– குமரி எழிலன்
திருவள்ளுவர் ஒரு உலகமனிதர்.
திருக்குறள் ஒரு உலக இலக்கியம்
திருக்குறள் மத அடையாளங்களுக்குள் சிக்காத ஒரு அற்புதம்..
ரஷ்ய அறிஞர் அலக்சாண்டர் பியார்ட்டிகோர்ஸ்கி..
இந்திய மற்றும் உலக இலக்கிய தரவரிசையில் தலைசிறந்த நூல் திருக்குறள்…. என்கிறார்.
திருக்குறள் மனித ஆற்றலைக் கொண்டாடும் மாபெரும் படைப்பு.. ஆம்
உழவுத்தொழிலின் உன்னதம்
வாழ்வியல்போற்றும் இல்லறம்
தீதின்றி வரும் பொருளறம்
பொதுமறையல்ல பொதுமுறை
மந்திரமோ தந்திரமோவல்ல வாழ்க்கைச் சித்திரம்.. சமூக பொருளா”தார உளவியல் சூழலியல் குறித்த வாழ்க்கைப் புத்தகம்..
என்கிறார்…. தமிழ்வழியில் ஆட்சியர் தேர்வில் வென்று முதன்முதலில் ஆட்சியரான ஆர். பாலகிருஷ்ணன்..
இன்று….
“இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு..”
எனும் 1048 வது குறள் குறித்து எழுதுகிறேன்..
“இன்மையின்இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது”.. எனும் 1041-வது குறள் நல்குரவு அதிகாரத்தின் தொடக்கக்குறள்.. ஆம்..
வறுமை குறித்த வள்ளுவனின் உரத்த குரல்.
கொலை செய்வதுபோல் நேற்றுக் கொடுமைப்படுத்திய இன்மை தொடர்ந்து இன்றும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.. எனில் எப்படித் தூங்குவான்.. என்று கவல்கிற வள்ளுவ மறையோன்..
“நெருப்பிலும் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது” என்கிறார் 1049-வது குறளில்.
நல்குரவு என்பதில் நல் என்பது நலிந்த எனும் பொருளில் வருகிறது
நல்லகாச்சல் என்றால் மிகுந்த காய்ச்சல் எனும் பொருள்தரல் ஒப்பு நோக்கற்பாலது
குற்றப்பட்டார் மேலும் குற்றப்பபடுவதும்
மிடிப்பட்டார் பின்னும் மிடிப்படுவததும் மெலிவுற்றார் மீண்டும் மெலிவுறலும்
துன்பம் சுமந்தார் மேலும் துன்பம் சுமப்பதுமம்… உலகப்போக்காக கண்ட வள்ளுவர்… குற்றப்பட்டார் திருநிதியால் குணப்படலும், வறுமைப்பட்டார் முயன்று வாழ்வுப்படலும் மெலிவுற்றார் ஊக்கி வலிவுறலும்
துன்புற்றார் சிரித்து இன்புறலும்… இனி உலகக்காட்சியாக மாறவேண்டும் என்று திட்பம் கொண்ட வள்ளுவர், தாழ்ந்தாரை உயர்த்த எணண்ணியே இக்குறளை யாத்துள்ளார்.
கொள்ளாற்றல் இன்மையே வறுமை எனப்படும்..
பொதுவுடைமை வந்தால் வறுமை ஒழியும் என்கின்றனர் திரு வி க வும் வ. சுப. மா வும்
அது.. நாட்டுப் பொதுவுடைமையன்று உலகப்பொதுவுடமை என்கிறார்கள் இவ் அறிஞர்கள்…
நல்குரவு குறித்து..
இன்மையின் இன்மையே இன்னாதது(1041)
இன்மை எனவொருபாவி (1042)
அறம்சாரா நல்குரவு(1047)
என ….வள்ளுவப்பெருந்தகை வருத்தம் மீதூரப்பாடுவார்..
நெய்யூர்தி ஏறினார் வண்டியேறுதல்
வண்டியூர்ந்தார் நடத்தலையும் நல்குரவென்னாமல்.. இவற்றை நலக்குறைவு என்க என்கிறார் வ. சுப. மா.
உயிரனைத்திற்கும் வயிற்றுப்பிணியே
அதன் விளைவாய பசிப்பிணியே நல்குரவு
என்று உறுதிபடக்கூறலாம்
பசிதீர்த்தற்கு யார்மாட்டும் இரத்தல் நெறியன்று..
