கே.பி.பத்மநாபன்
உடலில் குறைகள் இருந்தாலும்
உள்ளத்துள்ளே நிறைந்திட்ட
திடமாம் அன்பால் வெல்லுகிற
திறத்தோர் மாற்றுத் திறனாளி
கடலின் அளவுக் கருணையினைக்
காயம் முழுதும் கொண்டவர் தாம்
உடனே உதவும் பண்பாலே
உயர்ந்தோர் மாற்றுத் திறனாளி
முடவராக இருந்தாலும்
முகத்து நகையின் அரவணைப்பால்
முற்றாய் நம்மை ஆட்கொள்ளும்
முதிர்ந்த மனத்தோர் அவரே தாம்
முடக்கம் நாவில் இருந்தாலென்?
முத்தாள் ஒளிரும் அவர் விழிகள்
சுடராய் நேய மொழியுரைக்கும்
சுவையாய் அஃதில் தமிழ் மணக்கும்!
உடலில் குறைகள் இருந்தாலும்
உயர்ந்த ஞானம் இருப்பதனால்
திடமாய் வெற்றி பலகண்ட
திறனாளிகள் தாம் என்றறிக
நடமாடும் நல் இறைகளவா
நம்பிக்கையின் சிகரமவர்
தடம் பதிப்பில் வல்லவர் தாம்
தரையில் மாற்றுத் திறனாளி!
Leave a Reply