வட்டக்கும்மி கொட்டுங்கடி கொட்டி ஆடுங்கடி பொங்கலிலே
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஊர்க்கிழவி தலைமையில் அம்மன் பாட்டுக்கு வட்டக்கும்மி கொட்டும் கோயில் முற்றம் காவேரிப் பொங்கும் கொள்ளிடத்து ஆற்றுக்குள்ளிருந்து கருங்காளைகளைக் கழுவித்துடைத்து வண்டிபூட்டி வரும் பூலான்தேவியின் அப்பா கோவில் சுற்றுச் சுவரில் ஏற்றியிருந்த திருவள்ளுவன் பார்க்க செவ்வந்திபூச் சடை பின்னிய இளையவள் குறும்புக்காரி காணும் பொங்கலில் குரவையிட்டு ஆடுகிறாள் ஆடுகிறாள் அவள் அம்மையும் பாட்டியும் அண்டைவீட்டு மாமியும் ஆடி துடியேறி மயங்கிச் சரியும் பெண்டிரின் மருங்கைப் பிடித்து தூக்கி நிறுத்தும் வீராங்கணை தொடை தட்டிச் சிரிக்கிறாள் […]
Read More
புதியதென்றல்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சுதந்திரப்போர்ப் புயலினிலே தியாகம் செய்தோர்                 சூழ்நிலையில் அமைதியினைச் செய்த நேரம் இதமான விடுதலையின் தென்றல் காற்று                 இந்தியமண் மீதினிலே வீசலாச்சு; முதன்முதலில் நறுமணத்தோ டிங்கே வீசி                 முற்றான இன்பத்தைத் தந்த தென்றல் எதனாலோ சிறிதுசிறிதாக மாறி                 இனியமணம் தனையிழந்து வீசு தின்று! மதசாதி இனபேதம் கலந்தாலோ                 மனிதமெனும் நேயம்தான் குறைவதாலோ சதகோடி நிதிசிலரும் குவிப்ப தாலோ                 சாக்கடையாய் அரசியலும் ஆனதாலோ வதம் செய்யும் வன்முறைகள் நிறைந்தாலோ […]
Read More

  • By Magazine
  • |
உனை கொன்றொழித்து விட்டுத்தான் மறுவேலை ஆம் கொலைக்களத்தை முடிவு செய்துவிட்டேன் ஆயுதங்கள் தேர்வாகிவிட்டன உனை கொலை செய்து விடுகிறேன் பார் விரைவில் நீயில்லாமல் போவாய் எனது சொற்களை தின்று அரித்து விடுகிறாய் எனது இதயத்திற்குள் புகுந்து கரண்டுகிறாய் உனை அழித்தொழித்து விட்டுத்தான் மறுவேலை அழிக்க கையெடுக்கும் போதெல்லாம் எனது நல்ல சொற்களின் இடுக்குகளில் ஒழிந்து கொள்கிறாய் ஆம் நீயொரு பாச்சைதான் உனை அழிப்பதொன்று அவ்வளவு சிரமமில்லை பாச்சை எதிரிதான் துரோகிகள் ஒட்டுண்ணியைப் போன்றவர்கள் நமது ‘மன்னிப்பு’ இடுக்குகளில் […]
Read More
  • By Magazine
  • |
S. லெட்சுமி தங்கம் பாலகிருஷ்ணன். காரவிளை தேன் அருவியாய் பிறந்து தத்தும் அலை யென தவழ்ந்து புன்னகை பூ சொரிந்து அனுப்புகிறோம் 2025 ஐ. வாரீர் வாரீர் இவ்வையக செல்வங்களே!!! பாரீர் பாரீர் சிங்கமென புறப்பட்ட 20 26 ஐ!! செங்கதிரோன் காலையில் மெதுவாக கண்விழிக; செம்மாங்கு பாடியே பறவைகள் பாட்டடிசைக்க.; மானியமும் மீனினமும்; நடனமாடி மகிழ்ந்திருக்க!! செவ்வனே மெல்ல மெல்ல நடை போட்டு மெதுவாய் பிறந்தது புத்தாண்டு!!! மேகமெனும் இரும்பு கதவை திறந்து வந்தான்; செவ்விதழ் […]
Read More
