காந்திவழி நடப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சத்திய சோதனையில் சாத்தியம் வெற்றி என்றே நித்திய வாழ்வில் காட்டி நீண்டநாள் வாழ்ந்தார் காந்தி புத்தியை வாய்மை ஆள                 புலன்களை அகிம்சை ஆள கத்தியின் குருதியின்றிக்                 களத்தினில் வென்றார் காந்தி எத்தனை இடர்வந்தாலும்                 எதிர்ப்பவர் நாணும் வண்ணம் சத்தமாய் பேசிடாமல்                 சாந்தமாய் வென்றார் காந்தி நித்தமும் ராட்டை சுற்றி                 நெய்தநல் கதராடைதான் ஒத்தது நம்நாட்டுக்கென்று                 உரைத்தயல் உடை நீக்கிட்டார். இத்தரை போற்றும் வண்ணம்                 எளிமையின் […]
Read More
மனம் எனும் மாயை
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் நீல மலைச்சரிவுகளின் பசிய மரங்களை முட்டும் மேகங்கள் வெட்கம் சுமக்கின்றன. மலையையும் தன்னையும் சுமந்து ஓடிக்கொண்டிருக்கின்றது ஆறு அதன் உள்ளொளியாய் எரிந்துக்கொண்டிருக்கும் ஆழமோ நீரின் மேலே  மெல்ல ஊர்கின்றது தெங்கம் பழங்கள் மிதந்து செல்வதைக் கண்கொள்ளும் குரங்குகள் தங்களுக்குள் நினைவுகளைப் பேசிக் கொள்கின்றன. நீரின் முகமும் நீந்தும் மனமும் தொட்டுக்கொள்ளும் கணத்தில் பிறக்கின்றது பிரபஞ்சத்தின் ஓர் அழகியக் குழந்தை அமைதியின் தாய்ப்பாலை வாய்உறிஞ்சும் அதன் மென்சிரிப்போ சுடரும் மலைமேல் இன்னொருச் சுடராகச் சுடர்கிறது. அவ்வாறே […]
Read More
வேகத்தின் விலை
  • By Magazine
  • |
வேகத்தின் விலை பயணம் என்ற நோக்குடன், பயணித்தன பல உயிர்கள்… பயணிகளின் பாதுகாப்பு ஓட்டுனரின் கால் கைகளில்… சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள், வளைவுகளில் முந்தாதீர் பதாகைகள், மித வேகம் மிக நன்று அறிவிப்புகள்… இருந்தும்__ வேகம் கூட்டியதன் விளைவு பறிக்கப்பட்டன பல உயிர்கள்… வேகத்தை விவேகத்துடன் கையாண்டால், தவிர்கப்படுமே உயிர் பலியாகும் தருணங்கள்… செ.பராந்தகன்
Read More
அரசியல் திட்டங்கள்!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வலது கைகொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு… அதை மதித்து அனைத்தையும் பதுக்கிவிட்டார் அடுத்த மக்கள் தெரியக்கூடாது என்று… இது அரசியல் சான்றோர்களின் சதிகாரத் திட்டம்.
Read More
மதுவின் நடனம்
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வீட்டுக்குள் பாட்டில்களின் ஊர்கோலம் பசியில் துடிக்கும் குழந்தைகளின் முன் டாஸ்மாக்கின் சாகஸம்.
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் உடலில் குறைகள் இருந்தாலும்                 உள்ளத்துள்ளே நிறைந்திட்ட திடமாம் அன்பால் வெல்லுகிற                 திறத்தோர் மாற்றுத் திறனாளி கடலின் அளவுக் கருணையினைக்                 காயம் முழுதும் கொண்டவர் தாம் உடனே உதவும் பண்பாலே                 உயர்ந்தோர் மாற்றுத் திறனாளி முடவராக இருந்தாலும்                 முகத்து நகையின் அரவணைப்பால் முற்றாய் நம்மை ஆட்கொள்ளும்                 முதிர்ந்த மனத்தோர் அவரே தாம் முடக்கம் நாவில் இருந்தாலென்?                 முத்தாள் ஒளிரும் அவர் விழிகள் சுடராய் நேய மொழியுரைக்கும்                 […]
Read More
‘வறுமை குறித்த வள்ளுவம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் திருவள்ளுவர் ஒரு உலகமனிதர். திருக்குறள் ஒரு உலக இலக்கியம் திருக்குறள் மத அடையாளங்களுக்குள் சிக்காத ஒரு அற்புதம்.. ரஷ்ய அறிஞர் அலக்சாண்டர் பியார்ட்டிகோர்ஸ்கி.. இந்திய மற்றும் உலக இலக்கிய தரவரிசையில் தலைசிறந்த நூல் திருக்குறள்…. என்கிறார். திருக்குறள் மனித ஆற்றலைக் கொண்டாடும் மாபெரும் படைப்பு.. ஆம் உழவுத்தொழிலின் உன்னதம் வாழ்வியல்போற்றும் இல்லறம் தீதின்றி வரும் பொருளறம் பொதுமறையல்ல பொதுமுறை மந்திரமோ தந்திரமோவல்ல வாழ்க்கைச் சித்திரம்.. சமூக பொருளா”தார உளவியல் சூழலியல் குறித்த வாழ்க்கைப் […]
Read More
சைவமா? அசைவமா?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் கற்ற கைமண்ணை பாவிச்செல்லும் விதைப்போன் அவன் அவன் நடக்கும் இடங்களில் நாளங்களின் துடிப்புகளைக் கண்டுணரும் அபூர்வங்கள் பூக்கும் அவன் உடலோ மண் வாசனையை தெளிக்கும் மயில் பீலி பார்த்தோர் வியந்தோர் அவனை நுகர்ந்து கொண்டு செல்லும் வாசனைகளில் தங்கள் கோபுரங்களை எழுப்பிக் கொள்வர் இது அன்றாடம்தான் அவனுக்கு ஆயினும் அவனை தன்னருகே வைத்துக்கொள்ளவும் தூக்கிவிடவும் அவர்கள் தங்களிடையே சில பல கேள்விகளை சுருட்டி வைத்திருக்கிறார்கள் அவன் மக்களைப்பற்றிக் கேட்கிறார்கள் அவர்களின் பெயர் படிக்கும் […]
Read More
கடவுள்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் மௌனத்தை செல்பேசியில் ஏற்றிவிட்டு அமர்ந்திருந்தேன், கோவில் வளாகத்தின் கல்லிருக்கையில் என்னருகில் ஒரு முதியவர் வந்தமர்ந்தார் நான் அவரைக் கவனிக்க வில்லை என் மௌனத்தின் கனம் ஏறிக்கொண்டே இருக்கின்றது ஒரு பஞ்சுமூட்டை நீர் குடிப்பதைப்போல மௌனத்தின் துடி கைகொள்ளாதது அல்லவா? என்னவோ தோன்ற அவரைப் பார்த்தேன் கல் இருக்கையின் அந்த ஓரத்தில் அமர்ந்திருந்த அவரோ கொதித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மௌனத்தின் வெக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தார் எனக்கு வியர்த்தது அவரின் எடை நகர்த்த முடியாததாக இருந்தது […]
Read More
சுடர்விடுவோம் மண்மீது
  • By Magazine
  • |
– முல்லைதமிழ் கள்ளிச்செடி மீது புள்ளி வைத்து கானல் இளநீரில் கண்ணி வைத்து வாழையடி வாழையாய் வாய்விரித்து மண்ணில் வளம்போன்ற பெண்மைதனை வாரி வசைபாட ஆயிரம் பேர் போதாக் குறைக்கிங்கு கேளுங்கள் பொல்லாப்பை வல்லான் வகுத்ததென்பான் வழிவழியாய் வந்ததென்பார் காலம் என்பான் கடவுள் என்பான் எல்லாம் இறைசெயல் என்பான் ஏணிக்கும் எட்டாத தூரத்தில் ஏற்றி வைத்துக் கதைபேசி எடுத்து வீசிடுவார் மங்கையரை கற்பென்பான் அதில் காடென்பான் நாடென்பான் காட்டும் அறநூல்கள் அத்தனையும் மங்கையர்தம் கடன் பேசும் ஆணுக்குப் […]
Read More