிவு, எளிமை போன்ற பண்புகள் வேண்டும். தோழமை, விட்டுக்கொடுத்தல், பாராட்டுதலும் போன்றவை தான் ஒரு மனிதனை உயர்நிலைக்கு கொண்டு போகும்.
நான் தகுதியானவன் என்னால் நேர்த்தியாகச் செயல்பட முடியும். என்னால் தாக்குபிடிக்க முடியும். எதையும் நான் எதிர்கொள்வேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எண்ண வேண்டும். நீங்கள் இதை திரும்ப திரும்ப எண்ணும் போது புதிய எழுச்சி உங்கள் மனதிற்கும் தெரியவரும். எதிர்மறை எண்ணத்தை மாற்ற வேண்டும். சவால்கள், நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.
அழகு பொருள்களில் இல்லை பார்ப்பவர்கள் கண்ணில் இருக்கிறது. அப்படி தான் மனிதனின் வாழ்க்கை மகிழ்ச்சி முகத்தில் தெரியும். சொல்லுகின்ற சொல்லில் இருக்கிறது. செயல்களில் வெளிப்படும். இச்செயல்களை ஞானிகள் உணருகிறார்கள். வற்றாத நீருற்றாய் உங்களுக்குள் ஊறிக் கொண்டிருப்பது அன்பு. ஆகவே அனைவரிடமும் அன்பை விதையுங்கள்… பெருகட்டும் அன்பு… மறையட்டும் சுயநலம்…
Leave a Reply