காந்திவழி நடப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சத்திய சோதனையில் சாத்தியம் வெற்றி என்றே நித்திய வாழ்வில் காட்டி நீண்டநாள் வாழ்ந்தார் காந்தி புத்தியை வாய்மை ஆள                 புலன்களை அகிம்சை ஆள கத்தியின் குருதியின்றிக்                 களத்தினில் வென்றார் காந்தி எத்தனை இடர்வந்தாலும்                 எதிர்ப்பவர் நாணும் வண்ணம் சத்தமாய் பேசிடாமல்                 சாந்தமாய் வென்றார் காந்தி நித்தமும் ராட்டை சுற்றி                 நெய்தநல் கதராடைதான் ஒத்தது நம்நாட்டுக்கென்று                 உரைத்தயல் உடை நீக்கிட்டார். இத்தரை போற்றும் வண்ணம்                 எளிமையின் […]
Read More
மனம் எனும் மாயை
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் நீல மலைச்சரிவுகளின் பசிய மரங்களை முட்டும் மேகங்கள் வெட்கம் சுமக்கின்றன. மலையையும் தன்னையும் சுமந்து ஓடிக்கொண்டிருக்கின்றது ஆறு அதன் உள்ளொளியாய் எரிந்துக்கொண்டிருக்கும் ஆழமோ நீரின் மேலே  மெல்ல ஊர்கின்றது தெங்கம் பழங்கள் மிதந்து செல்வதைக் கண்கொள்ளும் குரங்குகள் தங்களுக்குள் நினைவுகளைப் பேசிக் கொள்கின்றன. நீரின் முகமும் நீந்தும் மனமும் தொட்டுக்கொள்ளும் கணத்தில் பிறக்கின்றது பிரபஞ்சத்தின் ஓர் அழகியக் குழந்தை அமைதியின் தாய்ப்பாலை வாய்உறிஞ்சும் அதன் மென்சிரிப்போ சுடரும் மலைமேல் இன்னொருச் சுடராகச் சுடர்கிறது. அவ்வாறே […]
Read More
வேகத்தின் விலை
  • By Magazine
  • |
வேகத்தின் விலை பயணம் என்ற நோக்குடன், பயணித்தன பல உயிர்கள்… பயணிகளின் பாதுகாப்பு ஓட்டுனரின் கால் கைகளில்… சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள், வளைவுகளில் முந்தாதீர் பதாகைகள், மித வேகம் மிக நன்று அறிவிப்புகள்… இருந்தும்__ வேகம் கூட்டியதன் விளைவு பறிக்கப்பட்டன பல உயிர்கள்… வேகத்தை விவேகத்துடன் கையாண்டால், தவிர்கப்படுமே உயிர் பலியாகும் தருணங்கள்… செ.பராந்தகன்
Read More
அரசியல் திட்டங்கள்!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வலது கைகொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு… அதை மதித்து அனைத்தையும் பதுக்கிவிட்டார் அடுத்த மக்கள் தெரியக்கூடாது என்று… இது அரசியல் சான்றோர்களின் சதிகாரத் திட்டம்.
Read More
மதுவின் நடனம்
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வீட்டுக்குள் பாட்டில்களின் ஊர்கோலம் பசியில் துடிக்கும் குழந்தைகளின் முன் டாஸ்மாக்கின் சாகஸம்.
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் உடலில் குறைகள் இருந்தாலும்                 உள்ளத்துள்ளே நிறைந்திட்ட திடமாம் அன்பால் வெல்லுகிற                 திறத்தோர் மாற்றுத் திறனாளி கடலின் அளவுக் கருணையினைக்                 காயம் முழுதும் கொண்டவர் தாம் உடனே உதவும் பண்பாலே                 உயர்ந்தோர் மாற்றுத் திறனாளி முடவராக இருந்தாலும்                 முகத்து நகையின் அரவணைப்பால் முற்றாய் நம்மை ஆட்கொள்ளும்                 முதிர்ந்த மனத்தோர் அவரே தாம் முடக்கம் நாவில் இருந்தாலென்?                 முத்தாள் ஒளிரும் அவர் விழிகள் சுடராய் நேய மொழியுரைக்கும்                 […]
Read More