இரக்கத்தக்கார் காணின் இரக்கலாம் எனகிறார்.
பசிப்பிணி நீக்க சங்க இலக்கியங்களும்
மணிமேகலைக் காவியமும்
தனியொருவனுக்கு உணவில்லையெனின் சகத்தினை அழித்திடத் துடித்த பாரதியும்
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரும் நல்குரவு சொன்னவற்றை உணர்ந்து எழுதினர் செயல்பட்டனர்..
கொடுத்துவாழவேண்டும் முடியவில்லையேல் கொடுப்பாரைக்கெடுத்து வாழக்கூடாது..
பத்துமணிக்குச்சென்று இரந்தால்
இன்னும் சமையல் தொடங்கவில்லை
பதினொரு மணிக்கு
இன்னும் சமையல் முடியவில்லை
பன்னிரண்டு மணிக்கு அடுப்பும் துடுப்பமா இருக்கறேன்..
ஒரு மணிக்கு இப்பதான் சாப்பிடப் போறோம்
இரண்டு.. இன்னும் உண்பார் உண்டு..
மூன்றுமணி.. தீர்ந்துவிட்டது மிச்சமில்லை..
இந்த இடத்தில் இரப்பான் வெகுளாமை” வேண்டுமென்கிறார்….
ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோரிடம் இரக்க என்கிறார் ஆசான்..
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்பதில் ஆத்திகர்க்கு இறைவன் நாத்திகர்க்கு உழைக்கும் தொழிலாளி.. ஆம் நீ உழைத்து இந்த உலகம் உருவாகியுள்ளது உன்பங்கைக்கோட்டை விடுதல் முறையோ.. வென கூக்குரலிடுகிறார் முப்பால் வித்தகன்
முக்காலமும் உணர்ந்து எக்காலமும் வாழ்கிற வள்ளுவப் பெருந்தகை.
நிறைய சம்பாதி
நிறைய செலவு செய்
நிறைய மாசுப்படுத்து
இது வெளிநாட்டு வாழ்க்கை…
குறைவாக உற்பத்திசெய்
குறைவாக நுகர்
குறைவாக மாசுப்படுத்து
இநு நம்நாடு
ஆனால் வறறுமைநிலைகக்கு இடம்” கொடாதே.
இலமென்று அசையி இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்
ஜெட் வாஙகினால் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்.. னான் ஒருத்தன்
சீக்கிரம் போய் என்ன செய்யப்போற
டீவி பார்ப்பேன். சீக்கிரமாய்ப் போய் கண்ணைக்கெப்பதைவிட மெதுவா நடந்து போய் உடலை வலுப்படுத்து என்றானாம்..
வள்ளுவன் வழியில் ஔவ்வைப் பாட்டியும்
“கொடியது எது எனும் வினாவி”ற்கு
கொடிது கொடிது வறுமைக்கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை.. என்கிறாள்..
பொருளில்லார்க்கு இவ் உலகமில்லை.
ஆனால்
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற கூற்றின்படி இன்மை வறுமை என்பது செயற்கையானது
இயற்கை வளத்தை பதுக்கல் செய்யயாமல் எல்லோர்கும் பொதுவில் வைத்தால் பிற கிரகங்களில் உயிர்வாந்தால் மிச்சில் மிசைவான் போல் மிச்சில் ஈயும் தன்மை இருக்கிறது..
திரு வி. க நவில்கிறார்
விதை மீண்டும் விதையாவதுபோல் பழைய சமதர்ம வாழ்வு மீண்டும் உருவாகும்
பழம்பெரும்காலத்தில் உலகம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் சமதர்மவவழியில் இயங்கி வந்தது
செயற்கை வாழ்வு முதிர முதிர சமதர்மம் சாய்ந்து எதேட்சதிகாரம் வந்தது மீண்டும் சமதர்மம் வரும். இயற்கை நியதி..
படட்டுக்கோட்டை பாடியதுபோல்
இருப்பதுஎல்லாம் பொதுவாப்போனா பதுக்குற வேலையும் இருக்காது பிறர் எடுக்குற வேலையும் இருக்காது..
ஆம் மக்கள் இரக்கிற பசியால் இறக்கிற நிலையும் இருக்காது..
Leave a Reply