– கே.பி.பத்மநாபன்
சத்திய சோதனையில்
சாத்தியம் வெற்றி என்றே
நித்திய வாழ்வில் காட்டி
நீண்டநாள் வாழ்ந்தார் காந்தி
புத்தியை வாய்மை ஆள
புலன்களை அகிம்சை ஆள
கத்தியின் குருதியின்றிக்
களத்தினில் வென்றார் காந்தி
எத்தனை இடர்வந்தாலும்
எதிர்ப்பவர் நாணும் வண்ணம்
சத்தமாய் பேசிடாமல்
சாந்தமாய் வென்றார் காந்தி
நித்தமும் ராட்டை சுற்றி
நெய்தநல் கதராடைதான்
ஒத்தது நம்நாட்டுக்கென்று
உரைத்தயல் உடை நீக்கிட்டார்.
இத்தரை போற்றும் வண்ணம்
எளிமையின் உயர்வைக் காட்டி
உத்தமராக வாழ்ந்தே
உயர்ந்தவர் அண்ணல் காந்தி
இத்தகு மனித தெய்வம்
இந்திய மண்ணில் தோன்ற
எத்தனை தவம் செய்தோமோ?
இவர்வழி போற்றி வாழ்வோம்.
Leave a Reply