வேகத்தின் விலை
பயணம் என்ற நோக்குடன்,
பயணித்தன பல உயிர்கள்…
பயணிகளின் பாதுகாப்பு ஓட்டுனரின் கால் கைகளில்…
சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள்,
வளைவுகளில் முந்தாதீர் பதாகைகள், மித வேகம் மிக நன்று அறிவிப்புகள்…
இருந்தும்__
வேகம் கூட்டியதன்
விளைவு
பறிக்கப்பட்டன பல
உயிர்கள்…
வேகத்தை விவேகத்துடன் கையாண்டால்,
தவிர்கப்படுமே உயிர்
பலியாகும் தருணங்கள்…
செ.பராந்தகன்
Leave a Reply