இனிய புத்தாண்டு வாழ்த்து

  • By Magazine
  • |

S. லெட்சுமி தங்கம் பாலகிருஷ்ணன். காரவிளை

தேன் அருவியாய் பிறந்து தத்தும் அலை யென தவழ்ந்து

புன்னகை பூ சொரிந்து அனுப்புகிறோம் 2025 ஐ.

வாரீர் வாரீர் இவ்வையக செல்வங்களே!!!

பாரீர் பாரீர் சிங்கமென புறப்பட்ட 20 26 ஐ!!

செங்கதிரோன் காலையில் மெதுவாக கண்விழிக;

செம்மாங்கு பாடியே

பறவைகள் பாட்டடிசைக்க.;

மானியமும் மீனினமும்;

நடனமாடி மகிழ்ந்திருக்க!!

செவ்வனே மெல்ல மெல்ல நடை போட்டு மெதுவாய் பிறந்தது புத்தாண்டு!!!

மேகமெனும்

இரும்பு கதவை திறந்து வந்தான்;

செவ்விதழ் கதிர்களை

ஈட்டியாய் வீசி வந்தான்;

பொன்னிறம் கொண்டு புன்னகை பூத்து வந்தான்;

நாடு செழிக்க வேண்டும்!

நல்லாட்சி நடக்க வேண்டும்;

நல்ல நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும்;

நன்சைய்யும் புன்சைய்யும் செழிக்க வேண்டும்;

நல்லருளை இறைவனும் தர வேண்டும்!!

வானம் என்ன வானம் அதை தொட்டிட வேண்டும்;

வையகமே வாழ்வாங்கு வாழ வேண்டும்!!

சீர் கெடுக்கும் தீமைகள் அழிய வேண்டும் ; 

சீர்திருத்த இந்தியாவாக வேண்டும்!!

இன்பமாய் நாம் வாழ;

இமயம் தொட்டு வரவேற்கிறோம்!!!

புதிய தென்றலே வருக வருக!!!

புன்னகை வீசி வீசி மலர்க!!! 2026!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *