புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!
  • By Magazine
  • |
– ஓஷோ ஒருமுறை என் பக்கத்து வீட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். வார்த்தைகள் அடங்கிய மனிதர். அவர் ஒரு கார் வாங்கினார். தினமும் காலையில் அதை சுத்தம் செய்வார். அது எப்போதுமே கடையில் இருப்பது போல் புத்தம் புதிதாக, காட்சி¢ பொருளாகவே தானிருக்கும். ஒரு போதும் அவர் அதை சாலைக்கு எடுத்துச் சென்றதேயில்லை. வருடக்கணக்காக நான் அதை கவனித்தேன். தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம் செய்ய அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார். ஒருமுறை நாங்கள் இருவரும் […]
Read More
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.  […]
Read More
விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. கமலேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பேரூராட்சித் துணைத் தலைவர் ஞானஜெபின் மற்றும் கவுன்சிலர்கள் கிரிஜா, பவித்ரா, விஜயலெட்சுமி, ஜேக்கப் ஜெயராஜ், சதீஸ்ணகுமாரி, சுதாபாய், கவிதா, நியமன உறுப்பினர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவீன வசதிகளுடன் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவியல், மதக் கோட்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல்வேறு அறிவாளிகளை பலிகொடுத்துள்ள கொடுங்கதைகள் மேற்கத்திய வரலாற்றில் உண்டு. அவ்வாறு பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் தாண்டி முன்னேறிய அறிவியல் தளம் மேற்கத்திய நாட்டிலிருந்து தொடங்கியதால் அந்த வழி மரபினர்களும் – அவ்வழி மரபினர் சொல்லாட்சிகளுமே இன்றுவரை அறிவியல் உலகின் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், அறிவுத்திறனும், ஆற்றலும் படைத்த கிழக்கத்திய சமூக நாகரீகம் சமயப் பிடிப்புகளிலிருந்து தன்னை பிரித்தறிய முடியாமல் இருந்ததாலும், […]
Read More
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச சூட்டில் இலைகளின் நிறம், மணம், ருசி மாறாமல் கிரீன் டீ எனப்படும் பசும் தேயிலை தயாரிக்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் பச்சைத் தேயிலை போட்டு பால் சேர்க்காமல் பற்களில் சிறிது சிறிதாகப் படும்படி அருந்த வேண்டும். சுக்கு, பட்டை, மிளகு, ஏலம், கிராம்பு, துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  296 -வது கருத்தாய்வுக் கூட்டம் 07.02.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. இராஜன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன். மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இராஜேந்திரா மருத்துவமகை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் நரம்பு பிடிப்பு, எலும்புவலி, கைகால் கோச்சுதல் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார். அடுத்ததாக மரு.கமலகண்ணன் தடவுமுறை தைலம் தயாரிக்கும் முறையையும், இருதய படபடப்பு, வீக்கம், பலவீனத்துக்கு சூரணம் செய்முறை, அதி […]
Read More
மாமனிதர் நல்லகண்ணு
  • By Magazine
  • |
தமிழக அரசியலின் ‘அறம்’ என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அரசியல்வாதிகள் என்றால் ‘சொத்து சேர்ப்பவர்கள்’ என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கோச்சக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைமுட்டு வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கோச்சக்காலம் பற்றி அறிவோம். கைமுட்டின் உட்புறக்கண்ணில் மேல் அருகு பற்றி ஒரு இறையில் கோச்சக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கோச்சல்காலம், கோச்சைக்காலம், கோச்சு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மயங்கும் முட்டின்கண் சார்பில் கோச்சைக்காலம்”.                                                                                 – வர்ம குருநூல் “கைமுட்டின் உள் கண்ணின் மேலருகு                 பற்றி கோச்சுவர்மம்”.                                                 […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் முஸ்லீம் கணவரது இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படமாட்டாது! முஸ்லீம் மத வழக்கப்படி கணவர் நான்கு மனைவி வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வரைமுறை உள்ளது. இருப்பினும் தற்போது கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தில் கணவர் இரண்டாவது திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிய செல்லும் போது சார்பதிவாளர் அலுவலகம் மறுத்து விட்டது. முதல் மனைவியை இங்கு கூட்டி வந்து அவர் ஒப்புதல் தந்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படும் என கணவரையும், […]
Read More
குவாண்டம் தொழில்நுட்பமும் கணினிகளும்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் உலகம் தட்டையானது, பூமியை சூரியன் சுற்றி வருகிறது, நிலவு பூமியை விட பெரிதானது. நட்சத்திரங்கள் நிலையாக இருக்கக்கூடியவை. ஐந்து கிரகங்கள் மட்டுமே இருக்கின்றன என்பன போன்ற பல்வேறு விதமான அனுமானங்கள், அறிவியல் கருத்துக்கள் தோன்றுவதற்கு முன்பு உலகம் எங்கிலும் நிலைத்து இருந்தது. கலிலியோ தொலைநோக்கியை கண்டறிந்ததோடு, பல்வேறு விதமான பௌதிகவியல் கருத்துக்களையும் முன்வைத்தார். அவருடைய காலத்தில் முற்போக்கான பல அறிவியல் கருத்துக்களை முன் வைத்ததற்காகவே பல இன்னல்களையும் அவர் சந்தித்திருக்கிறார். இதெல்லாம் நாம் வரலாற்றின் […]
Read More